என் காதலிக்கு என்னை பிடிக்கும் ஏனெனில் அவளை தினமும் நான் பின் தொடர்வதால் !!! என் காதலிக்கு என்னை பிடிக்கும் ஏனெனில் அவளின் பெயர் ஒன்றையே நான் துதி பாடுவதால் !!! என் காதலிக்கு என்னை பிடிக்கும் ஏனெனில் அவளின் ஒவ்வொரு அசைவையும் நான் அணு அணுவாய் ரசிப்பதால் !!! என் காதலிக்கு என்னை பிடிக்கும் ஏனெனில் அவள் கடிந்தாள் கூட நான் சட்டை செய்யாமல் அவளின் கோபத்தை ரசிப்பதால் !!! என் காதலிக்கு என்னை பிடிக்கும் ஏனெனில் என் மனது எனும் கோட்டையை அவள் முற்றுகையிட்டதால் !!! என் காதலிக்கு என்னை பிடிக்கும் ஏனெனில் அவளின் பேச்சுகளை நான் அனுதினமும் ரசிப்பதால் !!! என் காதலிக்கு என்னை பிடிக்கு ஏனெனில் அவளின் உணர்வுகளுக்கு நான் மதிப்பு அளிப்பதால் !!! என் காதலிக்கு என்னை பிடிக்கும் ஏனெனில் அவள் சொன்ன சொற்களை நான் மறுப்பேதும் சொல்லாமல் நான் கேட்பதால் !!! என் காதலிக்கு என்னை மிகவும் பிடிக்கும் ஏனெனில் அவளுக்கு தான் தெரியுமே என் உயிரே அவள் என்று !!!