அப்பாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | தந்தை பிறந்தநாள் வாழ்த்து மடல்

அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

உலகிலேயே அப்பா எனும் உறவு மற்ற எல்லா உறவுகளையும் விட கொஞ்சம் ஒரு படி மேலே என்றே சொல்லலாம். ஏனென்றால் தந்தை என்பவன் தனது மகன் அல்லது மகளுக்கு ஒரு சிறந்த முன்னோடியாகவும், தலைமை பொறுப்புகள் அனைத்தும் கொண்டவனாக திகழ்வான்.

அத்தகைய அப்பாவுக்கு கண்டிப்பாக அவரது பிறந்த நாளில் வாழ்த்துக்களை சொல்வது என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு பிள்ளைக்கும் கடமை என்றே சொல்லலாம். இந்த பதிவில் உங்கள் அப்பாவை வாழ்த்த உதவும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் பதிவிட்டு உள்ளேன்.

சிறந்த அப்பாவிற்கான பிறந்த நாள் /பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

தனது குடும்பத்தை பேணி காப்பதிலும் கடமை உணர்வோடு பணி புரிவதிலும் நம் தந்தைக்கு நிகராக அவரை மட்டுமே சொல்ல முடியும். ஒரு குடும்பம் நன்றாக திகழ்கிறது என்றாலே நாம் எளிதாக கணித்து விடலாம் அந்த குடும்பத்தில் இருக்கும் ஆண் மகன் சிறப்பாக திகழ்கிறான் என்று.

உங்களை சிறு வயது முதல் பேணிக்காத்த உங்கள் பெற்றோருக்கு கண்டிப்பாக அவர்களின் பிறந்த நாளில் நாம் வாழ்த்துக்களை அனுப்பி அவர்களை மகிழ்ச்சியுற செய்யலாம்.

இந்த பதிவில் உள்ள தந்தை பிறந்த நாள் வாழ்த்து மடல் உங்கள் அப்பாவுக்கு வாழ்த்துக்களை அனுப்ப உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த அப்பாவிற்கான சிறந்த பிறந்தநாள் வாழ்த்து கவிதைகளை உங்கள் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் பகிர்ந்தோ அல்லது தெரியப்படுத்தியோ நீங்கள் பயன் பெறலாம் நன்றி நண்பர்களே.

அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

ஒவ்வொரு நாளும் எனக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்து அழகு பார்த்த என் அழகான அப்பாவுக்கு இந்த பிறந்த நாள்.

என்றும் நீங்கள் நூறு வயது வரை எந்த குறையும் உடலிலும், மனதிலும் காணாது நீண்டு வாழ நான் பிரார்த்திக்கிறேன்.

அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

இன்பம் மட்டுமே கூட்டிக்கொண்டு துன்பம் என்ற ஒன்றை உங்கள் வாழ்க்கையில் களைத்து விட்டு ஆயுள் என்ற ஒன்றை மென்மேலும் பெருக்கி கொண்டும் காலம் முழுவதும் நலமுடன் வாழ இந்த இனிய பிறந்த தினத்தில் வாழ்த்துகிறேன்.

அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

இந்த காலங்களுக்கு தான் எவ்வளவு விளையாட்டுத்தனம்.

அன்று நான் என் அப்பாவின் மடியில் குழந்தையாய் இருந்தேன் இன்று என் அப்பா என் பிள்ளையிடம் விளையாடி குழந்தையாகி விட்டார்.

என் கனிவான உங்களுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் செல்ல தந்தையே.

அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

எனக்கு கஷ்டம் கூட என்னவென்று தெரியாத அளவுக்கு என்னை வளர்த்து ஆளாக்கி உங்கள் சொந்த உழைப்பில் என்னை படிக்கவைத்து இன்று உங்களுக்கென்று ஒன்றும் இல்லாமல் என் சந்தோசத்தை பார்த்து நீங்கள் ஆனந்தப்படும் மனம் உங்களை தவிர யாருக்கு அப்பா வரும்.

என் அன்பார்ந்த நேசமிகு அப்பாவுக்கு என் மனப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

என் வாழ்க்கையில் எல்லா நாளுமே உங்களை நினைக்காத நாள் இல்லையே என் அன்பு தந்தையே.

நீங்கள் பிறந்த இந்த பொன்னான சிறப்பு தினத்தில் இன்று போல் என்றும் குறை இன்றி மனதில் கவலைகள் இல்லாது நூறு ஆண்டுகளுக்கும் மேலே நீங்கள் வாழனும் என வாழ்த்துகிறேன் அப்பா.

இனிய தந்தைக்கான பிறந்த நாள் வாழ்த்து மடல்

அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

தனது மகளை அப்பாவை விட நேசிக்கவும், நன்கு பார்த்து கொள்ளவும், அவள் வாழ்வை வளப்படுத்தி  சிறப்பாக்கி கொடுக்க வேறு ஒரு ஆடவர் எவரும் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை.

அப்படிப்பட்ட என் தந்தைக்கு இந்த செல்ல மகளின் பிறந்த நாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

வாழ்க்கை கொடுக்கும் அனுபவங்களை இலவசமாக சொல்லி கொடுக்கும் ஆசான் தான் என் அப்பா.

என் உள்ளம் கனிந்த பிறந்த தின வாழ்த்துக்கள்.

அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

எப்படி வாழ வேண்டும், எவற்றையெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்ய கூடாது என எனக்கு பார்த்து பார்த்து சொல்லி கொடுத்தீர்கள்.

என் உயிர் உள்ளவரை தந்தையே நான் உங்களை மறவேன். உங்கள் மகளின் பிரியமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அப்பா தந்தை பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

தேடினாலும் எங்கும் கிடைக்காத பொன்னான திருநாளே என் தந்தையின் பிறந்த நாள்.

இந்த வருடம் முழுவதும் உங்கள் எண்ணம்  கை  கூட வாழ்த்துகிறேன் அப்பா.

அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து, தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து,பிறந்தநாள் வாழ்த்து மடல்

பிறந்த நாள் வாழ்த்து கவிதை

வாழ்க்கை பயணங்கள் தான் நம் வாழ்க்கையை மேலும் கீழுமாக மாற்றுமே தவிர  உங்கள் மேல் நான் கொண்ட பாசத்தில் எப்போதுமே பஞ்சம் இருக்காது.

வாழ்த்துக்கள் தந்தையே இந்த பிறந்த தினம் உங்களுக்கு ஒரு புது மனவலிமையை ஏற்படுத்தி தரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.