என்னை பெற்றெடுத்த தேவதையே! உன் அன்புக்கு இந்த உலகில் வேறெதுவும் ஒப்பிட முடியாது. என்னை பத்து மாதங்கள் உன் வயிற்றில் சுமந்து இந்த உலகிட்கு அறிமுகம் செய்தாய். தாயே, உன் பாசம் என்னும் கடலில் மகிழ்ச்சியோடு மிதந்து கொண்டிருக்கிறேன். உன் அன்பு கரங்களில் என்னை மிதக்க வைத்து மகிழ்ச்சி எனும் வானில் நீ உலா வந்தாய். அழகிய நிலவே! நீ என் மூன்றெழுத்து பொக்கிஷம் “அம்மா”.