அழகிலும் மிகச் சிறந்த அழகு தான் என் தேவதை. அவளின் பாதம் பட்ட இடங்கள் தான் எனக்கு புண்ணிய பூமி. அவளின் சிணுங்கும் கன்னங்கள்
என் அழகிய கோபுரங்கள். அவளின் பவளம் போன்ற செவ்விதழ்கள் தான் எனக்கு பாலாமிர்தம். அவளின் மனம் கவரும் பார்வை என்னை ஈர்க்கும்
ஈர்ப்பு விசை. அவளின் பேச்சு தான் எனக்கு சங்கீதம். அவளின் சிணுங்கல்கள் என்னை நனைத்த சாரல்கள். அவளின் மெல்லிய உடல்
அசைவு என் சிற்பக் கல்வெட்டு. உன்னை காணும் போது எனக்கு ஏற்படும் சிலிர்ப்பு உலகில் எதுவும் வியக்க வைக்கவில்லை. மெய் சிலிர்க்க வைக்கவில்லை !!!