ஒரு நல்ல மனைவியின் சிறந்த சந்தோசம் என்னவாக இருக்கா முடியும்? தன் கணவனை மகிழ்ச்சியுற செய்வதே ஆகும். எனவே உங்கள் அன்பானவரின் உங்கள் காதல் கணவன்,கண்ணாளன், ஆசைநாயகனின் பிறந்த நாளில் உங்கள் வாழ்த்துக்களை சொல்லி அவரை நீங்கள் மனம் குளிர செய்யுங்கள் நண்பியே 🙂
தினமும் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன் உங்களை போல நல்ல கணவன் எனக்கு அமைந்த கொடுப்பினைக்கு…
உங்கள் மனைவியின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் அன்பரே.
கஷ்டம் வந்தாலும் காட்டி கொள்ளாமல் என் மனம் நோகுமோ என்று நினைத்து என்னை பற்றி கவலைப்படும் என் அன்பானவருக்கு இனிய பிறந்த தின வாழ்த்து.
என் மணாளனின் பிறந்த நாளே என் வாழ்க்கையின் மகத்தான சந்தோசம். வாழ்த்துக்கள் கணவரே.
நமக்குள் எத்தனை சண்டைகள், மனஸ்தாபங்கள், வேதனைகள், கோபங்கள் இருந்தாலும் நிகழ்ந்தாலும் என்றுமே பிரிவு என்ற ஒன்று மட்டும் நமக்குள் வந்ததில்லை.
அதுவே நாம் சிறந்த கணவன் மனைவி என்ற இலக்கணத்திற்கு வழி வகுக்கிறது. வாழ்த்துக்கள் என் ஆருயிரே
தந்தை தன் மக்களை காக்கவும் நல்ல படியாக பார்த்து கொள்ளவும் தேர்ந்தெடுக்கும் சிறந்த வாலிபனே “கணவன்”.
அப்படிப்பட்ட என்னவருக்கு அவரின் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
அன்று உனக்கென என்னை தாரை வார்த்தார்கள். இன்று எனக்குள்ளே உன்னை வைத்து நான் காதலை வளர்க்கிறேன்.
என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் புருஷா.
நம் மணவாழ்க்கை இனிக்கும் கரும்பை போல இன்னும் நூறு வருடம் ஆனாலும் கூட தித்திக்கணும் இன்று கொண்டாடும் உங்கள் பிறந்த நாள் போல.
உங்களை பற்றி ஒன்றும் தெரியாமல் மணவறைக்குள் அமர்ந்தேன். இன்று உங்களை பற்றி முழுவதும் புரிய வைத்து என் இல்லறத்தை அழகாக்கி விட்டீர்கள்.
என் சார்பில் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் என் ஆசை நாயகனுக்கு.
வாழ்க்கை சிறக்க வேண்டுமானால் அவசியம் நல்ல கணவன் அமைய வேண்டும். அப்படிப்பட்ட உண்மையான என் கண்ணாளனுக்கு என்னவர் உதித்த சிறந்த தினமான இன்று என் வாழ்த்துக்களை பகிர்வதில் எனக்கு கொள்ளை சந்தோசம்.
என் காதலால் உன்னை தேர்ந்தெடுதேன், மனைவியாக உன்னோடு சங்கமம் ஆயினேன், நம் குழந்தைகளில் அன்னையாக இன்று முழுவதுமாக நம் தாம்பத்ய வாழ்க்கைக்கு அர்த்தம் தேடி கொண்டேன். என்றுமே மனதில் நிலைக்குமாறு நாம் கொண்டாடும் உன் பிறந்த தினம் அமையட்டும். என் காதல் கணவனுக்கு ஹாப்பி பர்த்டே கள்வனே 🙂