நீலம் இல்லா வானம் எங்கே ,
நீ இல்லா வாழ்க்கை இங்கே ..
அலைகள் இல்லா கடல் எங்கே ,
அவள் இல்லா காதல் இங்கே ..
வாசம் இல்லா மலர் எங்கே ,
சுவாசம் இல்லா உயிர் இங்கே ..
விதைகள் இல்லா பயிர் எங்கே,
விடைகள் இல்லா கேள்வி இங்கே ..
தண்ணீர் இல்லா நதிகள் எங்கே , கண்ணீர் இல்லா விழிகள் இங்கே …
உளிகள் இல்லா சிற்பம் எங்கே ,
உணர்வுகள் இல்லா உடல் இங்கே ..
இரவுகள் இல்லா விடியல் எங்கே ,
துடிப்பு இல்லா இதயம் இங்கே …