இன்னும் எத்தனை காலம் தான் நான் தனித்திருப்பேன்? உன்னை எண்ணியே தினம் இரவிலே நாள் அனைத்திலும் விழித்திருப்பேன்…!
பார்வை மொழிகள் மட்டும்தானோ என்றும் நமக்கு? உன் நினைவுகள் என்னுள் ஊறிப்போனது பின் வீண் யோசனை எதற்கு?
நான் படும் வேதனை உனக்கும் இல்லையோ? ஒரு வேளை நான் உன் மேல் கொண்ட காதலை நீ அறியவில்லையோ…!
நீ என்னை கண்டும் காணாமல் அலைக்கடிக்கிறாய் என் காதலை உணராமல் உன் வீண் பிடிவாதத்தால் வீணடிக்கிறாய்…!
நீ நாளை மாறுவாய் என்ற நம்பிக்கையில் தினம் நான் வாழ்கிறேன் என் வாழ்க்கையின் நாட்களை உன் நினைவுகளோடு நான் கழிக்கிறேன்…!
மேலும் காதல் பதிவுகளை பார்வையிட:-