திருமண தினம் என்பது நம் அனைவருக்குமே நினைத்து பார்க்கும் அளவுக்கு நாம் வாழ்ந்த வாழ்வின் மிக முக்கிய சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த திருமண நாளிலே நம் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மட்டும் நம் குடும்பத்தின் முக்கிய நபர்கள் எல்லாம் நம் கல்யாண நாளிலே வருகை தந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்விப்பர்.
நம் பிறந்த நாளை போலவே வருடா வருடம் திருமண நாளும் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நிலைத்து நிற்கும். ஆகவே உங்கள் நெருங்கிய உறவுக்கோ அல்லது பிடித்தமான நபர்களுக்கோ திருமண வாழ்த்து அல்லது திருமண ஆண்டு விழா வாழ்த்து தெரிவிக்க நீங்கள் விருப்பப்பட்டால் இந்த கல்யாண நல்வாழ்த்துக்கள் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என நான் நம்புகிறேன்.
இனிய திருமண நன்னாள் நல்வாழ்த்துக்கள்
உன் வாழ்க்கையின் மிக முக்கிய தினமான இந்த திருமண நாளில் தம்பதியர் நீங்கள் இருவரும் இன்று போலவே எந்த நாளும் இளமையோடும் அளவில்லாத ஆரோக்கியமுடனும் வற்றாத விளை நிலங்கள் போல மக்கட்செல்வங்களை பெற்று சகல தொழில் வளங்களிலும் முன்னேறி வாழ்க்கையின் உன்னத நிலையை அடைய மனமார வாழ்த்துகிறேன்.ஹாப்பி வெட்டிங் அன்னிவெர்சரி…
புதிதாய் துவங்கும் இல்லற வாழ்க்கை போலவே இந்த நல்ல நாளில் உங்கள் இருவருக்குள்ளும் எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் அதை எல்லாம் கிழித்தெறிந்து விட்டு மனமகிழ்ச்சியோடும் ஒற்றுமையோடும் பல்லாண்டு வாழ இந்த நல்ல நாளில் வாழ்த்துகிறேன்.
தித்திக்கும் இன்பமயமான இந்த மணநாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் மிகுந்த கோலாகலமாகவும் அமையட்டும்..
இனிய திருமண ஆண்டு விழா வாழ்த்துக்கள்…
என் உடன்பிறவா தோழன் தோழி கொண்டாடும் இந்த மணநாள் நினைத்தது நடந்து வாழ்கை எனும் பாதை சீராகி இரு மனங்கள் ஒன்றுபட்டு என்றுமே நீடூழி வாழ வாழ்த்துக்கள்…
உனக்குள்ளே அவளும் அவள் மனதில் நீயும் வாழும் அர்த்தமுள்ள பின்னி பிணைந்த ஒரு உறவே கணவன் மனைவி உறவு. இந்த வருட திருமண நாளில் இருந்து நினைத்தது நடந்து உங்கள் எண்ணம் போல வாழ இந்த நல்ல உள்ளங்களின் நல்வாழ்த்துக்கள்.
பொன்னான திருமண தினம் கல்யாண நாள் வாழ்த்து கவிதைகள்
பிறப்பினிலே தேவன் வகுத்த உனது வாழ்நாளின் இறுதி வரை கூடவே உன்னுடன் ஒட்டி கொண்டு வாழும் உறவே கணவன் மனைவி உறவு… ஹாப்பி வெட்டிங் டே…
வாழும் நாட்கள் அனைத்தும் பூத்து குலுங்கி புத்தம் பொலிவுற காட்சி அளிக்கும் அழகிய பூக்கள் போல புதுமையாகவும் உறவுகள் என்னும் உணர்விலே நறுமணம் வீசட்டும்…. திருமணம் எனும் பந்தம் அழகிய பந்தல் போல வானுயர வளர்ந்து வாழ்வினிலே மகிழ்ச்சி பொங்கட்டும்… ஹேப்பி வெட்டிங் டே விஸ்ஸஸ்…
காலங்கள் பல போனாலும் மாற்றங்களினால் மாறுதல்கள் பல கண்டாலும் இருவரும் என்றுமே ஒன்றுபட்டு உயிருக்கு உயிராகி ஆறுதலும் அன்பும் பெருகி இதயத்தால் காலத்தால் அழியாதவாறு இணைந்திருங்கள்…
ஒருவரை ஒருவர் பிரியமுடனும் மனதால் உருகி ஒன்றுபட்டு புரிந்து கொண்டும் விட்டுக்கொடுக்கும் தன்மை கணவன் மனைவி இருவருக்கும் இருக்கும்போது திருமண நாள் போல அனைத்து நாட்களும் சிறப்பானதே.
ஊரே வியக்கும் வண்ணம் சிறந்த அன்பு கொண்ட நேசங்களாகி திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்து வாழும் தம்பதியராக இல்லறத்தில் புரிதல் உணர்வுடன் இரு நெஞ்சங்களும் சுற்றத்தாரின் வாழ்த்துகளோடு நூறாண்டு காலம் வாழ்ந்திட இந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
பிற பயனுள்ள பதிவுகள் உங்களுக்காக 🙂
வாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் தமிழ் கவிதை வரிகள் படங்கள்
தமிழ் வாழ்க்கை தத்துவம் கவிதை | நல்ல அறிவுரை வரிகள்
தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள்
இனிய இரவு வணக்கம் வாழ்த்துக்கள்(குட் நைட்), கவிதைகள், படங்கள்
சிறந்த அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை