இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் படங்கள்

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் படங்கள்

அனைவரின் வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமான நிகழ்வே திருமணம். இல்லற வாழ்க்கை மட்டும் நல்லபடியாக அமைந்தால் அதைவிட பெரிதாக ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்ன இருக்கப்போகிறது.

அத்தகைய சிறப்பான நிகழ்வான திருமணம் நல்லபடியாக முற்று பெற பெரியோர் மற்றும் உற்றார் உறவினர்களின் ஆசீர்வாதங்கள் அவசியமாகிறது.

அதனாலே ஊர் கூடி சுற்றம் சூழ நின்று வரவேற்று அனைவரும் ஒன்று கூடி விவாகத்தை நிறைவு செய்கின்றனர்.

இது இப்படி இருந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக நமக்கு முக்கியமான தோழன் அல்லது தோழி, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சில நெருக்கமான நபர்களது திருமணத்திற்கு நாம் செல்ல முடியாமல் இருக்கும் பட்சத்தில் திருமண வாழ்த்து கவிதை நாம் அனுப்பி நமது சந்தோசத்தை வெளிக்காட்டலாம்.

எனவே இந்தபதிவில் உள்ள மணநாள் வாழ்த்துக்கள் கவிதைகள் கட்டாயம் உங்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.

முத்தான திருமண நாள் வாழ்த்து கவிதைகள்

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகசிறந்த நன்னாளே உன் இனிய திருமண நாள். எந்த நாளும் இன்று போன்று அமைந்து உன் துணையோடு வாழ்க்கையை மிகச்சிறப்பாக கொண்டாடு

வாழ்க்கை என்பதன் பொருளுக்கு அர்த்தம் தெரியும் மிகசிறந்த நன்னாளே உன் இனிய திருமண நாள்.

எந்த நாளும் இன்று போன்று அமைந்து உன் துணையோடு வாழ்க்கையை மிகச்சிறப்பாக கொண்டாடு.

திருமணமே நம் வாழ்க்கையின் முக்கிய தருணம் என்ற பெரியோரின் கூற்றுப்படி உங்கள் இருவரின் புரிதல் ஒன்றாகி உங்கள் இல்லறம் அழகாக இந்த நல்ல நாளில் மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்

திருமணமே நம் வாழ்க்கையின் முக்கிய தருணம் என்ற பெரியோரின் கூற்றுப்படி உங்கள் இருவரின் புரிதல் ஒன்றாகி உங்கள் இல்லறம் அழகாக இந்த நல்ல நாளில் மனநிறைவுடன் வாழ்த்துகிறேன்.

என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாள்பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும். என் இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்

என்றுமே சிறப்பாக வாழ்ந்து இருவரும் உயிருக்கு உயிராக இணைபிரியாமல் நாள்பொழுதும் மகிழ்ச்சி பொங்க வாழ வேண்டும்.

என் இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள்.

வானம் போல எங்குமே நீயும் அவளும் நீக்கமற நிறைந்து காதலின் வற்றாத நீரை போல உங்கள் வாழ்வில் புன்னகை என்றுமே நீங்காமல் இருவருக்குள்ளும் ஒற்றுமை தழைத்தோங்கி நீண்ட ஆயுளோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டி வாழ்த்துகிறேன்

வானம் போல எங்குமே நீயும் அவளும் நீக்கமற நிறைந்து காதலின் வற்றாத நீரை போல உங்கள் வாழ்வில் புன்னகை என்றுமே நீங்காமல் இருவருக்குள்ளும் ஒற்றுமை தழைத்தோங்கி நீண்ட ஆயுளோடு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டி வாழ்த்துகிறேன்.

இதுவரை இருந்து வந்த சஞ்சலங்களும் மன குழப்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பொங்க உங்கள் மணநாள் குதூகலமாகவும் என்றுமே உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான நாளாக அமையட்டும் இனிய திருமண வாழ்த்துக்கள்

இதுவரை இருந்து வந்த சஞ்சலங்களும் மன குழப்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பம் பொங்க உங்கள் மணநாள் குதூகலமாகவும் என்றுமே உங்கள் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான நாளாக அமையட்டும் இனிய திருமண வாழ்த்துக்கள்.

கடவுளின் கருணையால் இரு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து இறுதிவரை பிரியாமல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் பரிவன்போடும் அன்யோன்யமாக வாழ எல்லாம் வல்ல அந்த தெய்வம் உங்களை துணை நின்று நடத்தட்டும். என் உள்ளம் கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

கடவுளின் கருணையால் இரு உள்ளங்கள் ஒன்று சேர்ந்து இறுதிவரை பிரியாமல் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல் பரிவன்போடும் அன்யோன்யமாக வாழ எல்லாம் வல்ல அந்த தெய்வம் உங்களை துணை நின்று நடத்தட்டும்.

என் உள்ளம் கனிந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

நீயும் நானும் என்று இன்று வரை வாய் மொழியில் சொல்லி கொண்டிருந்த நாம் இன்று நாம்,நம் என்ற திருமண பந்தத்தில் இணைந்து இணைபிரியாமல் என்றும் உன் கரங்களுடன் என் வாழ்வினை நம் வாழ்வாக மாற்றி இந்நாள் போன்று கடைசி வரை எந்நாளும் நமக்கு பொன்னான நாளாக அமைய அந்த இறைவனை வேண்டுகிறேன்

நீயும் நானும் என்று இன்று வரை வாய் மொழியில் சொல்லி கொண்டிருந்த நாம் இன்று நாம்,நம் என்ற திருமண பந்தத்தில் இணைந்து இணைபிரியாமல் என்றும் உன் கரங்களுடன் என் வாழ்வினை நம் வாழ்வாக மாற்றி இந்நாள் போன்று கடைசி வரை எந்நாளும் நமக்கு பொன்னான நாளாக அமைய அந்த இறைவனை வேண்டுகிறேன்.

பொன்னான திருமண நன்னாள் வாழ்த்து வரிகள்

சுற்றம் சூலமும் வந்து வாழ்த்தி அன்பும் பண்பும் பெருகி கஷ்டம் கவலைகளை எல்லாம் மறந்து உங்கள் எதிர்காலம் என்னும் கனவு எண்ணம் போல சிறக்க வேண்டி உங்கள் திருமண நாளில் நான் மனமார வாழ்த்துகிறேன்

சுற்றம் சூலமும் வந்து வாழ்த்தி அன்பும் பண்பும் பெருகி கஷ்டம் கவலைகளை எல்லாம் மறந்து உங்கள் எதிர்காலம் என்னும் கனவு எண்ணம் போல சிறக்க வேண்டி உங்கள் திருமண நாளில் நான் மனமார வாழ்த்துகிறேன்.

குறையின்றி எல்லா வளங்களும் பெற்று செல்வச்செழிப்புகள் மிகுந்து உற்றார் உறவினர்கள் சூழ சீரும் சிறப்புமாய் இல்லற வாழ்க்கை நல்லறத்தோடு அமையட்டும்

குறையின்றி எல்லா வளங்களும் பெற்று செல்வச்செழிப்புகள் மிகுந்து உற்றார் உறவினர்கள் சூழ சீரும் சிறப்புமாய் இல்லற வாழ்க்கை நல்லறத்தோடு அமையட்டும்.

தினமும் பூத்து மகிழும் பூக்கள் போல என்றுமே புன்சிரிப்போடும் பாசமும் நேசமும் அளவில்லாமல் நிரம்பி உங்கள் தாம்பத்ய வாழ்க்கை என்றுமே புத்தம் பொலிவுற வாழ்த்துகிறேன்

தினமும் பூத்து மகிழும் பூக்கள் போல என்றுமே புன்சிரிப்போடும் பாசமும் நேசமும் அளவில்லாமல் நிரம்பி  உங்கள் தாம்பத்ய வாழ்க்கை என்றுமே புத்தம் பொலிவுற வாழ்த்துகிறேன்.

இறைவன் உன்னவனையோ அல்லது உனக்கான அவளையோ என்றோ சொர்க்கத்தில் நிச்சயித்து விட்டான்... ஆகவே இந்த இறைவனின் கிருபையால் நடைபெறும் இந்த நல்ல நாளில் நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு

இறைவன் உன்னவனையோ அல்லது உனக்கான அவளையோ என்றோ சொர்க்கத்தில் நிச்சயித்து விட்டான்.

ஆகவே இந்த இறைவனின் கிருபையால் நடைபெறும் இந்த நல்ல நாளில் நீங்கள் இருவரும் வாழ்க பல்லாண்டு.

ஊரே கூடி உறவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து தோரணம் வைத்து விழாக்கோலம் பூண்டு மணமக்களை வாழ்த்தும் ஒரு சுபநிகழ்ச்சியே திருமணம்

ஊரே கூடி உறவுகள் எல்லாம் ஒன்றாக இணைந்து தோரணம் வைத்து விழாக்கோலம் பூண்டு மணமக்களை வாழ்த்தும் ஒரு சுபநிகழ்ச்சியே திருமணம்.

எங்கோ பிறந்து வாழ்ந்த இரு இதயங்களை இணைந்து ஒன்றாக இருவரின் வாழ்க்கைக்குள் ஒரு புது உதயம் தரும் சிறந்த தினமே திருமண நாள்

எங்கோ பிறந்து வாழ்ந்த இரு இதயங்களை இணைந்து ஒன்றாக இருவரின் வாழ்க்கைக்குள் ஒரு புது உதயம் தரும் சிறந்த தினமே திருமண நாள்..

கண்ணின் மீது படர்ந்த இமை போல என்றுமே இருவரும் நொடிப்பொழுதும் கூட பிரியாமல் குடும்பம் என்ற பந்தத்தினுள் ஒருங்கிணைந்து வாழ்வீர்களாக

கண்ணின் மீது படர்ந்த இமை போல என்றுமே இருவரும் நொடிப்பொழுதும் கூட பிரியாமல் குடும்பம் என்ற பந்தத்தினுள் ஒருங்கிணைந்து வாழ்வீர்களாக…

இனிக்கும் மணநாள் வாழ்த்துக்கள் கவிதைகள்

காலங்கள் கரைந்தாலும் மாற்றங்கள் பல கண்டாலும் நீங்காமல் புரிதலில் ஒன்றிணைந்து, விட்டு கொடுப்பதில் வள்ளலாகி, தவறுகளை சரி செய்து கொண்டும் அன்பினை இருவரும் பகிர்ந்து கொண்டும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

காலங்கள் கரைந்தாலும் மாற்றங்கள் பல கண்டாலும் நீங்காமல் புரிதலில் ஒன்றிணைந்து, விட்டு கொடுப்பதில் வள்ளலாகி, தவறுகளை சரி செய்து கொண்டும் அன்பினை இருவரும் பகிர்ந்து கொண்டும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

திருமண கோலத்தில் போடும் நல்வரவு போல இனி வரும் காலங்கள் அனைத்திலும் உங்கள் வாழ்க்கையில் நல்லதாகவே அமையட்டும் நற்செயல்கள் நடக்கட்டும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

திருமண கோலத்தில் போடும் நல்வரவு போல இனி வரும் காலங்கள் அனைத்திலும் உங்கள் வாழ்க்கையில் நல்லதாகவே அமையட்டும் நற்செயல்கள் நடக்கட்டும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

செல்வம் வந்தால் ஆடாமல் வசதி வந்ததை பாடாமல் ஏழ்மை நிலையிலும் நிலை மாறாமல் தன்னம்பிக்கை என்ற ஒன்றை இழக்காமல் வாழ்க்கை பக்கத்தை நீங்கள் இந்த திருமண நாளிலிருந்து ஆரம்பியுங்கள்

செல்வம் வந்தால் ஆடாமல் வசதி வந்ததை பாடாமல் ஏழ்மை நிலையிலும் நிலை மாறாமல் தன்னம்பிக்கை என்ற ஒன்றை இழக்காமல் வாழ்க்கை பக்கத்தை நீங்கள் இந்த திருமண நாளிலிருந்து ஆரம்பியுங்கள்.

அக்கினியை சாட்சியாய் வைத்து வாழ்வில் திருமணம் என்னும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த இதயங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

அக்கினியை சாட்சியாய் வைத்து வாழ்வில் திருமணம் என்னும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த இதயங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

உன் வாழ்வில் ஒளிரூட்டும் வண்ணமிகு இந்த திருமண நாள் உனக்கு கோலாகலாமானதாக அமையட்டும். துணையோடு இரு கரங்களை பற்றி வாழ்க்கை பூராவும் புரிதலோடு ஒன்றுபட்டு இனி வரப்போகும் அத்தியாயத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்

உன் வாழ்வில் ஒளிரூட்டும் வண்ணமிகு இந்த திருமண நாள் உனக்கு கோலாகலாமானதாக அமையட்டும்.

துணையோடு இரு கரங்களை பற்றி வாழ்க்கை பூராவும் புரிதலோடு ஒன்றுபட்டு இனி வரப்போகும் அத்தியாயத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்.

நீ,நான் என்று சொல்லும் காலம் போய் நாம்,நாங்கள் என்று சொல்ல காத்து கிடக்கும் இந்த இரு நல்ல நெஞ்சங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்

நீ,நான் என்று சொல்லும் காலம் போய் நாம்,நாங்கள் என்று சொல்ல காத்து கிடக்கும் இந்த இரு நல்ல நெஞ்சங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

அனைத்து உறவுகளும் உன் வழியே நிற்கலாம் ஆனால் துணையாக உன் உயிராக கூடவே இருந்து வாழ்க்கைக்கு வழி காட்டும் சிறந்த துணைவியே உன் வாழ்க்கைத்துணைவி. இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள்

அனைத்து உறவுகளும் உன் வழியே நிற்கலாம் ஆனால் துணையாக உன் உயிராக கூடவே இருந்து வாழ்க்கைக்கு வழி காட்டும் சிறந்த துணைவியே உன் வாழ்க்கைத்துணைவி.

இனிய மணநாள் நல்வாழ்த்துக்கள்.

தித்திக்கும் திருமண நாள் கவிதை படங்கள் மற்றும் மணமக்களுக்கான வாழ்த்துக்கள்

அங்கம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கலாய் பொங்கிட இருவரின் முகமும் பூக்கள் போல மலர்ந்து என்றுமே இனிமையான தருணங்களில் உங்கள் வாழ்க்கை பயணம் செல்ல நான் மனதார வாழ்த்துகிறேன்

அங்கம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கலாய் பொங்கிட இருவரின் முகமும் பூக்கள் போல மலர்ந்து என்றுமே இனிமையான தருணங்களில் உங்கள் வாழ்க்கை பயணம் செல்ல நான் மனதார வாழ்த்துகிறேன்.

இறைவன் வகுத்த இன்னாருக்கு இன்னார் தான் என்று அன்று போட்ட முடுச்சு நிகழ்கிறதோ இன்று... கெட்டிமேளம் முழங்க மாங்கல்ய மன்றத்தில் இணையும் இந்த ப்ரியமான நெஞ்சங்களை பேரன்போடு வாழ்த்துகிறோம்

இறைவன் வகுத்த இன்னாருக்கு இன்னார் தான் என்று அன்று போட்ட முடுச்சு நிகழ்கிறதோ இன்று…

கெட்டிமேளம் முழங்க மாங்கல்ய மன்றத்தில் இணையும் இந்த ப்ரியமான நெஞ்சங்களை பேரன்போடு வாழ்த்துகிறோம் …

இளமை மாறி முதுமை அடைந்தாலும் கூட இந்த மாறாத அன்பும் ஒற்றுமையும் கொண்டு ஒன்றாக கலந்திருங்கள். வாழ்க்கையை இனிமையான தருணங்களாக மாற்றி அமைத்திடுங்கள்... மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்

இளமை மாறி முதுமை அடைந்தாலும் கூட இந்த மாறாத அன்பும் ஒற்றுமையும் கொண்டு ஒன்றாக கலந்திருங்கள். வாழ்க்கையை இனிமையான தருணங்களாக மாற்றி அமைத்திடுங்கள்…

மனம் நிறைந்த திருமண நாள் வாழ்த்துக்கள்…

தித்திக்கும் அழகிய தருணம், ஊரே வந்து வாழ்த்தும் மகத்தான நாள், இரு கரங்கள் இணைய ஒருமனதாக சம்மதிக்கும் உன்னத நாள், காத்திருந்த நாட்கள் எல்லாம் காலாவதி ஆகி இன்று கரம் பிடித்த கையோடு இந்த ஊரையே வலம் வந்து வளம் பெற நடக்கும் சிறந்த தினமே திருமண தினம்

தித்திக்கும் அழகிய தருணம், ஊரே வந்து வாழ்த்தும் மகத்தான நாள், இரு கரங்கள் இணைய ஒருமனதாக சம்மதிக்கும் உன்னத நாள், காத்திருந்த நாட்கள் எல்லாம் காலாவதி ஆகி இன்று கரம் பிடித்த கையோடு இந்த ஊரையே வலம் வந்து வளம் பெற நடக்கும் சிறந்த தினமே திருமண தினம்…

இரு இல்லங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு பெற்று அண்டை அயலார்களின் நல்வரவுடன் தாம்பத்திய வாழ்க்கையை தேடி செல்லும் இந்த இரு புதிய பூக்களுக்கு என் மனமிகு திருமண வாழ்த்துக்கள்

இரு இல்லங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு பெற்று அண்டை அயலார்களின் நல்வரவுடன் தாம்பத்திய வாழ்க்கையை தேடி செல்லும் இந்த இரு புதிய பூக்களுக்கு என் மனமிகு திருமண வாழ்த்துக்கள்.

சிவனும் பார்வதியும் போல இருவரும் எப்பொழுதுமே நீக்கமற நிறைந்து ஒரே உணர்வுடன் இருவரில் ஒருவராக கலந்து சிறப்பாக வாழ கோடான கோடி வாழ்த்துக்கள்

சிவனும் பார்வதியும் போல இருவரும் எப்பொழுதுமே நீக்கமற நிறைந்து ஒரே உணர்வுடன் இருவரில் ஒருவராக கலந்து சிறப்பாக வாழ கோடான கோடி வாழ்த்துக்கள்.

கணவன் மனைவி உறவு என்பது யாருக்கு யார் துணை என்று தேவன் கணக்கிட்டு அன்று போட்ட ஒரு முடிச்சு இன்று நிறைவு பெறுகிறது... என்றுமே சீரும் சிறப்பும் பெற்று நல்வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்

கணவன் மனைவி உறவு என்பது யாருக்கு யார் துணை என்று தேவன் கணக்கிட்டு அன்று போட்ட ஒரு முடிச்சு இன்று நிறைவு பெறுகிறது…

என்றுமே சீரும் சிறப்பும் பெற்று நல்வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்.

சிறந்த திருமண நல்வாழ்த்துக்கள் கவிதைகள்

உங்கள் வாழ்க்கையில் திருமண பந்தம் எனும் புது அஸ்திவாரம் பிறகும் இந்த நாளிலே மாங்கல்ய பாக்கியம் தழைத்து குடும்பம் விருத்தி பெற்று ஏனைய செல்வங்களும் நிறைந்து வளம் பெற வேண்டி எல்லா வல்ல அந்த இறைவனை வணங்கி இந்த புதுமண தம்பதிகளை வாழ்த்துகிறேன்

உங்கள் வாழ்க்கையில் திருமண பந்தம் எனும் புது அஸ்திவாரம் பிறகும் இந்த நாளிலே மாங்கல்ய பாக்கியம் தழைத்து குடும்பம் விருத்தி பெற்று ஏனைய செல்வங்களும் நிறைந்து வளம் பெற வேண்டி எல்லா வல்ல அந்த இறைவனை வணங்கி இந்த புதுமண தம்பதிகளை வாழ்த்துகிறேன்.

இன்பத்தில் இணைத்து துன்பத்தில் தோள் கொடுத்து கடமையில் கண்ணாயிருந்து பிடிவாத குணங்களில் விட்டு கொடுத்து உறவுகளுடன் ஒன்றாக கலந்து தாம்பத்ய வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி சிரிப்போடு வாழ்ந்து காட்டுங்கள். இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

இன்பத்தில் இணைத்து துன்பத்தில் தோள் கொடுத்து கடமையில் கண்ணாயிருந்து பிடிவாத குணங்களில் விட்டு கொடுத்து உறவுகளுடன் ஒன்றாக கலந்து தாம்பத்ய வாழ்க்கைக்கான அர்த்தத்தை உணர்ந்து மொத்தத்தில் குடும்பம் என்ற ஒன்றில் சங்கமம் ஆகி சிரிப்போடு வாழ்ந்து காட்டுங்கள்.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

வாழ்க்கையில் நாம் நினைவு வைத்து கொள்ள வேண்டியது என்றுமே மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே. திங்களின் ஒளியும் தென்றலின் சாரலும் கரங்களில் தீண்டி துளிர் விட துவங்கும் இன்பம் பொங்கும் இந்த மங்கலகரமான நாளிலே மணமக்கள் எல்லா சிறப்புகளுடனும் வாழ முத்தான நல்வாழ்த்துக்கள்

வாழ்க்கையில் நாம் நினைவு வைத்து கொள்ள வேண்டியது என்றுமே மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே.

திங்களின் ஒளியும் தென்றலின் சாரலும் கரங்களில் தீண்டி துளிர் விட துவங்கும் இன்பம் பொங்கும் இந்த மங்கலகரமான நாளிலே மணமக்கள் எல்லா சிறப்புகளுடனும் வாழ முத்தான நல்வாழ்த்துக்கள்.

அழகான திங்களின் ஒளியில் இடை இடையே தென்றலோடு கலந்து வரும் குளிர் காற்றில் கீதம் நெஞ்சோரமாய் முத்தமிடும் அதிகாலை வேளையில் நல்ல உறவான உள்ளங்கள் கூர்த்த மாலைகளை இரு இதயங்கள் சூடி கெட்டிமேல சப்தங்களில் கூடவே இணையும் நாதஸ்வர கானமும் கலந்து உற்றார் உறவினர்கள் எழுந்து நின்று அர்ச்சனையிட்டு இறுதியில் மூன்று முடுச்சுகளில் நிறைவு பெறும் மகத்தான சுபயோக சுபதினம்

அழகான திங்களின் ஒளியில் இடை இடையே தென்றலோடு கலந்து வரும் குளிர் காற்றில் கீதம் நெஞ்சோரமாய் முத்தமிடும் அதிகாலை வேளையில் நல்ல உறவான உள்ளங்கள் கூர்த்த மாலைகளை இரு இதயங்கள் சூடி கெட்டிமேல சப்தங்களில் கூடவே இணையும் நாதஸ்வர கானமும் கலந்து  உற்றார் உறவினர்கள் எழுந்து நின்று அர்ச்சனையிட்டு இறுதியில் மூன்று முடுச்சுகளில் நிறைவு பெறும் மகத்தான சுபயோக சுபதினம்.

பல வர்ண பூக்கள் ஒன்று சேர்த்து அலங்கரித்த மாலைகளை பரிமாறி கடவுளின் அனுக்கிரகம் காண அவரின் துதி பாடி மந்திரம் ஜபித்து பொன்னான உடை உடுத்தி நிலவொளியில் அழகையே மிஞ்சும் விதம் அலங்கரித்து தோழிகள் இணைந்து மங்கள தேவதையை மணமேடைக்கு கூட்டி வந்து அமர வைத்து சகல மங்கள வாத்தியங்களும் முழங்க கெட்டிமேளம் சொல்லுக்காக காத்திருந்த மக்கள் கூட்டம் அனைவரும் ஒருங்கிணைந்து அர்ச்சனை தூவி வாழ்த்தும் சுப தினமே திருமண தினம். என்றுமே வாழ்க வளமுடன்

பல வர்ண பூக்கள் ஒன்று சேர்த்து அலங்கரித்த மாலைகளை பரிமாறி கடவுளின் அனுக்கிரகம் காண அவரின் துதி பாடி மந்திரம் ஜபித்து பொன்னான உடை உடுத்தி நிலவொளியில் அழகையே மிஞ்சும் விதம் அலங்கரித்து தோழிகள் இணைந்து மங்கள தேவதையை மணமேடைக்கு கூட்டி வந்து அமர வைத்து சகல மங்கள வாத்தியங்களும் முழங்க கெட்டிமேளம் சொல்லுக்காக காத்திருந்த மக்கள் கூட்டம் அனைவரும் ஒருங்கிணைந்து அர்ச்சனை தூவி வாழ்த்தும் சுப தினமே திருமண தினம். என்றுமே வாழ்க வளமுடன்.

மேலும் பல பயனுள்ள பதிவுகள்:-

வாழ்க்கையின் வெற்றிக்கான தன்னம்பிக்கை துளிகள் | ஊக்குவிக்கும் கவிதைகள்

சிறந்த அண்ணா தம்பி சகோதரன் பிறந்த நாள் வாழ்த்து கவிதை

சிறந்த அம்மா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | அன்னை தாய் வாழ்த்து

இனிய காதல் கவிதைகள் 2019

சிறந்த நண்பனுக்காக 10 பிறந்த நாள் வாழ்த்து கவிதை

மனதை தொடும் தமிழ் கவிதைகள் | Tamil Kavithai Images

தமிழ் வாழ்க்கை தத்துவம் கவிதை | நல்ல அறிவுரை வரிகள்

காதல் தோல்வி கவிதை படங்கள் | Love Failure Images

இனிய காதலன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

தமிழ் மழை கவிதைகள் | இயற்கை கவிதைகள்

அன்பான கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதைகள்

வாழ்க்கையின் வெற்றிக்கான தன்னம்பிக்கை துளிகள் | ஊக்குவிக்கும் கவிதைகள்

வாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் தமிழ் கவிதை வரிகள் படங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.