சம்மதம் என்ற ஒரு வார்த்தைக்குத்தான் இத்தனை கலவரமா இந்த காதலில்?
ஆசைக்காக உன்னை விரும்பும் பலரை போல என்னையும் நினைத்து விடாதே உன் வீண் பிடிவாதங்களால் என் மனதை பஸ்பம் ஆக்கி விடாதே.
போர் வீரனின் கைகளில் உள்ள வாளை விட கூர்மையான ஆயுதத்தால் என் இதயத்தை துளைத்தாள் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உன்னால் எனக்குள் உண்டான இந்த காதல் அவஸ்தை.
நேசத்தினால் உன் மனதை கொள்ளை கொள்ளவே எனக்கு விருப்பமே தவிர உன் மனதை காயப்படுத்த அல்ல.
உனக்கு பிடிக்காவிடில் சிரமப்பட்டு எல்லாம் என்னை பார்க்காதே அது என் காதலுக்கே உண்டான ஒரு அவமரியாதையே.
என் நெஞ்சத்தை நீ இரவலாக வந்து வாங்கி விட்டு போ. அப்போதாவது புரியுமா என்று பார்க்கலாம் என் காதல் வலிகள்.
உன்னை மறக்க கூட தெரியாத அளவுக்கு நான் நினைத்து விட்டதால் என் மனதில் நீயும் நீங்காது நிலைத்து விட்டாய்.
மனதில் நீங்காத இடம் பிடித்த அவனின் காதல் உறவுகளும் நீங்காத உணர்வுகளும் எனக்கு தொடர்கதையாகி விட்டது.
நின் அன்பினால் நான் காயப்பட்டாலும் கூட திரும்ப திரும்ப நான் எதிர்பார்க்கும் ஆறுதல் அளிக்கும் மருந்து “நீ” ஒன்றே.
இரவுகள் கூட ஒளிர் தரும் பகல் ஆகும் என்னோடு ஒன்றாக நீ இருக்கும்போது… நிலவுகள் கூட வெயில் தரும் உன் பிரிவினால் நான் தவிக்கும் தருணத்திலேயே…
உன்னையே வேண்டும் என்று நான் போரிடவில்லை. என்னை ஏன் வேண்டாம் என்கிறாய் என்றுதான் வாதிடுகிறேன்.
விஷமின்றி உயிரை அணு அணுவாய் கொள்ளும் பொல்லா கொடுமை தான் இந்த காதல்.
நினைவுகளுக்கு உயிர் இல்லை என்றால் நன்றாக தான் இருந்திருக்கும் நானும் பிரிந்த என்னவளை மறந்திருப்பேன் என்றோ.
வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடி கொள்ள வந்த காதல் இப்போது காதல் தோல்வியினால் அர்த்தம் இல்லாமலேயே அஸ்தமம் ஆகி விட்டது.
மதிக்கா விட்டாலும் கூட பரவாயில்லை பொறுத்து கொள்ளலாம் அவர்களுடன் பழகிய பாவத்திற்காக சிலர் நம் மனதை மிதித்து விட்டு அல்லவா சென்று விடுகிறார்கள்.
எதிர்பார்த்து கிடைக்காமல் போன நேசத்திற்கு கிடைக்கும் மதிப்பும் பரிசும் கண்களில் வழியும் கண்ணீர் துளிகள் ஒன்றே.
உன் மொழிகள் நிரப்பப்படாத இடத்தில் இருந்து எனக்கு காதல் வலிகளை உன் பதிலாக விடையளித்து விட்டாய்.
காதலை வேண்டாம் என்று தானே வெறுத்து இருந்தேன் என்னை உன் பிடியில் பணிய வைத்து பிரிவுகளில் என் மனதையே நீ கரைத்து விட்டாயே?
உணர்ச்சிகள் இருக்கும் வரை உன் உயிர் மூச்சு நின்றாலும் உன் மேல் கொண்ட காதல் பற்றிற்கு சிறிதும் களங்கம் வராது.
சற்று நேர சந்திப்பில் உயிரை பறித்தாய்.. என்னை முழுவதும் உன்னுள் ஈர்த்து கொண்டாய். என் நேசத்தை உனக்காகவே சேமித்தேன். இன்னும் புரிவில்லையா என் காதல் உனக்கு?