தினமும் தோன்றும் பொழுதுகளில் எப்போதுமே தனித்துவமான ஒன்று தான் இந்த பொன் மாலை பொழுது. காண்போர் அனைவரையும் வியக்க வைக்கும் தருணமே இந்த மாலை நேரம். மத்தியான நேரம் விடை பெரும் நேரம் மற்றும் இரவு விடியல் தோன்றும் முன்னேரே உள்ள இந்த இடைபெற்ற தருணமே இனிய மாலை பொழுது. பொழுதுவாக காலையும், இரவும் சேர்ந்தார் போல் அழகிய மஞ்சள் நிறத்தில் தோன்றும் இனிய வேளையிது. எங்கு போவதென்றே தெரியாமல் மேக கூட்டங்கள் அணி வகுக்கும் நேரம், அணைத்து உயிரினங்களும் இல்லம் தேடி நாடி வரும் பொழுது, ஆதவனும் தன்னிலை மறந்து உறக்கம் கொள்வான், இதுவரை சுட்டெரித்த அனல் வெப்பம் நீங்கி மனதுக்கு இதமாய் சுகம் சேர்க்கும் தருணம் என மாலை நேரத்தின் சிறப்புகள் எவ்வளவு சொன்னாலும் கூட மாளாது.
இந்த இனிய வேளையை சிறப்பிக்கும் விதமாய் நான் இன்று பதிவிட்டுள்ள பதிவு தான் மாலை வணக்கம் வாழ்த்துக்கள். இந்த மாலை வணக்கம் தமிழ் கவிதை வரிகள் உங்கள் அனைவர்க்கும் கட்டாயம் பிடிக்கும் என நம்புகிறேன். உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தில் உள்ள மற்ற அங்கம் வகிக்கும் உறவுகளுக்கும், மனதுக்கு பிடித்த நபர்கள் அனைவர்க்கும் வாட்சப், பேஸ்புக், மற்றும் பலவித சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து உங்கள் வாழ்த்துக்களை அறிவிக்கலாம்.
Table of Contents
மனம் கவரும் இனிய மாலை வணக்கம் வாழ்த்துக்கள்
பகலும் இரவும் ஒன்று சேர்ந்து பகல் போல இல்லாமலும் இரவு போல அல்லாமலும் பகலிரவாக காட்சி தரும் அழகிய பொழுதே இந்த மாலை பொழுது. என் கனிவான மாலை வணக்கங்கள்.
வானத்தின் கதவுகள் மெல்ல மெல்ல மூடும் தருணமிது காரிருள் மேகங்கள் புடை சூழ வருகை தந்து ஆதவனையே தன்னிலை மறக்க செய்து அழகிய மஞ்சள் நிற வெளிச்சத்தை இனிய சாரலோடு பொழியும் தருணமே மாலை பொழுது. குட் ஈவினிங் பார் ஆள்…
சுட்டெரிக்கும் சூரியனும் இரக்கம் கொள்வான் தன்னிலை மறந்து சாந்தம் பெற்று நிம்மதியோடு தன் கடமையை நிறைவேற்றிய பெருமிதத்தோடு விடை பெறுவான் மாலை வேளையில்…
என்று மாற்றங்களை பழகி கொள்ளும் வித்தையை நாம் கற்கிறோமோ அன்று தான் இந்த உலகில் வாழ தெரிந்தவர்களாக நாம் மாறுகிறோம்…
கால நேரங்கள் எக்காரணத்தை கொண்டும் யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் எதற்காகவும் மாறாமல் காத்திருப்பது கிடையாது.. காலத்திற்கு ஏற்ப நம்மைத்தான் மாற்றி கொள்ள வேண்டும்…
வான்மகளின் அழகில் அந்த காலை கதிரவன் கூட மயங்கி விட்டானா என்ன? கம்பீரமான அவனையே தன்னிலை மறக்க செய்து மாலை வேளையில் தனது அழகில் மயக்கி மறைய செய்து விடுகிறாள் இந்த வான்மகள்? நண்பர்களுக்கு வெரி குட் ஈவினிங்…!
முயற்சி என்ற ஒரு விதையை உன் மனதில் விதை அதன் மூலம் நீ அடையலாம் வெற்றி என்னும் ஆணிவேர்களை வெகு சீக்கிரத்தில்.
யாரையும் இங்கு ஒப்பிட்டு பார்த்து பார்த்து வாழ்வது அல்லவே வாழ்க்கை…! உன்னை இந்த உலகிற்கு யாரையும் ஒப்பிட இயலா வண்ணம் உன் தனித்துவத்தை காட்டி சாதனை படைப்பது தான் வாழ்க்கை…!
எதிலும் குறை கூறி கொண்டு வாழ்பவன் மனதில் என்றுமே அமைதி இருக்காது வெற்றி கிடைக்காது. எதுவும் இல்லையென்றாலும் கூட நிறைவான மனதுடனும் தன்னம்பிக்கை கொண்டும் முன்னேறி சென்று கொண்டே இருப்பவனிடம் மட்டுமே வெற்றிக்கு குடி கொள்ள பிடிக்கும்.
தற்கொலை செய்யக்கூட வேண்டுமே ஒரு நிமிட துணிச்சல் என்றபோது நீ வாழும் வாழ்க்கையை ஜெயிக்க வாழ்நாள் முழுவதும் உன்னுள்ளே உறங்கி கிடக்கும் துணிச்சலை நிச்சயம் நீ தட்டி எழுப்ப வேண்டும்…
தமிழ் மாலை வணக்கம் வாழ்த்து கவிதை வரிகள்
சூழ்நிலைகள் மாறினாலும் பருவங்கள் ஓடினாலும் அன்பு என்ற ஈரம் ஒன்று மட்டும் மாறாமல் இருந்தால் மனம் என்றும் மாறாது இருக்கும்.
நீ செய்யும் முயட்சிகள் எவ்வளவு முறை தோற்றாலும் உன் ஊக்கம் என்ற ஒன்றிட்கு சோர்வு என்ற ஒன்றை நீ அளிக்காதவரை என்றுமே நீ கடுமையான போராளி தான் …
உன்னை பிரிய நினைக்கும் உறவுகளிடம் நீ கெஞ்சுவது கூட கேலிக்கூத்தாக தான் என்னவோ அவர்களுக்கு தெரியும் சிறிதும் உன் மீது இரக்கம் வரப்போவது இல்லை என்றபோது நாமாகவே விலகி விடுவது தான் நல்லது…
எந்த வேலையையும் செய்யலாம் எவ்வளவு துன்பங்களையும் நீ தாங்கலாம் தன்மானம் என்ற ஒன்றிட்கு இழுக்கு வராத வரை…
நாம் நினைக்கும் எண்ணங்களில் புதுமையை புகுத்தினால் வாழ்க்கை என்பது நிற்சயம் வளம் பெறும் என்றென்றும் வர்ணஜாலமாய்…
ஒருவர் மீது ரொம்பவும் பாசம் வைத்தும் அதீத அன்பு வைத்து ஏமாறுவது பழகி விட்டது என்றாலும் கூட மனது என்றுமே பழகியவர்களை வெறுப்பதும் இல்லை அவர்கள் நினைவுகள் நம் நினைவுகளில் என்றுமே மறப்பதும் இல்லை.
தேவைகளுக்கு மட்டுமே இங்கு மதிப்பு இதுதான் உலகம் என்றபோது நீயும் தேவை இல்லை என்று ஒரு நாள் அன்பான உறவுகள் நினைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. காவே எ கிரேட் ஈவினிங் பார் ஆல்
யாவும் நலம் தரும் என நம்புவோம் நன்மை ஒன்றையே மனதுக்கு சொல்லி கொடுப்போம் என் இனிய பொன்னான மாலை வணக்க வாழ்த்துக்கள்..
நீ இன்று செய்யும் ஒவ்வொரு காரியங்களும் நாளை நடக்கும் உன்னுடைய எதிர்கால இன்பத்திற்கு காரணமாக அமையலாம் அல்லது துன்பத்திற்கு பாதகமாக இருக்கலாம் ஆதலால் எதை செய்தாலும் சிந்தித்து செயலாற்றுங்கள் ..
மாலை வணக்கம் போட்டோஸ் வாழ்த்து படங்கள்
அமைதி பிறக்கும் மனதில் தான் சந்தோஷம் நிலைக்கும். என்றும் அமைதியின் வழியே செயலாற்றுங்கள் நல்ல எண்ணங்களை சொல்லிலும் செயலிலும் வெளிக்கொணருங்கள். என் அன்பான மாலை வணக்கம்…
வெறும் பொன்னும் பொருளும் நாம் வாழும் இந்த ஒரு வாழ்க்கையை முழுமை அடைய செய்யாது நிம்மதி என்ற ஒன்று உன்னுள் என்றுமே குடி கொண்டால் அதை விட பெரியது என்று ஏதும் இல்லை இங்கு.
தினமும் உதிக்கும் சூரியன் ஒரு நாள் வராவிடில் நமக்கு விடியல் இல்லை அது போல தான் உனது வெற்றியும் ஒவ்வொரு நாளும் நீ நினைத்த காரியத்தை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளாவிடில் வெற்றி வாய்ப்பு எனும் விடியல் உனக்கானதாக அமையாது.
தேடல் என்ற தீராத பசி தான் இந்த உலகின் பற்பல கண்டுபிடிப்புகளுக்கும் அறிவியல் தொழில்நுட்பங்களுக்கும் மூல காரணம்..இனிய மாலை நேர வணக்கங்கள்…
இன்னிசை தென்றலில் மயங்கி அசைந்தாடும் மரங்கள், பாடும் குயில்களின் இனிய காணங்கள் பற்பல ராகங்கள் வானம்பாடியின் பலவித வர்ணஜாலங்கள், பாடாத பறவைகளின் ரீங்கார கீச்கீச்சுகள் மனதை மயக்கும் மஞ்சள் நிற வெளிச்சத்துடன் வானத்தின் போர்வையை மாற்றும் முனைப்பில் மேகங்களின் அணிகலன்கள் என யாவுமே அற்புதமே இந்த அழகிய மாலை பொழுதில்.
இழந்ததை எண்ணியே தினமும் நொந்து சாவதை விட இருப்பதை நினைத்து சிறப்புடன் வாழ கற்று கொள்ளலாம்…!
வாய்ப்புகள் வரும்போது அதை கெட்டியாக பிடித்துக்கொண்டு சமயோஜித புத்தியும் அதீத உழைப்பும் ஒன்று சேர்த்து தனது காரியத்தில் காட்டுபவனுக்கே வெற்றி என்பது ஊர்ஜிதமாகிறது.
அனுதினம் சுவாசிக்கும் காற்றை போல நட்பையும் நாள் தவறாமல் சுவாசிப்போம் மனதார நல்ல நண்பர்களை என்றுமே நேசிப்போம். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மாலை வணக்கங்கள்..
இதமான தென்றல் மேனியில் வருடி இதுவரை வீசிய அணல் காற்றின் சூடு தணிந்து முழுவதுமாய் படர்ந்து தேகத்தை குளிர வைத்து சுகம் சேர்க்கும் நேரம் தான் மாலை வேளை.
எந்தவொரு செயலும் செய்த பிறகு அதை எண்ணி மனவேதனை அடைவதால் ஒன்றும் இங்கு மாறப்போவது இல்லை. மாறாக நீ செய்த ஒரு தவறை அடுத்த முறை செய்யக்கூடாது என்ற ஒரு கவனம் மட்டும் நீ கருத்தில் கொண்டால் போதும் அதுவே உன்னுடைய பழைய தவறுக்கு நீ பிராயச்சித்தம் தேடி செல்வது போல தான்.
மாலை வணக்கம் புகைப்படங்கள் எஸ்.எம்.எஸ் கவிதை
உன்னையே நீ வ்ருத்தி உன் எதிர்கால திட்டத்தை நிலை நிறுத்தி முன்னோக்கி சென்று வெற்றிக்கனியை பறிப்பதில் தான் இருக்கிறது வாழ்க்கையின் சுவாரசியம்.
அடுத்தவர்களின் தவறை மன்னிக்கும் மனப்பக்குவம் உனக்கு இருந்தாலே நீ மிகுந்த மனவலிமை படைத்தவன் என்று அர்த்தம்.
நட்பு என்பது ஆடம்பரம் அல்ல. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய அவசியமான ஒன்று. பிரியமான நண்பர்களுக்கு எனக்கு முதற்கண் மாலை வணக்கங்கள்.
எதுவும் முக்கியம் தான் இந்த உலகிலே எதையுமே உதாசீனப்படுத்திவிடாதே..! நாம் தெரிந்தோ தெரியாமலோ சிந்தும் ஒரு சிறு பருக்கை சோறு கூட எறும்புகளுக்கு உணவாய் அமையும்..குட் ஈவினிங் ஆல்
உன்னை போல ஒரு மனிதன் வகுத்த வரைமுறை தான் நல்லதும் கெட்டதும், செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும், பிடித்ததும் பிடிக்காததும். ஆதலால் எதையுமே உன் மனம் விரும்பினால் மட்டும் செய்து முடி இல்லையேல் பிறர் சொன்னார்கள் என்று உன் மனதுக்கு பிடிக்காததை செய்வதால் உனக்கு நிற்சயம் திருப்தி கிடைக்காது.
எந்த ஒரு செயலிலும் உனக்கு உதவ பல உறவுகள் இருந்தாலும் கூட உன் உழைப்பு என்ற ஒன்றிற்கு அங்கு வேலை இல்லாமல் போனால் உன் முயற்சிகள் பலனளிக்காது.
இன்று உனக்கு என்று ஒன்றும் இல்லாமல் போனாலும் கூட நாளை என்ற நாயகன் அள்ளி கொடுக்க உன்னை கூட தேர்ந்தெடுத்திருக்கலாம் யாருக்கு தெரியும்?
கஷ்டங்கள் வந்தால் அழுதுகொண்டு கவலைகளையே தோளில் தூக்கிக்கொண்டு சுமப்பதை விட அனைத்தையும் உதறி தள்ளி விட்டு உன்னிடம் இருக்கும் நல்லதை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டாலே நிற்சயம் வாழ்வதற்கு வழி பிறக்கும்.
வசதியாக பிழைத்தாலும் சரி வறுமையில் அல்லல்பட்டாலும் சரி என்றுமே குணம் மாறாது உயர்வையும் தாழ்வையும் சமமாக எண்ணுபவன் தான் சிறந்த மனிதன்.
உலகம் என்ற பாடசாலை ஒரு புதுமையானது தான். இங்கு மட்டுமே அனுபவம் என்ற புதிய பாட புத்தகத்தின் வாயிலாக வாழ்க்கை என்னும் தேர்வுக்கான விடை கிடைக்கிறது.
அனைத்து உயிரினங்களும் அலுத்துப்போன களைப்புடன் வாழிடம் திரும்பும் தருணம், வெயிலும் இருளும் சூழ்ந்து மேகம் மூடிய தெளிவற்ற வானம், என்றுமே பொன்மாலை பொழுது வெறும் இயற்கை காட்சி மட்டும் அல்ல பல உண்மைகளை போதிக்கும் சேதி தரும் ஒரு அதிசயம்.
குட் ஈவினிங் தமிழ் கவிதை வாழ்த்துக்கள்
ஒரு நல்ல உறவு என்றுமே புரிந்து கொள்ளாமல் கோபம் காட்டினாலும் கூட அதிலும் தூய்மையான பாசம் என்ற ஒன்று தான் வெளிப்படும் …குட் ஈவினிங் போல்க்ஸ்.
நட்பின் அருமையை பார்ப்பவர்களுக்கு தெரியாது உண்மையாய் பழகிய இரு மனங்களுக்கு தான் தெரியும் அது காதலுக்கும் அப்பாற்பட்டதென்று.
தன்னம்பிக்கை தான் எந்த காரியம் நீ செய்ய நினைத்தாலும் முதலில் நீ போடும் மூலதனம். தோல்விகளை நெருங்க விடாமல் உன்னை வெற்றிக்கு உரித்தவனாக மாற்றும் வழிமுறையை உன் தன்னம்பிக்கை ஒன்றே வழி வகுக்க வல்லது.
ஒன்றாய் இருந்த காலங்கள் கடந்தோடினாலும் ஒன்றாய் பயணித்த நேரங்கள் கூட மறைந்தாலும் என்றுமே நம் அன்பை பரிமாறிய நினைவுகளை எதை கொண்டும் அளவெடுக்கவும் முடியாது அந்த நினைவுகளை மறக்கவும் இயலாது. இனிய மாலை வணக்கங்கள்..
நேரம் இருந்தால் மட்டுமே பேசும் உறவுகள் அறவே வேண்டாம் எவ்வளவு நேரம் ஆனாலும் காலம் மாறினாலும் நிறம் குணம் மாறாது நம்மிடம் பேச என்றுமே முன்னுரிமை அளிக்கும் உறவு தான் என்றென்றும் முக்கியமே…
காதல் என்பது கண்ணில் பார்த்து வாயில் பேசி காமத்தில் முடிவது அல்ல.. உண்மையான காதல் என்றால் அது பார்வையை ஸ்பரிசித்து அன்பை வார்த்தைகளால் பரிமாறி இறுதியில் காதலித்த இதயத்தை என்றுமே நோகடிக்காமல் காலங்கள் மாறினாலும் காதல் மாறாமல் வாழ்வதே ஆகும்.
நம்மை சுற்றி ஆயிரம் சந்தோசங்கள் கிடைத்தாலும் கூட மனது ஏங்குவது என்றுமே இதயத்தில் இடம் கொடுத்திருக்கும் அந்த தகுதிக்குரிய நபரின் நிஜமான அன்பையே …
தவறே என்றாலும் கூட யாரையும் மனம் நோகும் படி பேசாதே உன் தகுதியை அவர்களை தாழ்த்தி பேசி என்றுமே குறைத்து கொள்ளாதே…!
இருக்கும் இந்த பிறவி மனித பிறவி என்பதே மகத்துவம் தானே..! இருக்கும் வரை இனிமையாய் இருப்போம் அனைவரையும் சமமாய் நேசிப்போம் அன்பு என்ற இன்பக்கடலில் மூழ்கி திளைப்போம் …
இந்த உலகை உணர்ந்து கொள்ள ஏழு பிறவி எடுத்தாலும் பத்தாது… இருக்கும் வரை உண்மையான உறவுகளுக்கு உரிமையாய் இரு… அன்பு என்ற பரிணாமம் மென்மேலும் வளர்ந்து கொண்டே போகட்டும்…
ஏங்க இந்த பதிவுகளையும் பாருங்க 🙂
தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள்(Opens in a new browser tab)
தமிழ் வாழ்க்கை தத்துவம் கவிதை | நல்ல அறிவுரை வரிகள்(Opens in a new browser tab)
காதல் தோல்வி கவிதை படங்கள் | Love Failure Images(Opens in a new browser tab)
இனிய காதல் கவிதைகள் 2019(Opens in a new browser tab)
தமிழ் எஸ் எம் எஸ் வரிகள் | Tamil SMS Lines(Opens in a new browser tab)
புத்தம் புதிய அழகிய தமிழ் கவிதைகள்(Opens in a new browser tab)
மனம் கவரும் தமிழ் மழை கவிதைகள் | மழை ஹைக்கூ கவிதை(Opens in a new browser tab)
தித்திக்கும் தமிழ் உண்மை காதல் கவிதைகள்(Opens in a new browser tab)
வாழ்க்கை சிந்தனை துளிகள் பொன்மொழிகள் கவிதைகள் படங்கள்(Opens in a new browser tab)