ஒரு உண்மையான காதல் என்றுமே அடுத்தவரை காயப்படுத்தி பார்க்காது காலம் முழுக்க காத்து நிற்கும்.
என்னை உன் காதலால் அழ வைத்து பார்ப்பதில் தான் உனக்கு பிரியம் என்றால் அதையும் ஏற்று கொள்ள நான் தயாராக தான் உள்ளேன் உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்.
நீ உன் சம்மதம் மட்டும் சொல் அது போதும் எனக்கு காத்து கிடப்பேன் உனக்காக என் பிரியங்களுடன்.
எதையும் உனக்காக விட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன் அதற்காக நீ என் காதலை மட்டும் கேட்டு விடாதே.
கனவுகளில் தான் உன் முகம் தோன்றுகின்றது என்று தூங்காமல் இருந்தாலும் விழிகளின் இடை இடையே கசிகிறது கண்ணீர் துளிகள் உன்னை நினைத்தே.
உன்னை மறக்கலாம் என்று நினைத்தாலும் நான் செய்யும் சிறு சிறு வேலைகளில் உன் நினைவுகள் வந்தாலும் அந்த கணமே என் இதயத்தை ரணமாக்கி சென்று விடுகின்றது உன் பொல்லாத நினைவுகள்.
உன் மீது நான் சண்டையிடுவது உன் பால் கொண்ட என் உண்மையான அன்பினால். உன்னை நான் சமாதானம் செய்வது உன்னை எக்காரணம் கொண்டும் பிரிந்து விட கூடாது என்ற பயத்தினால்.
உன்னிடம் நான் திரும்ப திரும்ப கெஞ்சுகிறேன் என்றால் உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை என்று அர்த்தம் அல்ல. யாருக்காகவும் உன்னை நான் என் வாழ்க்கையில் இருந்து விலக்கி விட விருப்பம் இல்லை என்று அர்த்தம்.
பல பிரிவுகளில் பல கதைகள் ஒளிந்து இருக்கும் நீ எனக்கு தந்த காதல் பிரிவினில் என் கண்ணீர் மட்டுமே கலங்கி தவிக்கிறது.
உன்னால் உடைந்த இந்த இதயத்திற்கு துணையாக நீ ஆதரவு அளிக்காவிட்டால் கூட பரவாயில்லை என்றுமே எனக்கு ஆறுதலாய் இரு.
என்னை நீ பிடிக்கவில்லை என்று நீ சொல்லும்போது இதயத்தை யாரோ கூறு கூறாக வெட்டுவது போல உணர்ந்தேன்.
உன்னை மட்டுமே நேசிக்கும் ஒரு ஜீவனை வேண்டாம் என்று நீ ஒதுக்கும்போது நன்றாக யோசித்துக்கொள். நீ விரும்பும் ஒருவர் உன்னை அவரின் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் விலகினால் என்ன கதிக்கு உன் மனம் உள்ளாகும் என்று.
பெண்ணே நொடிகளில் என்னை மயக்கிய உன் விழிகளுக்கு என் இதயத்தையே பரிசாக தருகிறேன் என் காதல் என்ற வாழ்த்து பொக்கையுடன்.
அழுகை, கோபம், புன்னகை இந்த மூன்றுமே நமக்கு பிரியமானவர்களுக்கு மட்டுமே நம்மால் தர முடியும்.
இதயம் என்ற ஒன்றில் மனதை அறியும் கருவி மட்டும் பொருத்திருந்தால் உன்னை விட நான் தான் அதிக அளவு உன்னை நேசித்திருக்கிறேன் என்பது உனக்கு தெரிந்திருக்கும்.
நீயாக வந்தாய் என் கண் முன்னே உன் காதலை உணர்த்தினாய் என் நேசத்தை உனதாக்கினாய் என் மனதில் மலராக மலர்ந்தாய் இன்று எதுவும் தெரியாதது போல் எனக்கு தனிமையை நண்பனாக்கி கொடுத்து விட்டு சென்று விட்டாயே.
நீ விரும்ப பல பேர் உனக்காக இருக்கலாம் என்னை போல் உன்னை விரும்பியவர்களில் ஒருவரும் கடைசி வரைக்கும் உனக்கு கிடைக்க மாட்டார்கள்.
என்னுள் நுழைந்த உன்னை வேரோடு பிடுங்கி எறிய தான் நினைத்தேன் நீ எனக்குள்ளே விருட்சம் போல வளர்ந்ததை அறியாமல்.
அன்று காதலில் திளைத்த நாட்கள், தனிமையில் நடந்த மௌனமான அசைவுகள்,பார்வைகளில் உணர்ந்த பேசா வார்த்தைகள், ஆள் இல்லா நேரம் என்னை அள்ளி அணைத்து நீ தந்த காதல் முத்தங்கள் என அந்த நம் பொன்னான நிமிடங்கள் தான் எனக்கு ஆதரவு நீ இல்லாத நாட்களில்.
பாசம் வைத்து மோசம் போவது விட கொடுமையானது இங்கு சிலர் நம்மை பாசம் வைப்பது போல் நடித்து மோசம் செய்து விட்டு போய் விடுகிறார்கள்.
நாம் ஒன்றாய் பழகிய காலங்கள் என்னை தாக்கும் கூர்மையான ஆயுதம் என்றால் நீ என்னுடன் இருந்த நினைவலைகள் என்றுமே நீங்காத வகையில் என் நெஞ்சை தைத்த ஆணி வேர்கள்.
என் மனதை காயப்படுத்திய பின் நீ ஆறுதல் சொல்வது என்பது உடைந்த கண்ணாடி துகள்களை ஒன்றாய் சேர்த்து ஒட்ட வைப்பது போன்ற ஒரு வீண் முயற்சி தான்.
பிடிக்கவில்லை என்றால் உண்மையாக வெறுத்து விடுங்கள் பொய்யாக மற்றவர்களின் உணர்ச்சிகளை காயப்படுத்தி மட்டும் விளையாடி விடாதீர்கள்.
மங்கையின் அழகை பார்த்து தூண்டிலில் அகப்பட்ட மீன் போல தான் உன்னிடம் மாட்டி கொண்டு துடிக்கிறேன்/முழிக்கிறேன் காதல் என்ற வலையில்.
மெல்லவும் இயலாமல் துப்பவும் வழியில்லாமல் மாட்டி கொண்டு தத்தளிக்கும் கொடுமை தான் “காதல்”.
நானே உன்னிடம் என்னிடம் பேச சொல்லி கெஞ்சுவதால் தான் என்னவோ உனக்கு என் மதிப்பு கடைசி வரை புரியாமலேயே போய் விடுகிறது.
உன்னிடம் இருந்து அலைபேசி மணி அடிக்கும் போது எல்லாம் என் மனது பட்டாம்பூச்சி போல பறந்து உன்னிடம் பேச ஆவலுடன் காத்து நிற்கும்.
ஒரு பெண் ஆணிடம் காதலில் எதிர்பார்ப்பது தன்னிடம் உண்மையான எண்ணத்தோடு பழக வேண்டும் ஏமாற்றாமல் இருக்க வேண்டும் என்று மட்டுமே. இதை ஒரு ஆண் உணர்த்தி விட்டாலே பெண் அவனை முழுமையாக ஏற்றுக் கொள்கிறாள்.
இன்று நீ என்னோடு இல்லாமல் இருக்கலாம் உன் கனவுகள் என்ற ஒன்றில் நிஜமாய் இருப்பது நான் மட்டுமே.
நீ என்னை விட்டு எவ்வளவு தூரம் விலகி செல்ல முடியும் உன் கண்களில் என்னையும் உன் மனதினில் என் நினைவினையும் வைத்து கொண்டு.
நீ இல்லாத நேரம் குளிர்ந்த காற்றில் கூட அணல் தான் வீசுகிறது. சீக்கிரம் வந்து விடு என் இரவுகளை உன் கவிதைகளாக்கி விடு.