கடலில் விழுந்தாலும் விழலாமே தவிர கடனில் விழுந்து விடாதே…!
தவறி விழுந்து விட்டால் கழுதை கூட கானம் பாட ஆரம்பித்து விடும்…!
இட்ட கை இளைத்துப் போனால் இட்டதை தொட்ட கை தூளியில் அமர்ந்து துலாக்கோல் பிடிக்கும்…!
ஆரம்பத்தில் அனைத்தும் இணைந்த கைகள்தான் – ஆனால் ஆபத்தில் தான் தெரியும் உன் கையே உனக்கு உதவியென்று…!
உலையில் சட்டி சுடும்போது கொதிக்கும் நீருக்கு ஆறுதல் சொல்ல ஆளில்லை…!
சட்டைப்பை புதிதானால் அருகில் சங்கமிக்கும் ஆட்களுக்கு பஞ்சமில்லை…..!!!
– தமு