இவ்வுலகை நினைத்து வியக்கிறேன் !!! அதிசயங்களை நான் அளக்கிறேன் !!!
விந்தையான இவ்வுலகை கண்டு மெய்சிலிர்க்கிறேன் !!! என்னே இயற்கைத்தாயின் அழகு !!!
சராசரி மனிதனின் வாழ்வில் கடமைகள் தவறுவது உண்டு !!! சூரியனும், சந்திரனும் தன் வாழ்வில் கடமைகள் தவறுவது இல்லை !!! அதனால் தான் என்னவோ அவைகள் இயற்கைத் தெய்வங்களோ ???
என்னென்று சொல்வது இத்தருண பூமியில் நிகழும் அதிசயங்களை !!!
வானில் தோன்றும் விண்மீன்களின் எண்ணிக்கை ஓர் அதிசயம் !!!
எங்கே வருகின்றது எங்கே முடிகின்றது என கூட தெரியாமல் பெய்யென பெய்யும் மழை நீரும்
ஓர் அதிசயம் !!!
வானவில்லில் தோன்றும் ஏழு நிறங்கள் ஓர் அதிசயம் !!!
மழை வரும் முன்னே முன் கூட்டியே வரும் மண் வாசனை கூட ஓர் அதிசயம் தானே !!!
மழை வந்த பின்னர் இறுதியில் கடலில் கலந்து சங்கமம் ஆகும் நீரின் தன்மையும் ஓர் அதிசயமே !!!
இவையெல்லாம் நினைத்து நான் அதிசயிக்கிறேன் !!!
இயற்கையாய் விளங்கும் மழையின் இனிய சாரலில் நான் நனைகிறேன் !!!
இப்படிக்கு என்றும் இயற்கையின் ரசிகன்
ப மனோஜ்