ஆள்காட்டி விரலால்
அவன் இதயத்தில்
நுழைந்தாய்
வெற்றி எனும் விரலால் பெருமிதம்
கொண்டாய்
எழுதுகோலே சற்று
இளைப்பாறு…..
இரு விரல்கள் இணையட்டும்
சிறகுகள் விரித்து
பறக்கட்டும்
கவிஞனே சற்று
ஓய்வெடு……
கவிதை ஒன்று களவு போகும்
நேரமிது.
இது கவிதை எனும்
முத்து சேர்ந்த
தங்க வளையலிது!