கடந்து போன காலங்களும்
மறந்து போன நினைவுகளும்
மனித வாழ்வின் பயணம் – அது
கை நழுவவிட்ட தருணங்கள்
முயற்சி தொடர்ச்சியானால்
இழந்தவையெல்லாம் பெறும்
வீரத்தின் விளைநிலம் – மனம்
சொல்லும் தன்னம்பிக்கை
இதுவரை நடந்ததை இனி
நினைத்து வருந்துவதைவிட
நடக்க வேண்டியதை – உன்
சிந்தையில் வைத்துப் பார்
இருக்கும் நிலையைக் கொண்டு
இயங்கத் தொடங்கி விட்டால்
எடுக்கும் காரியங்கள் – எளிதில்
வெற்றியுடன் முடிந்திடுமே.
– விகந்தன்