உள்ளம் கவரும் அப்பா கவிதைகள் (தந்தை தமிழ் கவிதை)

நான் எழுதும் தமிழ் கவிதையில் நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து என் அப்பா அம்மா

நான் எழுதும் தமிழ் கவிதையில் நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து என் அப்பா அம்மா

நான் எழுதும் தமிழ் கவிதையில் நான் கண்ட மிக சிறந்த மூன்று எழுத்து என் “அப்பா” “அம்மா”.

நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் அப்பா

நம்மிடம் அடுத்தவர் காட்டும் நேசம் கண்டிப்பாக எதையோ எதிர்பார்த்தே நிற்கும் ஆனால் சற்றும் சுயநல நோக்கம் இல்லாமல் எப்போதும் நம் நலனை விரும்பும் நலன் விரும்பி நம் “அப்பா”.

தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில்

தந்தையின் கடல் அளவு கோபம் கூட நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில்.

அம்மாவின் பாசம் கருணையில் தெரியும் அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும்

அம்மாவின் பாசம் கருணையில் தெரியும் அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும்.

தன் குடும்ப நலனில் அதிக அக்கறை கொண்டதன் தாக்கமே தந்தையின் கோபம் சற்று யோசித்து பார்த்தால் அவரின் கோபத்திலும் நியாயம் கலந்து இருக்கும்

தன் குடும்ப நலனில் அதிக அக்கறை கொண்டதன் தாக்கமே தந்தையின் கோபம் சற்று யோசித்து பார்த்தால் அவரின் கோபத்திலும் நியாயம் கலந்து இருக்கும்.

நான் தெய்வத்திடம் வேண்டினேன், "என் அப்பாவை போல என்னை பார்த்து கொள்ள ஒரு கணவன் தேவை...!" தெய்வம் சொன்னது, "மிகவும் பேராசை கொள்கிறாயே என்று

நான் தெய்வத்திடம் வேண்டினேன், “என் அப்பாவை போல என்னை பார்த்து கொள்ள ஒரு கணவன் தேவை…!” தெய்வம் சொன்னது, “மிகவும் பேராசை கொள்கிறாயே  என்று…!”.

அப்பா என்ற ஒன்றின் இலக்கணத்தில் அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம், வெகுளித்தனம் என இவை அனைத்தும் அடங்கி விடும்

அப்பா என்ற ஒன்றின் இலக்கணத்தில் அன்பு, பாசம், பரிவு, நேசம், செல்லம், வெகுளித்தனம் என இவை அனைத்தும் அடங்கி விடும்.

எனக்கு முன்பே பூமியில் பிறந்து, என்னை காக்க வேண்டி அவரின் மகளாக பெற்று எடுத்து, என்னை கண்ணில் வைத்து தாங்கும் தேவதூதன் என் செல்ல அப்பா

எனக்கு முன்பே பூமியில் பிறந்து, என்னை காக்க வேண்டி அவரின் மகளாக பெற்று எடுத்து, என்னை கண்ணில் வைத்து தாங்கும் தேவதூதன் என் செல்ல “அப்பா”.

நீங்கள் என்னை பார்த்து கொள்ளும் விதம் போல் நானும் உங்கள் கடைசி காலத்தில் பார்த்து கொண்டு என் நன்றியை செலுத்துவேன் ஆருயிர் தந்தையே

நீங்கள் என்னை பார்த்து கொள்ளும் விதம் போல் நானும் உங்கள் கடைசி காலத்தில் பார்த்து கொண்டு என் நன்றியை செலுத்துவேன் ஆருயிர் தந்தையே.

சிறந்த தகப்பன் என்பவன் தன் வாழ்க்கையில் சந்தித்த தடுமாற்றங்களையும், அனுபவங்களையும் தன் பிள்ளை சந்திக்க கூடாது என்று நினைப்பவன்

சிறந்த தகப்பன் என்பவன் தன் வாழ்க்கையில் சந்தித்த தடுமாற்றங்களையும், அனுபவங்களையும் தன் பிள்ளை சந்திக்க கூடாது என்று நினைப்பவன்.

என் வாழ்க்கையில் நான் அடைந்த வெற்றிக்குள் அடங்கி நிற்கிறது என் தந்தை எனக்காக செய்த தியாகங்கள் கஷ்டங்கள்

என் வாழ்க்கையில் நான் அடைந்த வெற்றிக்குள் அடங்கி நிற்கிறது என் தந்தை எனக்காக செய்த தியாகங்கள், கஷ்டங்கள்.

வாழ்க்கை என்பது மிக எளிது நமக்கு கற்று கொடுக்கும் ஆசிரியர் நம் தந்தையாக இருந்தால்

வாழ்க்கை என்பது மிக எளிது நமக்கு கற்று கொடுக்கும் ஆசிரியர் நம் தந்தையாக இருந்தால்.

பள்ளிக்கு அன்று நீங்கள் என்னை காட்டிலும், மேட்டிலும் மிதிவண்டியில் சுமந்து வந்து விடுவீர்கள். இன்று என்னிடம் ஆடம்பர கார், பங்களா என எல்லாமே இருந்தும் நீங்கள் இல்லாமல் வெறுமையாய் உணர்கிறேன்

பள்ளிக்கு அன்று நீங்கள் என்னை காட்டிலும், மேட்டிலும் மிதிவண்டியில் சுமந்து வந்து விடுவீர்கள். இன்று என்னிடம் ஆடம்பர கார், பங்களா என எல்லாமே இருந்தும் நீங்கள்  இல்லாமல் வெறுமையாய் உணர்கிறேன்.

அலுவலகம் முடிந்து வந்ததும் வராததுமாக என் தந்தை அன்னையிடம் கேட்கும் ஒரே கேள்வி நம்ம பையன் சாப்பிட்டானா

அலுவலகம் முடிந்து வந்ததும், வராததுமாக என் தந்தை அன்னையிடம்  கேட்கும் ஒரே கேள்வி “நம்ம பையன் சாப்பிட்டானா?”.

தகப்பனின் கண்டிப்பை உணராத பிள்ளைகள் கடைசியில் வருந்துவர், வாழ்விலே கலக்குவார்

தகப்பனின் கண்டிப்பை  உணராத பிள்ளைகள் கடைசியில் வருந்துவர், வாழ்விலே கலக்குவார்.

நல்ல நடத்தையை யாரும் கற்பிக்க முடியாது தந்தையை தவிர இந்த உலகில்

நல்ல நடத்தையை யாரும் கற்பிக்க முடியாது தந்தையை தவிர இந்த உலகில்.

பொறுப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல நீ ஒரு அப்பாவாகும் சமயம் அதை நீ கட்டாயம் உணர்வாய்

பொறுப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல நீ ஒரு அப்பாவாகும் சமயம் அதை நீ கட்டாயம் உணர்வாய்.

உனக்காக வாழ்வின் இறுதி வரையிலும் போராடும் ஒரு உறவு தான் அப்பா அதை நீ என்றுமே உதாசீனப்படுத்திவிடாதே

உனக்காக வாழ்வின் இறுதி வரையிலும் போராடும் ஒரு உறவு தான் “அப்பா” அதை நீ என்றுமே உதாசீனப்படுத்திவிடாதே.

முயற்சி என்பது எல்லா விஷயங்களிலும் நாம் போராடி பார்ப்பது ஊக்குவிப்பு என்பது நமக்காக இருக்கும் ஒரு ஜீவன்(அப்பா) நம்மை மனதளவில் பலப்படுத்துவது

முயற்சி என்பது எல்லா விஷயங்களிலும் நாம் போராடி பார்ப்பது ஊக்குவிப்பு என்பது நமக்காக இருக்கும் ஒரு ஜீவன்(அப்பா) நம்மை மனதளவில் பலப்படுத்துவது.

ஒரு பெண்ணின் மனதில் ஒரு ஆண் மகனின் மீது காதல் முதலில் உண்டாகிறது என்றால் அது தந்தையாக தான் இருக்கும்

ஒரு பெண்ணின் மனதில் ஒரு ஆண் மகனின் மீது காதல் முதலில் உண்டாகிறது என்றால் அது தந்தையாக தான் இருக்கும்.

நான் பிறந்த போது என் பெயரின் பின்னால் வரும் முதல் எழுத்து நீ தான், இன்று என் வாழ்க்கையை அழகாய் மாற்றி கொடுத்து என்னை நல்லபடியாக கரை சேர்க்க என் பின்னால் நிற்பதும் நீ மட்டும் தான்

நான் பிறந்த போது என் பெயரின் பின்னால் வரும் முதல் எழுத்து நீ தான், இன்று என் வாழ்க்கையை அழகாய் மாற்றி கொடுத்து என்னை நல்லபடியாக கரை சேர்க்க என் பின்னால் நிற்பதும் நீ மட்டும் தான்.

தன்னுடைய ஆழமான அன்பை உள்ளே மனதில் பூட்டி வைத்து கொண்டு வெளியே தன் மகன் எதிரியாய் நினைத்தாலும் அவன் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தும் தந்தை போல் யாரேனும் உளரோ இந்த உலகிலே

தன்னுடைய ஆழமான அன்பை உள்ளே மனதில் பூட்டி வைத்து கொண்டு வெளியே தன் மகன் எதிரியாய் நினைத்தாலும் அவன் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தும் தந்தை போல் யாரேனும் உளரோ இந்த உலகிலே…!

அந்த நாட்களில் என் அப்பாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு, ஓடி பிடித்து, ஒளிந்து விளையாடும் நினைவுகள் இன்று நினைத்தாலும் கண்கள் கலங்கி விடுகிறது

அந்த நாட்களில் என் அப்பாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு, ஓடி பிடித்து, ஒளிந்து விளையாடும் நினைவுகள் இன்று நினைத்தாலும் கண்கள் கலங்கி விடுகிறது.

என்ன தான் அன்னை என்னை மார்போடு அணைத்து என்னுடன் கொஞ்சி விளையாடினாலும் என் அப்பா உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடும் ஆனந்தமே எனக்கு தனி தான்

என்ன தான் அன்னை என்னை மார்போடு அணைத்து என்னுடன் கொஞ்சி விளையாடினாலும் என் அப்பா உங்கள் தோள்களில் சாய்ந்து விளையாடும் ஆனந்தமே எனக்கு தனி தான்.

எவ்வளவு செலவு ஆனாலும் சரி நான் இருக்கிறேன் நீ உனக்கு பிடித்த ஒன்றை தேர்ந்து எடுத்து படி என்று சொல்லும் மனம் தந்தையை தவிர வேறு எவருக்கு வரும்

“எவ்வளவு செலவு ஆனாலும் சரி நான் இருக்கிறேன் நீ உனக்கு பிடித்த ஒன்றை தேர்ந்து எடுத்து படி” – என்று சொல்லும் மனம் தந்தையை தவிர வேறு எவருக்கு வரும்?

சர்வமும் எங்களுக்காக உழைத்து தேய்ந்த என் கருணை கடல் அப்பாவுக்கு தெரிந்தது எல்லாம் வீடு,வாசல், பிள்ளைகள் மட்டுமே

சர்வமும் எங்களுக்காக உழைத்து தேய்ந்த என் கருணை கடல் அப்பாவுக்கு தெரிந்தது எல்லாம் வீடு,வாசல், பிள்ளைகள் மட்டுமே.

சுதந்திர போராட்ட தியாகிகளை நான் பார்த்தது கிடையாது என் குடும்பத்தின் தியாகி என்றால் உன்னை தான் சொல்வேன் பெருமிதமாக என் அன்பு தந்தையே

சுதந்திர போராட்ட தியாகிகளை நான் பார்த்தது கிடையாது என் குடும்பத்தின் தியாகி என்றால் உன்னை தான் சொல்வேன் பெருமிதமாக என் அன்பு தந்தையே.

அவர் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது ஆனால் அவர் சொல்வது எப்போதுமே என் நன்மைக்காகவே இருக்கும் நல்லதாகவே நடக்கும்

அவர் நல்லவரா கெட்டவரா என்று எனக்கு தெரியாது ஆனால் அவர் சொல்வது எப்போதுமே என் நன்மைக்காகவே இருக்கும் நல்லதாகவே நடக்கும்.

தந்தையும் மகனும் நண்பர்களாக பழகினால் அந்த உறவு இறைவனால் கிடைக்க பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும்

தந்தையும் மகனும் நண்பர்களாக பழகினால் அந்த உறவு இறைவனால் கிடைக்க பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும்.

கடவுளிடம் வரம் வாங்க கோவிலுக்கு செல்கிறோம் அந்த கடவுளே வரமாக எப்போதும் என் அருகில் இருக்கும் என் இதய தெய்வம் தான் எனது அப்பா

கடவுளிடம் வரம் வாங்க கோவிலுக்கு செல்கிறோம் அந்த கடவுளே வரமாக எப்போதும் என் அருகில் இருக்கும் என் இதய தெய்வம் தான் எனது “அப்பா”.

ஒரு தாய் தன் பிள்ளையை பத்து மாதம் சுமக்கிறாள் கருவறை வரையில் தந்தை பிள்ளையை சுமப்பான் தன் கல்லறை வரையிலும். இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

ஒரு தாய் தன் பிள்ளையை பத்து மாதம் சுமக்கிறாள் கருவறை வரையில் தந்தை பிள்ளையை சுமப்பான் தன் கல்லறை வரையிலும். இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.

ஒரு தந்தை தன் குழந்தையிடம் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த குழந்தையின் ஒழுக்கம் ஆரம்பமாகின்றது

ஒரு தந்தை தன் குழந்தையிடம் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே அந்த குழந்தையின் ஒழுக்கம் ஆரம்பமாகின்றது.

இந்த உலகில் யாருமே தர முடியாத மிகப்பெரிய விலை மதிப்பு இல்லாத பொக்கிஷம் தந்தையின் அன்பு. அனைவர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

இந்த உலகில் யாருமே தர முடியாத மிகப்பெரிய விலை மதிப்பு இல்லாத பொக்கிஷம் தந்தையின் அன்பு. அனைவர்க்கும் இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

என் தேவையை உணர்ந்து குறை ஒன்றும் இல்லாமல் சக்திக்கு மீறி இருந்தாலும் மனமுவந்து செய்யும் நம் தந்தை எனும் தெய்வம் இந்த உலகில் வாழ்வதால் தான் என்னவோ இன்னமும் பாசம் என்ற ஒன்று வாழ்ந்து வருகிறது

என் தேவையை உணர்ந்து குறை ஒன்றும் இல்லாமல் சக்திக்கு மீறி இருந்தாலும் மனமுவந்து செய்யும் நம் தந்தை எனும் தெய்வம் இந்த உலகில் வாழ்வதால் தான் என்னவோ இன்னமும் பாசம் என்ற ஒன்று வாழ்ந்து வருகிறது.

தந்தை கடிந்து கொள்வதை பொறுத்து கொள்ளும் மகனே நாளைய தலைமுறையின் நாயகன்

தந்தை கடிந்து கொள்வதை பொறுத்து கொள்ளும் மகனே நாளைய தலைமுறையின் நாயகன்.

என் அப்பாவின் முன்கோபம் கூட நியாயம் தான் அவரை போல் நானும் வாழ்க்கையில் படிக்காமல் கஷ்டப்பட்டு விட கூடாது என்று நினைப்பதனால்

என் அப்பாவின் முன்கோபம் கூட நியாயம் தான் அவரை போல் நானும் வாழ்க்கையில் படிக்காமல் கஷ்டப்பட்டு விட கூடாது என்று நினைப்பதனால்.

என் அன்பு தந்தையே, உன் போல் என்மேல் இவ்வளவு அக்கறை கொள்ள யாரும் இல்லை இந்த பூமியிலே, உன் பாச பிணைப்பால் என்றென்றும் நாள் பொழுதும் கிடப்பேன் உங்கள் தோள்களிலே, அன்பு என்ற ஒன்றின் அடையாளமே நீங்கள் மட்டும் தான், நீங்கள் சொல்லி கொடுத்த வாழ்க்கை பாடம் புரிகிறது இந்த நாட்களில் தான், உனக்கு என்று ஒன்றுமே இல்லையே ஆனால் நான் கேட்பதை எல்லாம் நீ செய்யாமல் இருந்தது இல்லையே, கடவுள் உண்டு என்றால் அவரிடம் நான் உங்களையே கேட்பேன் வரமாக ஏழு பிறவியிலும் நீங்கள் தான் வேண்டும் என் தந்தையாக

என் அன்பு தந்தையே, உன் போல் என்மேல் இவ்வளவு அக்கறை கொள்ள யாரும் இல்லை இந்த பூமியிலே, உன் பாச பிணைப்பால் என்றென்றும் நாள் பொழுதும் கிடப்பேன் உங்கள் தோள்களிலே, அன்பு என்ற ஒன்றின் அடையாளமே நீங்கள் மட்டும் தான், நீங்கள் சொல்லி கொடுத்த வாழ்க்கை பாடம் புரிகிறது இந்த நாட்களில் தான், உனக்கு என்று ஒன்றுமே இல்லையே ஆனால் நான் கேட்பதை எல்லாம் நீ செய்யாமல் இருந்தது இல்லையே, கடவுள் உண்டு என்றால் அவரிடம் நான் உங்களையே கேட்பேன் வரமாக ஏழு பிறவியிலும் நீங்கள் தான் வேண்டும் என் தந்தையாக.

மகள் கண்களில் தூசியை கூட தங்க விட மாட்டான், அவளின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பவனே தந்தை

மகள் கண்களில் தூசியை கூட தங்க விட மாட்டான், அவளின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பவனே தந்தை.

ஒரு பெண் விரும்பும் முதல் ஆண்மகன் அவளின் அப்பா என்றால் அது மிகையாகாது

ஒரு பெண் விரும்பும் முதல் ஆண்மகன் அவளின் அப்பா என்றால் அது மிகையாகாது.

பெண் குழந்தை பிறந்ததை தந்தை சுமையாக என்றும் நினைப்பது இல்லை மாறாக சுகமாக நெஞ்சினில் சுமப்பான்

பெண் குழந்தை பிறந்ததை தந்தை சுமையாக என்றும் நினைப்பது இல்லை மாறாக சுகமாக நெஞ்சினில் சுமப்பான்.

அனுதினமும் அலுவலக அலுப்பு, அன்றாடம் குடும்ப பாரம், சொந்த வீட்டு கடன், தன் பிள்ளையின் கல்வி கடன், இதர செலவுகள் என அனைத்தையும் தன் தோள்களில் மேல் போட்டு கொண்டு சுமைதாங்கியை போல் வாழ்ந்து வரும் அனைத்து தந்தையர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள்

அனுதினமும் அலுவலக அலுப்பு, அன்றாடம் குடும்ப பாரம், சொந்த வீட்டு கடன், தன் பிள்ளையின் கல்வி கடன், இதர செலவுகள் என அனைத்தையும் தன் தோள்களில் மேல் போட்டு கொண்டு சுமைதாங்கியை போல் வாழ்ந்து வரும் அனைத்து தந்தையர்களும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.

தந்தையும் குழந்தை ஆகிறான் தன் பிள்ளை தன் மீது ஏறி அமர்ந்து விளையாடும்போது

தந்தையும் குழந்தை ஆகிறான் தன் பிள்ளை தன் மீது ஏறி அமர்ந்து விளையாடும்போது.

முடிந்த வரை போராடி பிள்ளையை கரை சேர்த்ததற்காக ஒரு தந்தைக்கு பரிசாக கிடைத்தது முதியோர் இல்லம்

முடிந்த வரை போராடி பிள்ளையை கரை சேர்த்ததற்காக ஒரு தந்தைக்கு பரிசாக கிடைத்தது “முதியோர் இல்லம்”.

இங்கு எல்லாருமே தந்தை ஆகலாம் ஆனால் தன் குழந்தை மீது முழு அக்கறை கொள்பவன் மட்டுமே சிறந்த தகப்பன் ஆகிறான்

இங்கு எல்லாருமே தந்தை ஆகலாம் ஆனால் தன் குழந்தை மீது முழு அக்கறை கொள்பவன் மட்டுமே சிறந்த தகப்பன் ஆகிறான்.

தன்னோட மகனுக்கு அவனின் அப்பாவின் கடைசி கடிதம் "என்னை போலவே நீயும் உன் பிள்ளயை கண்மூடித்தனமாக நம்பி விடாதே விளைவில் நீயும் முதியோர் இல்லத்தை நாடி வந்து விடுவாய்

தன்னோட மகனுக்கு அவனின் அப்பாவின் கடைசி கடிதம் “என்னை போலவே நீயும் உன் பிள்ளயை கண்மூடித்தனமாக நம்பி விடாதே விளைவில் நீயும் முதியோர் இல்லத்தை நாடி வந்து விடுவாய்…!”

இன்றைய கால பிள்ளைகளின் மனநிலை வளர்க்க வேண்டும் அப்பா, படித்து வைக்க வேண்டும் அப்பா, திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்பா, வீடு கட்டி தரனும் அப்பா, சொத்து சேர்த்து வைக்க வேண்டும் அப்பா ஆனால் இத்தனையும் செய்த பிறகு அப்பா இருக்க கூடாது தனியா போய்டணும்

இன்றைய கால பிள்ளைகளின் மனநிலை: “வளர்க்க வேண்டும் அப்பா, படித்து வைக்க வேண்டும் அப்பா, திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்பா, வீடு கட்டி தரனும் அப்பா, சொத்து சேர்த்து வைக்க வேண்டும் அப்பா ஆனால் இத்தனையும் செய்த பிறகு அப்பா இருக்க கூடாது தனியா போய்டணும்”.

பெத்த கடன் ஒன்றிட்காக தன் வாழ்கை சந்தோசங்களை துச்சமாக நினைத்து மகன் அல்லது மகள் வாழ்க்கையை சீரமைத்து ஒரு நல்ல நிலைக்கு அவர்களை கொண்டு செல்ல பாடுபடும் அப்பா என்றுமே போற்றப்பட வேண்டிய தெய்வமே

பெத்த கடன் ஒன்றிட்காக தன் வாழ்கை சந்தோசங்களை துச்சமாக நினைத்து மகன் அல்லது மகள் வாழ்க்கையை சீரமைத்து ஒரு நல்ல நிலைக்கு அவர்களை கொண்டு செல்ல பாடுபடும் அப்பா என்றுமே போற்றப்பட வேண்டிய தெய்வமே.

வாழ்க்கையில் கிடைக்கும் மிக பெரிய வெகுமதி தந்தையின் அன்பை முழுமையாக கிடைக்க பெற்றவர்கள்

வாழ்க்கையில் கிடைக்கும் மிக பெரிய வெகுமதி தந்தையின் அன்பை முழுமையாக கிடைக்க பெற்றவர்கள்.

தன் மகன் மீது இருக்கும் ஒரு தாயின் அன்பு உண்மையானது என்றால் தந்தையின் அன்பு உயிரானது

தன் மகன் மீது இருக்கும் ஒரு தாயின் அன்பு உண்மையானது என்றால் தந்தையின் அன்பு உயிரானது.

தந்தையே எனக்கு மீண்டும் உன்னிடம் குழந்தையாக மாறி உன் பாச அரவணைப்பில் மிதந்து கிடைக்க ஆசை

தந்தையே! எனக்கு மீண்டும் உன்னிடம் குழந்தையாக மாறி உன் பாச அரவணைப்பில் மிதந்து கிடைக்க ஆசை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.