உன்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. உன் அளவிற்கு முயற்சித்தவரை நான் இன்றளவும் இந்த உலகில் கண்டதில்லை.
அல்ல அல்ல குறையாத அளப்பரிய அறிவியல் எனும் உலகத்தின் மேதையே. இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்ற சரித்திரத்தின் முதன்மை நாயகனே.
இளைஞர்களை ஊக்குவிக்க இன்று உன் போல் வேறு ஆள் இல்லை. உன் இடத்தில் வேறு எவரையும் வைத்து பார்க்க எங்கள் மனதில் திடம் இல்லை.
குழந்தைகள் போல் நீ சிரித்து, சிறகடிக்கும் உன் புன்முறுவல் இன்னும் எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை. உன் வெகுளித்தனத்தால் எங்கள் உள்ளத்தை கொள்ளை அடித்ததை நாங்கள் இன்னமும் மறக்கவில்லை.
பலரின் கேளிக்கை பேச்சுக்களுக்கு நீ ஏவுகணையில் பதில் கொடுத்தாய்/தொடுத்தாய். உன் எளிய தோற்றத்தால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தாய்.
உங்கள் காலம் போனாலும் உங்களின் பொன்னான பொன்மொழிகள் என்றும் ஒரு அழியா பொக்கிஷமே எங்களுக்கு. அகிலமே வியக்கும் வண்ணம் திகழ்ந்த உங்களுக்கு தமிழ் அன்னையே சலாம் போடும் கலாமுக்கு.
– என்றுமே அய்யாவின் அடியேன் ப மனோஜ்