உங்கள் பிள்ளையின் நலனில் எப்போதும் அக்கறை கொள்ளும் பெற்றோரா நீங்கள்? உங்கள் அபிமான மகனின் பிறந்த நாளில் அவனை வாழ்த்தி உங்கள் பாசத்தை வெளிக்காட்டுங்கள். இந்த பதிவில் உங்கள் அன்பு மகனுக்கான பிறந்த நாள் வாழ்த்துக்களை நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.
எதிலும் கவனமுடனும் பதற்றம் காட்டாமல் அனைத்து காரியங்களிலும் நீ வெற்றி வாகை சூட இந்த புது வருடமா ன உனது பிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என் செல்ல மகனே.
காண கிடைக்காத தவம் இருந்து பெற்ற என் அழகிய மகனுக்கு அவனது பிறந்த நாளில் அனைத்தும் எண்ணப்படி நிறைவேற என் ஆசீர்வாதங்கள்.
என்றுமே குறைவில்லாத நீண்ட ஆயுள், மனநிறைவுடன் கூடிய அமைதியான வாழ்க்கை, எந்த காலமும் வற்றாத செல்வங்கள் என அனைத்தும் உன் பிறந்த தினம் காணும் இன்று முதல் உன்னை வந்து அடையட்டும் என் அருமை புதல்வனே.
இந்த சிறப்பான உன் பிறந்த நாளான இன்று போல உன் வாழ்க்கையில் அனைத்து நாட்களும் இன்பமாகவும் குதூகலத்தோடும் எப்பொழுதும் நல்லதாகவே நடக்க வாழ்த்துக்கள்.
உன் பிறந்த தினமான இன்று உனக்கும் உன் சுற்றத்தாருக்கும் இனிப்பான நாளாக அமைய வாழ்த்துகிறேன்.
அன்று உன்னை பத்து மாதம் உயிரில் வைத்து சுமந்தேன். இன்று உன்னை காணாமல் ஒரு தாயாக உன் நினைவுகளை மனதில் வைத்து சுமந்து வருகிறேன் சுகமாக.
எவ்வளவு தொலைவில் நீ எங்களை விட்டு பிரிந்தாலும் என்றுமே நீடூழி குறைகளை காணாது நீ வாழ இந்த இறைவன் நிற்சயம் வழி வகுப்பான் என நம்புகிறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என்றுமே நிறைந்த ஆரோக்கியத்தோடு நிறைவான தன்னம்பிக்கையுடன் உன் வாழ்வினை வெல்ல இந்த பிறந்த நாளில் வாழ்த்தும் உனது குடும்பத்தோர்.
உனது திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கவும், உன் எதிர்காலம் மிக சிறப்பாகவும், வெற்றி என்னும் ஒரே நேர்கோட்டில் நீ தங்கு தடையில்லாமல் பயணிக்க உனக்குகந்த இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்.
தன் பிள்ளை வளர்வதை கண்குளிர பார்ப்பதை விட பெற்றோர்களுக்கு வேறு என்ன பெரியதாக மகிழ்ச்சி இருக்க முடியும்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்னுடைய செல்ல மகனே.
இந்த விசேஷமான உன்னுடைய பிறந்த நாள் போல எல்லா நாட்களும் உன் எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகவும் மற்றும் எல்லா வல்ல அந்த இறைவன் உன் கூடவே இருந்து அவனின் அனுக்கிரகத்தால் வாழ்க்கையை வெல்ல வாழ்த்துகிறேன்.
Comments
உன் பிறந்த தினமான இன்று உனக்கும் உன் சுற்றத்தாருக்கும் இனிப்பான நாளாக அமைய வாழ்த்துகிறேன்.