இனிய காதல் கவிதைகள் 2018

வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன் வாழ்க்கை துணைவி அவளாக இருந்தால்

வாழ்க்கை துணைவி

வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன் வாழ்க்கை துணைவி அவளாக இருந்தால்

பாலைவனமாக இருந்தாலும் பயணம் செய்வேன்  பாதை காட்டுவது அவளாக இருக்க வேண்டும்.

கொசு கடியிலும்  நிம்மதியாய் உறங்குவேன் கனவில் வருவது அவளாக இருக்க வேண்டும்.

கடுமையாய் உழைத்து காத்து கிடப்பேன் ஊதியம் கொடுப்பது அவளாக இருக்க வேண்டும்.

வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன் “வாழ்க்கை துணைவி” அவளாக இருந்தால்.

உன்னையே என் உயிராய்

உன்னை என் உயிராய் இதயத்தில் ஊற்றி வைத்திருக்கிறேன்

கண்ணே உன் கனவுகளை கல்லில் சிலையாய் செதுக்கி வைத்தால் காலத்தின் காலடி சுவடு பட்டு சிதைந்து விடலாம் .

உன் நினைவுகளை காகிதத்தில் கவிதையாய் எழுதி வைத்தால் வான் மகளின் கண்ணீர் பட்டு அழிந்து விடலாம்.

உன் உணர்வுகளை கண்ணீரில் உயிரோவியமாக தீட்டி வைத்தாலும்  மறைந்து விடலாம்.

உன்னை என் உயிராய் இதயத்தில் ஊற்றி வைத்திருக்கிறேன் மரணம் கூட உடலுக்கு தான் உயிருக்கேது ?

இதயத்தை திருடிய குற்றம்

என் இதயத்தை நீ திருடிய குற்றத்திற்காக

என்  இதயத்தை நீ திருடிய குற்றத்திற்காக என் மனம் என்னும் சிறையில் உன்னை ஆயுள் கைதி ஆக்கினேன். தயவு செய்து முன்  ஜாமீன் மட்டும் கேட்டு விடாதே,

உன் நினைவுகள் சுமை இல்லை

என் இதயத்திற்கு உன் நினைவுகள் சுமை இல்லை

கண்களுக்கு என்றும் சுமை இமையில்லை. கைகளுக்கு என்றும் சுமை விரலில்லை. அதுபோல என் இதயத்திற்கு உன் நினைவுகள் சுமை இல்லை.

உன்னை பார்த்தால் பயமா? கோபமா?

உன்னை பார்க்காத ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல இருக்கும்

உன்னை பார்க்காத ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல இருக்கும். அடுத்த நாள் உன்னை பார்த்து பேச என் மனம் துடிக்கும். ஆனால் உன்னை பார்த்த உடன் அந்த நினைவுகள் பறந்து சென்று விடும்.

உன்னை பார்த்தால்…

பயமா?

கோபமா?

காதல் என்றும் அழியாத சிற்பம்

கற்களில் வரைந்த சிற்பம் போல் என்றும் அழியாதது நம் காதலை போல்

உன்னை விட்டு பிரிய நான் கனவிலும் நினைத்தது இல்லை. காதல் என்பது காகித வரைபடம் போல் அல்ல. கற்களில் வரைந்த சிற்பம் போல் என்றும் அழியாதது நம் காதலை போல்.

என் இதயம்

என் இதயத்தில் நீ இருந்தால்

நான் உன்னை நேசித்ததை விட உன் இதயத்தை நேசித்ததே அதிகம். நீ என் அருகில் முப்பொழுதும் வேண்டும். ஒரு நொடி உன்னை பிரிந்தாலும் அந்த பிரிவை என் இதயம் ஏற்பது இல்லை. உனக்காக வாழும் இதயம் உனக்காக இறக்கவும் துணியும்.  நான் இறந்தாலும்  என் இதயம் எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்… என் இதயத்தில் நீ இருந்தால் …

காதல் இல்லையேல் உலகம் இல்லை

காதல் இல்லை என்றால் உலகம் இல்லை

பகல் என்ற ஒன்று இல்லையென்றால் இரவுகள் இல்லை. இரவுகள் என்ற ஒன்று இல்லையென்றால் கனவுகள் இல்லை. கனவுகள்  என்ற ஒன்று இல்லையென்றால் காதல் இல்லை. காதல் என்ற ஒன்று  இல்லை என்றால் எனக்கு இந்த உலகமே இல்லை.

காதலுக்கு எல்லை இல்லை

நம் காதலுக்கு என்றுமே எல்லை இல்லை

கடலுக்கு எல்லை உண்டு. கடவுளின் கருணைக்கும் எல்லை உண்டு. காற்றிற்கும் எல்லை உண்டு. ஆனால் நம் பார்வைக்கு எல்லை இல்லை. நம் அன்புக்கு எல்லை இல்லை.  நம் காதலுக்கும் எல்லையே இல்லை. உலகின் எல்லைக்கு சென்றதில்லை. ஆனால் காதலில் நான் எல்லை (என்னை) மீறி சென்று விட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.