இரவு என்பது நம் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே கூறலாம். அன்றாடம் ஓடி தேய்ந்த நம் உடலுக்கும் சிறிது ஓய்வு கொடுக்கும் தருணமே இந்த இனிய இரவு பொழுது. இந்த வேளையிலே மட்டுமே பெரும்பாலும் பலர் தனது குடும்பத்தினருடன் செலவிடும் நேரம், தனது குழந்தைகளுடன் கொஞ்சும் நேரம், நண்பர்களுடன் உலாவும் நேரம், காதலர்கள் உரையாடும் சமயம், கணவன் மனைவி அன்யோன்யம் தெரியும் தருணம் என பல பரிமாணங்களில் வெளிப்படும் இந்த இரவு வேளை மிகவும் மகத்துவம் வாய்ந்தது.
இப்படிப்பட்ட இந்த இரவு தருணத்தை மிகவும் அழகாக்க உங்கள் நெருங்கிய நண்பர்கள், உற்றார் உறவினர்கள், அண்டை அயலார்கள், பால்ய சிநேகிதர்கள் என அனைவர்க்கும் இரவு வணக்கம் வாழ்த்துக்கள் தெரிவித்து அவர்களை மகிழ்வுற செய்யலாம்.
இந்த குட் நைட் கவிதைகள் மற்றும் புகைப்படங்களை அவர்களுக்கு சமூகவலைத்தளத்தில் அனுப்பி இந்த இனிய இரவுக்கான உங்களின் கனிவான வாழ்த்துக்களை உங்கள் நெருங்கிய நலன் விரும்பிகளுக்கு தெரியப்படுத்தலாம். கண்டிப்பாக நான் பதிவிட்டுள்ள இந்த இரவு வாழ்த்து போட்டோக்கள் நிச்சயம் அனைவர்க்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
சிறந்த இரவு வணக்கம் வாழ்த்துக்கள் மற்றும் கவிதைகள்
கண்கள் உறங்கும் நேரம்… கனவுகள் விழித்து கொள்ளும் தருணம்…நித்திரையை தேடும் அனைத்து நெஞ்சங்களுக்கும் இனிய “இரவு வணக்கம்”.
வாழ்க்கை என்பது ஒரு விடுகதை போலவே நீ விடைகளை அவிழ்க்க அவிழ்க்க கேள்விகள் மீண்டும் முளைத்து கொண்டே இருக்கும்… நண்பர்கள் அனைவர்க்கும் குட் நைட்…
ஊரே கண் மூடிய அமைதியான நேரம் நெஞ்சில் நின்ற இனிமையான தருணங்களை நினைத்து அசை போடும் இந்த இரவு வேளை உங்களுக்கு இனிமையாக அமையட்டும்.
நாள் முழுவதும் விழிக்கும் விழிகளுக்கு ஓய்வை கொடுக்கும் நேரமே இரவு..
எதிர்பார்ப்புகள் இருக்கும் வரை தேவைகளுக்கு பஞ்சம் இருக்காது உன் வாழ்க்கையில்..
மனது என்பது கண்ணாடி போன்றது நீ என்ன எண்ணுகிறாயோ அதையே அது செய்யும் எனவே என்றுமே நல்லதையே நினைப்போம்…இரவு வணக்கங்கள்..
ஆசை என்ற ஒன்று படுத்தும் பாடு தான் உன் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்… அதற்காக ஆசைப்படாமலேயே வாழ்ந்து விட முடியாது… ஆனால் சில விசயங்களில் நாம் ஆசைப்படுவதை நிறுத்தி விட்டால் ஏமாற்றங்களை கலைத்து விடலாம்… நண்பர்களுக்கு குட் நைட்.
போதும் என்ற மனம் ஒன்று மட்டும் உன்னிடம் இருந்தால் நீ தான் இந்த உலகில் நிம்மதியாக இருப்பவன் … இரவின் மடியில் நிம்மதியாக உறங்கிடுங்கள்…
சில நடக்க முடியாத விஷயங்களை நினைத்து வருந்துவதை விட நடக்கவிருக்கும் எதிர்கால வாழ்க்கைக்கான தேவையை தீட்டி உன் முயட்சியில் நீ நினைத்த காரியங்களை நடத்தி காட்டலாம்…
தனிமையை மறக்க செய்யும் சிறந்த மருந்து தான் உறக்கம்.. நட்புகள் அனைவர்க்கும் இரவு வணக்கங்களுடன் உங்கள் நண்பன்…
இனிய இரவு வணக்கம் போட்டோ | குட் நைட் வாழ்த்து வரிகள்
வானத்து தேவதையை நிலா குடையிலே தேகம் சிலிர்க்கும் குளிர்ந்த காற்றின் இடையே உறங்கவிருக்கும் இந்த இரவு ஒரு சிறந்த உணர்வாக அமையட்டும்.
மனதில் அமைதி நிலவட்டும் கனவுகள் செழிக்கட்டும் உறக்கம் இனிதே நிறைவேறட்டும் …
மாலை பொழுது விடைபெறும் தருணம் காரிருள் சூழ கருமை நிறம் மிகுந்து பூக்கள் மலர புரிகிறதோ தவம்… விந்தையாய் வெள்ளை பந்து ஒன்று ஆகாயத்தை ஆட்சி புரிய தொட்டிலில் கட்டிய குழந்தைக்கு தாலாட்டும் இனிய கானமும் வெவ்வேறு சப்தங்களுடன் சேர்த்து வைத்தாற்போல காண குயில்களின் ரீங்காரங்கள் முழங்க இதோ இரவு உறக்கம் இங்கனம் முழுமையாகிறது.
என் இரவுகள் என்றுமே அழகாகிறது என் நினைவுகளில் புகுந்து நீ கனவுகளில் வலம் வருவதால்…
வாழ்க்கை அழகு தான் எப்போதுமே உங்களுக்கு வாழ தெரிந்திருந்தால் வாழ்வின் அர்த்தம் புரிந்திருந்தால்…
நாளை பற்றிய கவலை வேண்டாம் இன்று என்ற ஒன்றை நீ முறையாக பயன்படுத்தியிருந்தால் …இரவு வணக்கம்
நேற்று என்பது எங்கோ போய்விட்டது நாளை எனும் நாள் உன்னில் இன்னும் நிற்சயம் ஆகவில்லை.. ஆகவே இன்று என்பதே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையின் நிதர்சனமான உண்மை…
ஒரு நாள் தான் பூக்களின் வாழ்க்கை… இருந்தும் அது புன்னகைக்க தவறுவதில்லையே… அதை போலவே வாழ கற்று கொள். வாழ்க்கை என்பது வளம் பெறும்.. இனிய இரவு வணக்கம் நண்பர்களே…
உன் முயட்சியின் மீது நீ வைக்கும் தன்னம்பிக்கை தான் நீ செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஊக்கமளித்து அடித்தளமிடும் ஒரு மிகப்பெரிய அஸ்திவாரம்.. குட் நைட் பிரண்ட்ஸ்…
ஒருவரை உனக்காக மாற்றும் மிக சிறந்த தந்திரமே புன்னகை.. இன்பமயமான இரவு வணக்கம்…
இரவு வணக்கம் புகைப்படங்கள்
காலங்கள் என்பது காட்டாறு போல ஓடி கொண்டு தான் இருக்கும் நீ தான் உனக்கான சமயத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
தோல்வி வந்தால் அதை பாடமாக எடுத்து கொள்ள வேண்டுமே தவிர காரணங்களை தேட கூடாது. நட்புகள் அனைவர்க்கும் இரவு வணக்கம்.
நெஞ்சங்கள் மறுக்கப்படலாம் ஆனால் நினைவுகள் என்றுமே மறுக்கப்படுவது இல்லையே. சுகமான இரவு வணக்கங்கள்.
அன்பே ஒவ்வொரு இரவுகளும் உன் கனவாக இருப்பதால் தான் என்னவோ என் இரு விழிகள் உறங்க நினைக்கிறதோ…
பாசம் என்பது பேசி வருவது அல்ல புரிந்துணர்வுகளில் ஒன்றான இரு இதயங்கள் இணைந்ததால் அமைவது…
நீ மட்டும் போதும் எனக்கு இந்த இரவுகளில்… நிலவின் வெளிச்சம் எப்போதும் இருக்கும் நம் கனவுகளில்…
சுட்டெரிக்கும் சூரியனும் விலகி கொள்வான்.. பகல் பொழுது மெல்ல மெல்ல உருமாறும் நேரம்… ஜீவராசிகள் அனைத்தும் தனது வாழிடம் செல்லும் தருணம்… நட்சத்திர கூட்டங்கள் கும்மாளமிட்டு தனது அழகிலே மிளிரும் விந்தையான இந்த தருணத்தில் நீ சுகமாக உறங்க என் இனிய இரவு வணக்கங்கள்.
அன்பே உன்னை காணும்போது பார்க்கும் கண்கள் வெறும் காட்சியே… கடைசியில் தான் தெரிகிறது பறிபோனது என் இதயம் அல்லவா என்று…
கவலைகளை அடைத்து கொள்ள அல்லவே இதயம்.. சில அன்பான உறவுகளை இணைத்து கொள்வதற்கே இதயம்…
நடக்காத விஷயங்களை கற்பனையில் நடத்தி காட்டுவதே “கனவு”… கனிவான இரவு வணக்கங்கள்….
அழகிய இரவு வணக்கம் வாழ்க்கை தத்துவம்
நடந்து முடிந்த பின்னர் இப்படி செய்திருக்கலாமோ என்று எண்ணுவதை விட இனி எப்படி செய்ய முடியும் என்றெண்ணுவதே சால சிறந்தது…
நமக்கு எது தேவை என்று தானே சிந்திக்கிறோமே தவிர எதை செய்தால் சரியாக வரும் என்று யோசிப்பது இல்லை.
சில நினைவுகளால் வாடுதே இளமை. இந்த இளமையில் ஊறி போனதோ என் தனிமை. இந்த தனிமைகளால் துணை தேடுகிறேன் இதுவே இன்றைய என் வாழ்க்கையின் நிலைமை.
இதயம் கூட சில நேரங்களில் அழுகிறது நமக்கு பிடித்தவர்கள் நம்மை தெரிந்தே காயப்படுத்தும் போது …குட் நைட்…
கனவு என்னும் படகில் பயணிக்க முற்படும் அனைத்து உள்ளங்களுக்கும் சுகமான இரவு வணக்கம்…
என் இரவுகளில் உலாவும் கனவு கன்னியே நீ தானடி செல்லமே…
களைத்து போன கண்ணின் விழிகளுக்கும் வேண்டுமே “ஓய்வு”… கற்பனைகளுக்கு உயிர் கொடுக்கும் சரியான நேரம் தான் இந்த இனிய “இரவு”…
நீ முயட்சிக்கும் செயல்களில் வெற்றிகள் கிடைக்காமல் போனாலும் அனுபவம் என்ற வெற்றிக்கான வாசலை திறக்கும் சாவி உனக்கு கிடைக்கும்…
விடியலை நோக்கி பயணிக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த இரவு பொன்னான இரவாகவும் கற்பனைகள் பூத்து குழுங்கவும் வாழ்த்துக்கள்…
ஏமாற்றங்கள் ஏற்கனவே பழகி விட்ட ஒன்று தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் நாம் எதிர்பார்த்து கிடைக்காத ஒன்றிற்காக புதிதாக வருத்தப்படவே செய்கிறோம்…
இனிக்கும் இரவு பொழுது வாழ்த்து வாழ்க்கை தத்துவம் படங்கள்
சிறுக சிறுக சேமிக்கும் தேனீக்கள் போல உன் சின்ன சின்ன வெற்றிகளை சேகரித்து கொண்டே இரு.. சாதனை என்ற தேன் கிண்ணத்தை நீ அடையும் நாள் ஒன்றும் வெகு தொலைவில் இல்லை…
மாறுதல்கள் என்ற ஒன்றினால் தான் என்னமோ அனைவரது சுயரூபமும் தென்படுகிறது.. இரவு வணக்கம் …
நீ இன்று விதைக்கும் செயல்கள் தான் நாளை அறுவடைக்கு வந்து நிற்கும் எனவே நல்லதையே மனதில் நினைப்போம் அதையே நம் செயல்களில் விதைப்போம்… குட் நைட் பிரண்ட்ஸ் …
எந்த உறவுகளுக்கும் உண்டு எல்லை ஆனால் நம் நட்பிற்கு மட்டும் அது இல்லவே இல்லை… இரவின் விடியலில் உறங்க நினைக்கும் நட்புக்கு இனிய இரவு வாழ்த்துக்கள்…
தினமும் பூக்கள் போல சிரிப்போம் … புன்னகை ஒன்றையே மனதில் விதைப்போம்… என்றும் புன்முறுவலோடு அனைவரிடமும் இருப்போம்…
விண்ணுலக வேந்தர்களும் மண்ணுலக மாந்தர்களும் சந்திரனை காவலுக்கு வைத்து விட்டு ஓய்வெடுக்கும் வேலை தான் இரவு…
நீ எங்கு சென்றாலும் நாங்கள் உன்னை விடாது மீண்டும் மீண்டும் துரத்துவோம் இப்படிக்கு மாறும் காலங்கள் மற்றும் மாறாத மாற்றங்கள்….
நாளை என்னும் சொல் உன்னை ஏமாற்றலாம் ஆதலால் அதனை நம்பி இன்று என்ற ஒன்றின் நிஜத்தில் உனக்கான வாய்ப்பை பயன்படுத்த தவறி விடாதே…
உலகிற்கே உதயம் அளிக்கும் அந்த ஆதவனையே தன் போர்வையில் மடித்து இருளாய் செய்ததோ இந்த இரவு?
நீ தூங்க வேண்டும் என்று உனக்காகவே விழித்திருக்கும் இந்த இரவுகளோடும் உன் பற்பல கனவுகளோடும் அயர்ந்துறங்குவாயாக… இரவு வணக்கம்…
தன்னம்பிக்கை ஊட்டும் இரவு கவிதை வரிகள்
இருப்பதில் திருப்தி காணாமல் ஆடம்பரத்தை தேடி அலையும் மனிதனிடம் கண்டிப்பாக மன நிம்மதி என்பது இருக்காது.
வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு சறுக்கல்களை சந்திக்கும்போதும் நீ அதை பாடமாக தான் எதுக்கு கொல்லனுமே தவிர கஷ்டங்களாக அல்ல…
பிற உபயோகமான பதிவுகள்:-
வாழ்க்கை சிந்தனை துளிகள் பொன்மொழிகள் கவிதைகள் படங்கள்
இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் படங்கள் | சிறந்த குட் மார்னிங் புகைப்படங்கள்
மனதை தொடும் தமிழ் கவிதைகள் | Tamil Kavithai Images
மனதை தொடும் தமிழ் கவிதைகள் | Tamil Kavithai Images
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் படங்கள்
தமிழ் காதல் தோல்வி கவிதை படங்கள் | சோக வரிகள்
வாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் தமிழ் கவிதை வரிகள் படங்கள்