யாரும் இல்லாமல் துணையின்றி தனியாய் நடந்தேன்அடை மழையாய் வந்தான் என் நண்பன் என்னிடம் நலம் விசாரிக்க.
மழையே! ஏனோ என் மனதிலே ஓர் இனம் புரியா பரவசம் நீ வந்தாலே. அனைத்து கவலைகளையும் மறந்து உன்னை வரவேற்று குழந்தையோடு குழந்தையாய் எனக்கு உன்னோடு விளையாட ஆசைதான் இருந்தும் என்னால் முடியவில்லை இளமையின் இங்கிதத்தை உணர்ந்து மனதோடு உன்னிடம் உறவாடுகிறேன்.
இங்கு தேவைக்கு அதிகமாக அளவில்லாமல் ஆசைப்படும் நாம் அனைவருமே ஏனோ மழையை மட்டும் அளவோடு எதிர்பார்க்கிறோம்.
உழவன் வாழ்விலே மகிழ்ச்சி என்ற ஒன்று உண்டாயின் அது மழை வந்தால் மட்டுமே.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோமோ இல்லையோ அதிசயமாய் விளங்கும் மழையின் கருணையினால் நாம் மன மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம்.
ஒரு சில நிமிடங்களே நீ மழைத்துளியாய் வந்து சென்றாலும் அந்த உன் பொன் மணி துளிகளால் என்னை பல மணி நேரங்களுக்கும் மேலாக சிலிர்க்க வைக்கிறாய் என்னை முழுவதுமாக உன் சாரல்களால் நனைய வைக்கிறாய்.
இரு துளி தூறல்களால் என் இரு கைகளும் மினு மினுக்க, மண் வாசனையோடு வந்த குளிர்ந்த காற்று என் மேனியில் பரவி பட படக்க, நான் மழையில் நனைய ஆயத்தம் ஆனேன். “மச்சா! மழை வருது வேகமா நட சீக்கிரம் போலாம்!!!” – அதிகார தோரணையுடன் என் நண்பனின் குரல் 🙂
மழையை ரசிப்பது ஆனந்தம் என்றால் மழையில் நனைவது பேரானந்தம் தானே!
விண்ணில் இருந்து மண்ணை காக்க வேண்டி அவதரித்த அதிசய தேவனே “மழை“.
அப்படி மேகத்திடம் என்னதான் கோபமோ இந்த மழைக்கு அனைத்தையும் பூமியில் கொட்டி தீர்த்து விட்டு போய் விடுகிறதே!!!