பெண் நடமாடும் தெய்வம்
நாள் முழுவதும் சக்கரம் போல் ஓயாமல் சுழன்று வேலை செய்து வரும் பெண்கள் அனைவருமே போற்றப்பட வேண்டிய நடமாடும் தெய்வம் தான்.
பெண் தேவதைகள்
யார் சொன்னது பெண் தேவதைகள் நேரில் இல்லையென்று இதோ காண்கிறேன் நான் தினமும் என் அம்மாவின் உருவத்தில்.
ஆண் பெண்
தனக்கு பிடித்த பெண்ணிடம் எப்போதும் மனம் விட்டு பேச நினைப்பது தான் ஆண்கள் குணம். தனக்கு பிடித்த ஆணிடம் தினமும் மனதோடு பேச விருப்பப்படுபவது தான் பெண்ணின் குணம்.
காதல் பெண் போராட்டம்
ஒரு பெண் காதல் வயப்படும் வரை வேண்டுமானால் காதலனை காயப்படுத்திருக்கலாம். ஆனால் தன் காதலை காப்பாற்றிக்கொள்ள பெண் தான் கடைசிவரை போராட வேண்டியிருக்கிறது.
ஆணாதிக்கம் – பெண் கொடுமை
பெண்ணுக்கு முக்கியத்துவம் கிடைத்து விட்டதாம் ஹ்ம்ம் இன்றும் ஆணாதிக்க வர்க்கத்தினர் பலரால் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் “பொட்ட புள்ள உனக்கு எதுக்கு படிப்பு ?” “அம்புட்டு படுச்சு நீ என்ன சாதிக்க போற ?” “முதல்ல இந்த பொட்ட கழுதைக்கு கண்ணாலம் பண்ணி வைக்கனும்”.
கணவன் ஓர் உயிர் சுமை
ஒரு பெண் தன் பிள்ளையை பெறுவதற்கு முன்பே தாய் தான். கணவனை உயிராய் சுமப்பதனால்.
பெண் குழந்தை இறைவனின் வரம்
பொட்ட புள்ள பொறந்திருச்சே என்று வருத்தப்படும் தகப்பனுக்கு தெரிவது இல்லை தன் கடைசி காலத்தில் தன்னை பார்த்து கொள்ள இறைவன் அனுப்பி வைத்த வரம் தான் “பெண் ” என்று.
பெண் இல்லையேல் ஆண் இனமே இல்லை
ஆண் என்ற அகங்காரம் கொள்வதற்கு முன்னாள் யோசி. முதலில் உன்னை ஒரு பெண் பத்து மாதம் சுமந்து பெற்றாலே நீ ஒரு “ஆண் மகன்”.
பெண்ணிடம் எது அழகு?
எதை சொல்ல நான் இப்பெண்ணிடம் , புத்தம் பொலிவுற மின்னும் அவளின் மேனி அழகையா? உள்ளம் கொள்ளை கொள்ளும் அவளின் உடை அழகையா? பூக்கள் போல் புன்முறுவலுடன் பூக்கும் அவளின் முக அழகையா? காண்பதவரையும் காண வைக்கும் அவளின் நடை அழகையா? இல்லை இல்லை என்றுமே சிறந்த நண்பனாக தோள் கொடுத்து, காதலியாக என்னில் மூழ்கடித்து, கணவனாக என்னை தேர்ந்தெடுத்து, இறுதியில் தாயாக என்னை சுமக்கும் அவளின் நல்ல குணமே எனக்கு என்றும் அழகு.
நிலவும் பெண்ணும்
மிகவும் மெல்லிய குரலில் ஆதங்கத்துடன் “என்னை விட அவ என்ன அவ்ளோ அழகா?” என்னிடம் முறையிட்ட நிலா.