உன்னை எண்ணியே நான் நூலாக இளைக்கிறேன், அனுதினமும் உன் காதல் நினைவிலே தவிக்கிறேன்.
நாட்கள் சென்றது மட்டும் தான் நமக்குள் தாமதம், பெண்ணே நீ என்று சொல்வாய் என் காதலுக்கு சம்மதம்.
மீண்டும் மீண்டும் என்னை கெஞ்ச வைக்காதே, உன் வீணான வார்த்தை போர்களால் என்னை வீழ்த்த நினைக்காதே.
நாம் பழகிய நாட்களை நம் நினைவுகள் பேசும், நீ மட்டும் என்னோடு இருந்தால் என் வாழ்விலும் ஒளி வீசும்.
உன் மனதில் உள்ள நேசத்தை என்னிடம் மறைக்க நினைக்காதே, உன் பிரிவு என்ற ஒன்றை மட்டும் எனக்கு பரிசளிக்காதே.
என் வாழ்க்கையில் அனைத்தும் செய்வேன் உனக்காக, என்னுடைய ஆசை எல்லாம் உன்னுடன் மணவறையில் அமர வேண்டும் மணாளனாக.
.நாம் பழகிய தருணங்கள் என்றுமே இனிமையானவை, உன்னை என் தோள்களில் சுமந்த அந்த நாட்கள் என்றென்றும் அருமையானவை.
காலம் பூராவும் நாம் காதல் என்ற வலையால் இணைத்து இருப்போம், இணை பிரியா உணர்வோடு நாம் என்றென்றும் இரண்டற கலத்திருப்போம்.