நதியோடு தென்றல் கலந்தாடும் நேரம் எப்போதும் இவள் கூந்தல் சற்று ஈரம்
கவிபாடும் கூந்தல் அது மயிலாடும் தோகை மதி பொழுது ஆனால் இவளுக்கு இது தான் வேலை
நிலவொளி போல் எப்போதும் முகம் இவள் நெற்றியில் இருக்கும் சந்தன பொட்டு தினம்
கால் கொண்ட நிலவாய் காலை தானே வருவாள் அன்பென்ற ஒன்றை அணைக்காமல் தருவாள்
தினந்தினம் புதுமொழிகள் பொன்னாக உதிர அவளில் கூந்தலில் சிக்கிய என் மனம் எந்நாளும் மிளிர
அடிக்கடி பார்த்தாள் அரை நாழி கழியும் அத்துடனே சிரித்தாள் என் மனது மலரும்
ஆளில்லா நேரம் அதிகாரம் வீசும் எவரேனும் இருந்தால் அகிம்சை பேசும்
மத்தியான பொழுது உணவருந்தும் வேலை இவள் வராமல் போனால் எனக்கில்லை வேலை
நிதானமின்றி நானும் தடுமாறி வருவேன் நிதானமாய் தருவாள் நிறைவான உணர்வு
அறிந்துகொள்ள கேட்பாள் அளவான நிமிடம் நான் சொன்னால் போகும் அளவில்லா நேரம்
எதிர் பார்த்து நிற்பாள் எனைப்பார்த்து அல்ல எளிதாக ஏறிச்செல்ல எப்போது வரும் ஆட்டோ
இவள் கண் போன போக்கிலே என் கால் ரெண்டும் போகும் இவள் எனை பார்க்கையிலே என் மனம் நெகிழ்ந்து போகும்
அளவில்லாமல் போகும் தின்பண்டம் அதைக் கேட்டால் அவள் சொல்வாள் நீ ஒரு தண்டம்
அளவோடு பேசும் அறிவுள்ள பேச்சு அளவில்லாமல் போனால் அது குழந்தைபோல் ஆச்சு
வீர் கொண்டு பார்க்கும் என் விழி கூட மயங்கும் என் நாடி நரம்புகள் அவளை கண்டதும் ஓடும்
எப்போதும் என் அன்பு உன்னுடனே இருக்கும் விழியோரம் நீர் கசிந்தால் என் கைகள் துடைக்கும்