அழகான அந்திமாலை பூதூவிய
நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திய என் மோட்டார்
சைக்கிள் அவள் வருகைக்காக காத்திருந்த படியே
அந்த நொடித்தூளிகள் இனிமையாக
வரம் கேட்டுவிட்டு
காத்துநிற்கும் ஒரு பக்தன் போல் அவளுக்காக
நான் வழமையை விட சற்று
அதிக மணித்துளிகள் கடந்தது அவள் வருகைக்கு
புதிதாய் உதிர்ந்த
பூக்கள் அவள் பாதம் படாமலே இறந்து விட்டது
இத்தனையும் ஏங்க வைத்த அவள் வருகை தோழிகளுடன்
நகைத்து கொண்டே அவள் நடை அந்த நொடி அதுவரை பொறுமையாக
துடித்த இதயம் ஏனோ அவளை கண்டவுடன் அவசரம்
என்னை நோக்கிய அவள் விழிகள் தயக்கத்தில் தடுமாற்றம்
மாலை மறையும் சூரியன் அவள் விழியில் அஸ்தமித்தது போல்
அவள் மனதில் அத்தனை நாட்களும் சொல்லாமல்
மூடி வைத்து என்னை ஏங்க வைத்த அவள் காதல்
சொல்ல என்னிடம் என்னை நோக்கி வந்தாள்
அருகே அருகே அதுவரை அமைதியாக இருந்த
உள்ளம் உடல் ஏனோ பழைய பேருந்து போன்று
கட்டகட்ட என எங்கும் அதிர்வுகள்
அவள் தென்றல்
போல் வந்தாள் திசைமாறாமல் அதே போன்று என்னை தாண்டி
சென்றாள் நகைத்தவண்ணம் அவளும் தோழிகளும்
அப்போது எனக்குள்ளே ஒரு பாடல் ஒலித்தது “தில்வாலே புச்சி..டே..நி..ச்சா…ஓ..ஓ..😂 என்று
கவிதை + கதை