தாகத்தோடு வாழ சொல்லுங்கள் வாழ்கிறேன்
பசியோடு இருக்க சொல்லுங்கள் இருக்கிறேன்
கண் விழித்தே உறங்க சொல்லுங்கள் உறங்குகிறேன்
கடவுளை வெறுக்க சொல்லுங்கள் வெறுக்கிறேன்
மலை உச்சியிலிருந்து குதிக்க சொல்லுங்கள் குதிக்கிறேன்
என்னையே இழக்க சொல்லுங்கள் இழக்கிறேன்
ஆனால் என் காதல் கண்ணாளனை மட்டும் மறக்க சொல்லாதீர்கள்