“இதுவும் கடந்து போகும்”
“இதுவே பழகி போகும்”
“காலமே மருந்து” என்று எளிதாய் கூறும்
உண்மை வாசிகளே
உங்கள் உள்ளத்தை சற்று
தனிமையில் கேளுங்கள்
கடக்க இயலாத புற்று போல்
மனம் மழுதும் பரவி கொள்ளும் காயமும் உண்டு
பகல் இரவாய் நாட்கள் மட்டுமே நகரும்
காலத்தோடு உறைந்து கனமாய் தேங்கியே கிடக்கும் மனமும் உண்டு
காலம் தந்த மருந்து என்று தன் உயிர்
மறித்தவனுக்கு ஓர் நொடி மரணம்
பழகி கொள் என்று தானே தனக்கு
சுமையாய் வாழ்பவனுக்கு
ஒரு நொடியில் பல கோடி மரணம்
இதற்கு பரலோகம் சேர்ந்தவனும்
பித்தனாய் வாழ்பவனுமே
தெய்வத்தின் சாட்சி