உன்னாலே போனது என் உறக்கம், நீ மட்டுமே வேண்டும் என்றும் எனக்கும். பாதை எங்கும் தேடுகிறேன் உன்னை தினமும், என்னை கொல்லாமல் கொல்கிறாய் நீ ஒவ்வொரு கணமும். நீ என் அருகிலே இருந்தால் தான் என் வாழ்வில் வெளிச்சம், உன்னை தேடியே போனது என் நாட்கள் அனைத்தும். ஆயுள் கைதியாய் என்னை உன் சிறைக்குள்ளே தள்ளாதே , உன் அருகிலே இல்லாமல் என் மனம் இன்று தள்ளாடுதே. என் வாழ்நாள் முழுவதும் நான் உனக்காக காத்திருப்பேன், உன் விழிகளின் இமையாய் என்றென்றும் உன்னோடு கலந்திருப்பேன். உன்னோடு நான் வாழ இந்த யுகங்கள் பத்தாது, நீ இன்றி போனாலும் என் இதயம் தாங்காது. உன் மனதோடு உறவாட தினம் இரவிலே விழித்திருப்பேன், இரவோடு நிலவாய் தினம் தனிமையில் காத்திருப்பேன். உன் ஒற்றை வார்த்தை போதும் என் மனம் மகிழ்வதற்கு நீ இல்லாமல் போனால் இந்த உயிர் வாழ்வது எதற்கு? தேடாமல் தேடி கிடைத்த பொக்கிஷம் போல தான் நீ, உன் பிரிவிலே வாழும் வாசமில்லா மலராக நான். நீ மட்டும் போதும் என் வாழ்க்கை பயணம் முழுவதும், வேறு ஒன்றும் வேண்டாம் என் உயிர் பிரியும் வரையிலும்…