இந்த பதிவு உங்கள் அபிமான பதிவு என்றே சொல்லலாம். ஏனெனில் காதலியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
இங்கு நாம் அனைவருமே காதல் வலையில் விழுந்து இருப்போம்.
இதில் என்ன ஒரு வித்தியாசமெனில் ஒரு சிலர் தனது காதலில் வெற்றி அடைந்து இருப்பார். பலர் தனது காதலில் தோல்வி அடைந்து இருக்கலாம்.
சொல்லா காதல், ஒரு தலை காதல், இரு மன காதல் என அவைகளை வகை வகையாக நாம் பிரித்து கொண்டு போனாலும் காதல் உணர்வுகள் என்றுமே ஒன்று தான்.
இல்லையெனில் சந்தர்ப்ப சூழ்நிலைகள் சில சமயம் பாதகமாக இருந்து ஒன்று சேராமல் போயிருக்கலாம் .
எது எப்படி இருப்பினும் காதல் எனும் ஒன்று உயிர்கள் அனைத்திற்கும் பொதுவானது தான்.
ஒரு காதலன் தனது உண்மையான காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்பினால் எப்படி இருந்திருக்கும் என்று எனக்கு தெரிந்தவாறு இதில் தொகுத்துள்ளேன்.
உங்களுக்கு இந்த காதலி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை பிடித்திருந்தால் புகைப்படங்களை டவுன்லோட் செய்து உங்கள் அன்பு காதலிக்கு அனுப்பி உங்கள் நேசத்தை இன்னும் ஆழமாக்குங்கள்.
உணர்வுபூர்வமான காதலி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை
பிறந்த தின வாழ்த்துக்கள் என்றுமே இனிமையானதே. அதிலும் நாம் அதை நமக்கு பிடித்தவர்களுக்கும் நேசிப்பவர்களுக்கு அனுப்பும்போது இன்னும் நாம் கொண்டு இருக்கும் உறவு ஆழமாகிறது.
நான் தொகுத்திருக்கும் இந்த காதலி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன்.
அன்பே இந்த உலகையே விலைக்கு வாங்கி கொடுப்பேன் நீ கேட்டால் பூமியையும் தாண்டி புது உலகிற்கு அழைத்து செல்வேன் நீ விரும்பினால் ஏனென்றால் இன்று உன் பிறந்த நாள்.
நிலவுக்கு தான் வளர்பிறை தேய்பிறை எல்லாம் எந்தன் காதல் நிலவான நீ என்றுமே என் வாழ்க்கையின் தேயாத வளர்பிறை.
என்றுமே நிலவை போல் பொலிவோடும் நீண்ட ஆரோக்கியத்துடனும் வற்றாத செல்வங்களுடன் நீ சகல சௌபாக்யவதியாக வாழ வாழ்த்தும் ஒரு அன்பு நெஞ்சம்.
என்றுமே உன் துணையாக உன் கண் இமை போல் நீங்காமல் இந்த வானத்து தேவதையை காண வண்ணத்து பூச்சி போல் உன்னையே சுற்றி சுற்றி வருவேன் என்றும் நலம் பெற வாழ்த்தும் உன் அன்பு காதலன்.
சாதாரண நாட்களிலே என் ஆருயிர் காதலியை போற்றி புகழ்வேன் இன்று அவளுக்கு பிறந்த நாளாம் பின்பு சொல்லவா வேண்டும்?
உலகில் உள்ள மொத்த அதிசயங்களின் உருவமாக திகழும் என் அழகு ராணிக்கு என் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
உன் வாழ்க்கையின் சிறந்த நாளான இன்று உனக்கான பரிசளிப்பை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் உந்தன் துணையாக என்னையே உனக்காக தரவுள்ளேன் என் காதல் இளவரசிக்கு.
என்னையும் மீறி எல்லையில்லா ஒரு சந்தோசம் அளவில்லா ஆனந்த புன்னகையில் தவழ்ந்து கிடக்கின்றேன் என் காதலியின் பிறந்த நாளில்.
இன்று என்ன பூக்களுக்கு புதிதாய் இவ்வளவு கொள்ளை சந்தோசம் என்றும் இல்லாத விதம் அழகாய் பூத்து குலுங்குகின்றதே தன இனத்தவர் பிறந்ததை எண்ணி பெருமை கொள்கின்றதோ.
உன் இதயத்தை சொந்தம் கொண்டாட அனுமதி அளித்தவளே நீ பிறந்த இந்த நாளை நாம் மனமகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம்.
நீ இந்த உலகில் ஜனனம் எடுத்த நாளே கடவுளும் தன சிருஷ்டியை என்னை வியந்து போன மகத்துவம் வாய்ந்த நாள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பு காதலியே.
நீ உதித்த தினமே கடவுள் எனக்காக அன்பான துணையாக, நேசமிகு உறவாக, அழகான கவிதையாக, என்றென்றும் என் காதலியாக, என் பிள்ளையின் தாயாக ஒருத்தியை தோற்றுவித்த தினம். என் கனிவான வாழ்த்துக்கள் என் காதல் தேவதையே.
பூக்களே ஒரு அழகு தானே அதை தன் பிறந்த நாளில் உடுத்தி அழகுக்கு அழகு சேர்க்கிறாள் என்னவள்.
Comments
முடியவில்லை