இனிய காதல் கவிதைகள் 2019

இனிய காதல் கவிதைகள் 2019

எத்தனை புது வருடங்கள் வந்தாலும் காதலுக்கு என்றுமே வயது இல்லை தானே 🙂 உங்கள் மனதை கொள்ளையடிக்கும் இந்த வருட 2019 புது காதல் கவிதைகளை நான் இங்கு என் கற்பனையில் தொகுத்து இந்த பதிவில் கொடுத்துள்ளேன். உங்கள் அனைவர்க்கும் இந்த காதல் கவிதை வரிகள் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

புத்தம் புது காதல் கவிதைகள் 2019

உனக்கும் எனக்குமான இந்த காதல் யுத்தத்தில் வெற்றி பெறுவது நானோ நீயோ அல்ல. இருவரில் ஒருவர் தோற்றாலும் அது நம் காதலையே அர்த்தம் இல்லாமல் செய்து விடும். எனவே நிச்சயம் வெற்றி பெறுவது நாமாகவே இருக்க வேண்டும்

உனக்கும் எனக்குமான இந்த காதல் யுத்தத்தில் வெற்றி பெறுவது நானோ நீயோ அல்ல. இருவரில் ஒருவர் தோற்றாலும் அது நம் காதலையே அர்த்தம் இல்லாமல் செய்து விடும். எனவே நிச்சயம் வெற்றி பெறுவது நாமாகவே இருக்க வேண்டும்.

என்னதான் நீ என்னை உன் பார்வைகளில் அபகரித்தாலும் நான் உன் கண்களின் வழியே சென்று உன் இதயம் எனும் கோட்டையை முற்றுகையிட்டு என் நேசத்தை உன்னில் உட்புகுத்துவேன்

என்னதான் நீ என்னை உன் பார்வைகளில் அபகரித்தாலும் நான் உன் கண்களின் வழியே சென்று உன் இதயம் எனும் கோட்டையை முற்றுகையிட்டு என் நேசத்தை உன்னில் உட்புகுத்துவேன்.

கவிதைகள் போலவே இனிமையான உணர்வுகளும் சுவையான மன நிறைவுகளும் தருபவளே என்னவள்

கவிதைகள் போலவே இனிமையான உணர்வுகளும் சுவையான மன நிறைவுகளும் தருபவளே என்னவள்.

என் நிஜங்களில் நடமாடும் கனவுகள் நீ தான்… இந்த வெற்று உடலில் உயிராக இருப்பதும் நீ தான்… உன் நினைவுகளில் என்னை ஆள்வதும் நீ தான்…என் வாழ்க்கையில் என்றுமே நீங்காது உரிமையோடு கொண்டாடும் உறவு நீ மட்டுமே எந்தன் அன்பே…!

என் நிஜங்களில் நடமாடும் கனவுகள் நீ தான்… இந்த வெற்று உடலில் உயிராக இருப்பதும் நீ தான்… உன் நினைவுகளில் என்னை ஆள்வதும் நீ தான்…என் வாழ்க்கையில் என்றுமே நீங்காது உரிமையோடு கொண்டாடும் உறவு நீ மட்டுமே எந்தன் அன்பே…!

நான் இந்த உலகை விட்டு மறைந்து போகும் நிலை வந்தாலும் என்றுமே உன் நினைவுகளை மறந்து போகும் நிலை மட்டும் வரக்கூடாது

நான் இந்த உலகை விட்டு மறைந்து போகும் நிலை வந்தாலும் என்றுமே உன் நினைவுகளை மறந்து போகும் நிலை மட்டும் வரக்கூடாது.

கண்ணீர்த்துளிகள் நீ எனக்கு பரிசாக தரும்போது அது கூட சுகமான மழையாக நனைகிறது நம் காதலில்

கண்ணீர்த்துளிகள் நீ எனக்கு பரிசாக தரும்போது அது கூட சுகமான மழையாக நனைகிறது நம் காதலில்.

உன்னை விட்டு முழுவதும் நீங்க வேண்டும் என்று நினைத்த என்னை உன் பிடியில் மயக்கி இன்று உன் பாசத்தால் என்றுமே நீங்காத கனாக்களால் மூழ்கடித்து விட்டாய்

உன்னை விட்டு முழுவதும் நீங்க வேண்டும் என்று நினைத்த என்னை உன் பிடியில் மயக்கி இன்று உன் பாசத்தால் என்றுமே நீங்காத கனாக்களால் மூழ்கடித்து விட்டாய்.

இனிய காதல் கவிதை வரிகள் 2019

என் வாழ்க்கைப்பகுதியில் எது முக்கியமான தருணம் என்பது எனக்கு விவரிக்க தெரியவில்லை. ஆனால் நீ உன் காதலை சொன்ன அந்த நாள் என் சிதறிய அனைத்து வாழ்க்கைப்பக்கத்தையும் முழுமையாக்கி விட்டது

என் வாழ்க்கைப்பகுதியில் எது முக்கியமான தருணம் என்பது எனக்கு விவரிக்க தெரியவில்லை. ஆனால் நீ உன் காதலை சொன்ன அந்த நாள் என் சிதறிய அனைத்து வாழ்க்கைப்பக்கத்தையும் முழுமையாக்கி விட்டது.

நான் என்றும் காதலை உன்னிடம் சொல்ல வரும்போது எல்லாம் இடைவிடாமல் வழிமறித்து என்னை அலைக்கழித்து வார்த்தைகளை எல்லாம் சொல்லாமலேயே பிடுங்கி கொண்டு பித்தனை போல் புலம்ப செய்து விடுகிறது உன் “கண்கள்”

நான் என்றும் காதலை உன்னிடம் சொல்ல வரும்போது எல்லாம் இடைவிடாமல் வழிமறித்து என்னை அலைக்கழித்து வார்த்தைகளை எல்லாம் சொல்லாமலேயே பிடுங்கி கொண்டு பித்தனை போல் புலம்ப செய்து விடுகிறது உன் “கண்கள்”.

பெண்ணே தயவு செய்து உன் கண்களை மூடிக்கொ ள் அப்போதாவது காதலை உரைக்க என்னுள் தைரியம் வருமா என்று பார்க்கலாம்

பெண்ணே தயவு செய்து உன் கண்களை மூடிக்கொ ள்  அப்போதாவது  காதலை உரைக்க என்னுள் தைரியம் வருமா என்று பார்க்கலாம்.

அன்பனே நான் உனக்காக காத்து கிடக்கும் தருணங்கள் அனைத்தும் என்றுமே நம் காதலின் நீங்காத நினைவுகளாகி செதுக்காத கல்வெட்டுகளாய் அழியாத நம் அடையாளங்களாகி போய் விடுகின்றது

அன்பனே நான் உனக்காக காத்து கிடக்கும் தருணங்கள் அனைத்தும் என்றுமே நம் காதலின் நீங்காத நினைவுகளாகி செதுக்காத கல்வெட்டுகளாய் அழியாத நம் அடையாளங்களாகி போய் விடுகின்றது.

உன்னுடைய அன்புக்கு பாத்திரமாக என்றுமே நான் இருப்பேன் என் நிலவே மறுவார்த்தை பேசாமல் என்னோடு வந்து விடு. என் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை நீ எனக்கு தந்து விடு

உன்னுடைய அன்புக்கு பாத்திரமாக என்றுமே நான் இருப்பேன் என் நிலவே மறுவார்த்தை பேசாமல் என்னோடு வந்து விடு. என் எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை நீ எனக்கு தந்து விடு.

உன் வார்த்தைகளை விட நான் நம்புவது உன் விழிகளையே. நீ சொல்லும் சொற்களில் பொய்கள் கலந்து இருக்கலாம் ஆனால் உன் விழிகள் என்றுமே என்னிடம் பொய் உரைக்காது

உன் வார்த்தைகளை விட நான் நம்புவது உன் விழிகளையே. நீ சொல்லும் சொற்களில் பொய்கள் கலந்து இருக்கலாம் ஆனால் உன் விழிகள் என்றுமே என்னிடம் பொய் உரைக்காது.

அடடா எத்தனை பாஷைகள் இந்த உலகில் இருந்தாலும் என்னவள் கண்களால் பேசும் பார்வை மொழிகள் என்றுமே அழகுதான் எனக்கு

அடடா எத்தனை பாஷைகள் இந்த உலகில் இருந்தாலும் என்னவள் கண்களால் பேசும் பார்வை மொழிகள் என்றுமே அழகுதான் எனக்கு.

என் மனதில் இந்த நிமிடம் இன்னும் கொஞ்ச நேரம் நீளுமா என்று தோன்றும் பார்வைகள் என்ற ஒன்றில் நாம் இருவரும் ஐக்கியம் ஆகும்போது

என் மனதில் இந்த நிமிடம் இன்னும் கொஞ்ச நேரம் நீளுமா என்று தோன்றும் பார்வைகள் என்ற ஒன்றில் நாம் இருவரும் ஐக்கியம் ஆகும்போது.

மனம் கவரும் இனிய காதல் கவிதை படங்கள் 2019

என்ன ஒரு மாயம் இந்த காதலில் மட்டும்...? கண்கள் தானே அவளை பார்த்தது...! பிறகு எதற்காக இந்த மனது இப்படி தேவை இல்லாமல் அலைமோதுகிறது...! அவளை காண சொல்லி கண்களுக்கு வலியுறுத்துகிறதே

என்ன ஒரு மாயம் இந்த காதலில் மட்டும்…? கண்கள் தானே அவளை பார்த்தது…! பிறகு எதற்காக இந்த மனது இப்படி தேவை இல்லாமல் அலைமோதுகிறது…! அவளை காண சொல்லி கண்களுக்கு வலியுறுத்துகிறதே…!

பிரிவு என்பது இந்த உடலுக்கு தானே தவிர மனத்தால் இணைந்த இரு இதயங்களுக்கு அல்லவே....! உன் பாதை எங்கிலும் நிழலாக நான் துணை நிற்பேன் என்றுமே நம் நினைவிருக்கும் வரை

பிரிவு என்பது இந்த உடலுக்கு தானே தவிர மனத்தால் இணைந்த இரு இதயங்களுக்கு அல்லவே….!  உன் பாதை எங்கிலும் நிழலாக நான் துணை நிற்பேன் என்றுமே நம் நினைவிருக்கும் வரை…!

நாம் இருவர் என்று வாழ்வதை விட நேசங்களால் இணைந்து நமக்குள் ஒருவராக வாழ்வோம்...! காதல் என்னும் இந்த உன்னத உணர்வுகளில் இணைவோம் ஒன்றாக காலம் முழுவதும் நன்றாக

நாம் இருவர் என்று வாழ்வதை விட நேசங்களால் இணைந்து நமக்குள் ஒருவராக வாழ்வோம்…! காதல் என்னும் இந்த உன்னத உணர்வுகளில் இணைவோம் ஒன்றாக காலம் முழுவதும் நன்றாக…!

தனக்கு பிடித்த பெண்ணிடம் மட்டுமே விரும்பி பேசும் ஆணும் தன் காதலன் உயர்வுக்கு என்றுமே அவனுக்கு பக்கபலமாக துணை நிற்கும் பெண்ணும் இருக்கும் வரை காதல் என்றுமே காலத்தால் அழியாதவையே

தனக்கு பிடித்த பெண்ணிடம் மட்டுமே விரும்பி பேசும் ஆணும் தன் காதலன் உயர்வுக்கு என்றுமே அவனுக்கு பக்கபலமாக துணை நிற்கும் பெண்ணும் இருக்கும் வரை காதல் என்றுமே காலத்தால் அழியாதவையே.

என்னிடம் கேட்காமலும் என்னையும் அறியாமல் என் ஆள் மனதினுள் நீ காதல் என்ற இடத்தை நீங்காது பிடித்து கொண்டாய்

என்னிடம் கேட்காமலும் என்னையும் அறியாமல் என் ஆள் மனதினுள் நீ காதல் என்ற இடத்தை நீங்காது பிடித்து கொண்டாய்.

உன்னிடம் நான் பேச நினைத்து எடுத்து கொண்ட ஒத்திகை வார்த்தைகள் எல்லாம் உன் பார்வைகளின் ஸ்பரிசத்தில் எங்கேயோ மாயமாகி தான் போனதடி. மீண்டும் ஒரு முறை உன்னிடம் மொழியற்று மௌன வலைக்குள் மாட்டி கொண்டேன்

உன்னிடம் நான் பேச நினைத்து எடுத்து கொண்ட ஒத்திகை வார்த்தைகள் எல்லாம் உன் பார்வைகளின் ஸ்பரிசத்தில் எங்கேயோ மாயமாகி தான் போனதடி. மீண்டும் ஒரு முறை உன்னிடம் மொழியற்று மௌன வலைக்குள்  மாட்டி கொண்டேன்.

காதலிப்பார் யாருமே கடைசி வரை இணைவோமோ? இல்லையோ? என்று நினைத்து காதல் செய்வது இல்லை... எந்தவித எதிர்பார்ப்புகள் இன்றியும், சாதி, இன பேதங்களை கடந்து, மொழி என்ற ஒன்றிற்கு கூட அப்பாற்பட்டு இதயத்தால் ஒன்று சேரும் உண்மை காதலுக்கு எதுவுமே விலையாய் தர முடியாது

காதலிப்பார் யாருமே கடைசி வரை இணைவோமோ? இல்லையோ? என்று நினைத்து காதல் செய்வது இல்லை… எந்தவித எதிர்பார்ப்புகள் இன்றியும், சாதி, இன பேதங்களை கடந்து, மொழி என்ற ஒன்றிற்கு கூட அப்பாற்பட்டு இதயத்தால் ஒன்று சேரும் உண்மை காதலுக்கு எதுவுமே விலையாய் தர முடியாது.

உன் காதல் பார்வைகளில் என்னை தாக்கும்போது எனக்குள் உண்டாகும் மின்னதிர்வுகளில் நான் சற்று ஆடித்தான் போய் விடுகிறேன்

உன் காதல் பார்வைகளில் என்னை தாக்கும்போது எனக்குள் உண்டாகும் மின்னதிர்வுகளில் நான் சற்று ஆடித்தான் போய் விடுகிறேன்.

தமிழ் காதல் கவிதை வரிகள் 2019

பட்டும் படாமல் ஒவ்வொரு விஷயங்களையும் கண்ணாடி போல உணர்த்தும் உன் கண் ஜாடைகள், என் குரல் கேட்க தூங்குவதை போல நடிக்கும் உன் விழிகள், என்னை எதிரில் பார்த்து நீ பேசாமல் போனாலும் உன் மனதில் உள்ள எண்ணங்களை உள்ளதை உள்ளபடியே காட்டி கொடுக்கும் உந்தன் கொலுசுகள் என இவை அனைத்தும் நம் காதலின் அழகான இலக்கணமே

பட்டும் படாமல் ஒவ்வொரு விஷயங்களையும் கண்ணாடி போல உணர்த்தும் உன் கண் ஜாடைகள், என் குரல் கேட்க தூங்குவதை போல நடிக்கும் உன் விழிகள், என்னை எதிரில் பார்த்து நீ பேசாமல் போனாலும் உன் மனதில் உள்ள எண்ணங்களை உள்ளதை உள்ளபடியே காட்டி கொடுக்கும் உந்தன் கொலுசுகள் என இவை அனைத்தும் நம் காதலின் அழகான இலக்கணமே.

பெண்ணே என் உயிரை கூட பரிசாக தருகிறேன் நீ கேட்டால் உன் இதயத்தை மட்டும் என்னிடம் விட்டு செல் அதுபோதும் நான் வாழ்வதற்கு

பெண்ணே என் உயிரை கூட பரிசாக தருகிறேன் நீ கேட்டால் உன் இதயத்தை மட்டும் என்னிடம் விட்டு செல் அதுபோதும் நான் வாழ்வதற்கு.

வானவில்லின் இரு வர்ண அழகையும் ஒன்றாய் சேர்ந்தாற்போல ஒரு அழகான இளம் தேவதையை கண்டேன் அன்று. அவளை கண்டது தான் தாமதம் மதி மயங்கி என்னவளின் பின்னாலே நாள் பொழுதும் தொடருகிறேன் இன்று

வானவில்லின் இரு வர்ண அழகையும் ஒன்றாய் சேர்ந்தாற்போல ஒரு அழகான இளம் தேவதையை கண்டேன் அன்று. அவளை கண்டது தான் தாமதம் மதி மயங்கி என்னவளின் பின்னாலே நாள் பொழுதும் தொடருகிறேன் இன்று.

உன்னை தினமும் காண முடியாவிட்டாலும் காதல் என்ற உணர்வுகளில் மூழ்கி என் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தையும் கவிதைகளாக கொட்டி தீர்க்கிறேன் முப்பொழுதும் உன் கனவுகளுடன்

உன்னை தினமும் காண முடியாவிட்டாலும் காதல் என்ற உணர்வுகளில் மூழ்கி என் மனதில் உள்ள ஆசைகள் அனைத்தையும் கவிதைகளாக கொட்டி தீர்க்கிறேன் முப்பொழுதும் உன் கனவுகளுடன்…

அன்பு கொண்ட நெஞ்சுக்கு தூரம் என்பது குறையாக தெரிவது இல்லை... பாசம் கொண்ட மனங்களுக்கு பிரிவுகள் காண்பது இல்லை... காதல் உள்ள இதயத்தில் வெறுப்புகள் வரவே போவது இல்லை உன்னையும் என்னையும் போல

அன்பு கொண்ட நெஞ்சுக்கு தூரம் என்பது குறையாக தெரிவது இல்லை… பாசம் கொண்ட மனங்களுக்கு பிரிவுகள் காண்பது இல்லை… காதல் உள்ள இதயத்தில் வெறுப்புகள் வரவே போவது இல்லை உன்னையும் என்னையும் போல:)

என் தனிமையின் கேள்விகளுக்கு எல்லாம் விடையாக வந்து ஆதரவு தந்து அவளின் அன்பினால் கொன்று பாசத்தினுள் என்னை பிணைத்து காதலில் கைது செய்தால் "என்னவள்"...

என் தனிமையின் கேள்விகளுக்கு எல்லாம் விடையாக வந்து ஆதரவு தந்து அவளின் அன்பினால் கொன்று பாசத்தினுள் என்னை பிணைத்து காதலில் கைது செய்தால் “என்னவள்”…

அறிவியல் புத்தகத்தில் படித்த வேதியல் மாற்றத்தை உன்னை பார்த்த மாத்திரத்தில் எனக்குள் நிகழ்த்தி விட்டாயே

அறிவியல் புத்தகத்தில் படித்த வேதியல் மாற்றத்தை உன்னை பார்த்த மாத்திரத்தில் எனக்குள் நிகழ்த்தி விட்டாயே…!

எனக்கு தெரியும் சின்னஞ்சிறு எறும்பு இமயமலையை தொட நினைப்பது போலவே உன் மனதில் நான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும்...! முடிவில் கல்லை போன்ற கடினமான உன் மனதை காதலால் கரைக்க தான் போகிறேன் என் அன்பே

எனக்கு தெரியும் சின்னஞ்சிறு எறும்பு இமயமலையை தொட நினைப்பது போலவே உன் மனதில் நான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும்…! முடிவில் கல்லை போன்ற கடினமான உன் மனதை காதலால் கரைக்க தான் போகிறேன் என் அன்பே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.