முதல் வருட திருமண நாள் அன்று தான் நினைவு வருகிறது ஒரு வருடமாக நான் இன்னொருவர் வீட்டில் இருந்திருக்கிறேன் என்று …..
ஒரு வருடத்திற்கு முன் இதே நாள் என் குடும்பத்தை பிரிய மனம் இல்லாமல் கண்ணீருடன் கரம் பிடித்து உன்னுடன் வந்தேன்…..
அன்றிலிருந்து இன்று வரை என்னை கண்ணீர் சிந்தாமல் நீ கவனித்து கொண்டதை நினைத்து நெகிழ்ந்தேன்
இன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது நீ முதல் முறை கொடுத்த முத்தம்..
அத்தை மாமா கொழுந்தன் என்று எல்லோரும் வீட்டில் இருந்த போதும் நாம் மட்டும் இருப்பதுபோல் உணரவைத்த கண் பாஷைகள் அதை நினைத்து தனியே சிரிக்கிறேன்
என் தாய்க்கு பிறகு என் தேவைகளை கண் அசைவில் புரிந்து கொண்ட ஒரே உயிர் நீ என்பதை உணர்ந்தேன்
அப்பாவுடன் கை பிடித்து சென்ற இடங்களுக்கு உன் தோல்சாய்ந்து நடந்து செல்லும் நாட்கள் இது காலம் முழுதும் வேண்டும் என்று வேண்டுகிறேன்
சின்ன சின்ன சினுங்கள்களும் ….. சமயலறையில் நடகும் செல்ல யுத்தங்களும் …
விடிந்தும் விடை பெற இயலாத காலை வேலைகளும் …
கட்டில் மேல் கற்கும் புதிய விஞ்ஞானமும்…
நீதான் எல்லாம் என்று சொல்லும் உன் பார்வையும்…
கடைத்தெருவில் என்னை 2 நிமிடம் காணவில்லை என்று உன் முகத்தில் தெரிந்த பதற்றமும் ….
சாலைகளை கடக்கும் போது என் கையை இருக்கி பிடிக்கும் உன் விரல்களும் ….
காதல் பொழியும் உன் பார்வயும்….
சின்ன சின்ன சண்டைகளும்
என் மீது நீ வைத்திருக்கும் மலை போன்ற நம்பிக்கையும்….
என்னிடம் எதையுமே மறைக்க நினைக்காத உன் நேர்மையும்…
தித்திக்கும் பொய்களும் திகட்ட திகட்ட காதலும்
அப்பப்பா இன்னும் சொல்லி கொண்டே போகலாம் போல
இந்த ஜென்மம் மட்டும் அன்று ஏழேழு ஜென்மம் உன் மனைவியாக வரம் வேண்டும்
தருவாயா என் அன்பு கள்வனே என் காதல் கணவனே !!