ஓடாமல் ஓடி வேலை செய்து வரும் நமக்கு மதியம் தான் நினைவுக்கு வரும் பசி. உச்சி வெயில் எங்கு நடந்து போனாலும் நம்மை கொல்லாமல் கொல்லும் வேளை தான் இந்த மத்தியான வேளை. காலை வேளைக்கும் இரவு வேளைக்கும் நடுவில் இருப்பது தான் இந்த மதியம். இத்தகைய சூரியன் அனல் வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் சிறிது நமக்கும் நமது உடலுக்கும் ஓய்வு நிற்சயம் தேவைப்படுகிறது.
இந்த சமயத்தில் சற்று இளைப்பாறிய நேரத்தில் நமது நண்பர்களுக்கும் உற்றார் உறவினர் அல்லது அண்டை அயலார்களுக்கும் மதிய நேர வணக்கம் வாழ்த்துக்களை அனுப்பி நாம் அவர்களை மகிழ்விக்கலாம். எனவே இந்த பதிவில் நான் மதிய வணக்கம் கவிதைகளையும் அதை சார்ந்த படங்களையும் பதிவிட்டு உள்ளேன். நீங்கள் இந்த மதிய வணக்கம் பதிவை பார்த்தும் உங்களுக்கு பிடித்த ஒன்றை நண்பர்களுக்கு வாட்சப், பேஸ்புக் மற்றும் இதர இணைய தளங்களில் அனுப்பி மகிழுங்கள்.
Table of Contents
இனிய மதிய வணக்கம் வாழ்த்துக்கள்
பணம் மட்டும் தான் பிரதானம் என்று நினைக்கும் முட்டாள் மனிதர்களுக்கு இடையில் பாசத்துக்கு கூலி இல்லை… நேசத்திற்கு வேலை இல்லை…. இனிய மதிய வணக்கங்கள்.
கடந்து போன காலங்களை கடாசிவிட்டு உன் எதிர்காலத்தை நினைவில் வைத்து நிகழ் காலத்தை திறம்பட சமாளிப்பதில் அடங்கியிருக்கிறது உன் வாழ்க்கையின் வெற்றி.
சில உறவுகள் இடம் பெயர்ந்தாலும் நிறம் மாறினாலும் கூட நாம் அவர்கள் மீது வைத்து இருக்கும் அந்த உணர்வுகள் எப்போதுமே தடம் புரளுவது கிடையாது. அனைத்து நண்பர்களும் நல்ல மதிய வணக்கம்.
காலங்களின் கோலங்கள் மாறினால் கூட உன் மீது வைத்திருக்கும் என் தூய்மையான நேசம் அந்த கோளங்களின் வர்ணங்களாய் வண்ணமயமாய் இன்னமும் ஜொலித்து கொண்டு தான் இருக்கின்றது.
உன்னால் முடியும் என்பதை உறக்கக் கூறாதே அதை விடுத்து அந்த செயலை அச்சமின்றி செய்து சாதித்து காட்டு.
எந்த ஒரு செயலிலும் சரியான திட்டமிடல் இல்லையென்றால் உன்னால் நிலைப்பாட்டோடு அதை நிறைவேற்ற முடியாது என்பது தான் உண்மை எனவே முதலில் எந்த காரியம் ஆயினும் திட்டமிட கற்றுக்கொள். அனைத்து நெஞ்சங்களுக்கும் பிரியமான நண்பகல் வேளையில் வணக்கங்கள்.
கூர்மையான ஆயுதம் என்பது கோடாரியோ அரிவாளோ கேடயமோ அல்ல. உன்னுடைய மூளை மட்டுமே உன்னை காக்கும் மிகச்சிறந்த ஆயுதம்.
உன்னால் ஊறிப்போன இந்த நியாபகங்கள் எனக்குள் நிறைந்து உன்னை எண்ணியே என்னுள் நீங்காது நனைந்து விட்டது நீ தந்த காயங்களில் அது முழுவதுமாய் நிலைத்தும் விட்டது.
தினம் தினம் உன்னை பிரிந்து வாழும் இந்த இதயத்தின் உள்ளே உன் எண்ண அலைகள் உறங்கி தான் கிடக்கின்றது உனக்கே உனக்காக என்றுமே கட்டுப்பட்டு.
இந்த உலகில் நம்மை ஏமாற்றும் தந்திரமான மந்திரவாதி தான் இந்த எதிர்பார்ப்புகள். ஏமாற்றங்கள் கலைக்கப்படும் ஒரே இடம் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழும் வாழ்க்கை மட்டுமே. நண்பர்களுக்கு குட் ஆப்டர்நூன்.
மதிய வாழ்த்து கவிதைகள் மற்றும் படங்கள்
எந்த விஷயத்திலும் பக்குவமாய் பேசி சமாளிக்க தெரிந்தவனும் அனைவரிடமும் வளைந்து போக தெரிந்தவனே இந்த உலகத்தில் வாழ தெரிந்தவர்கள்.
மாற்றம் வரும் என காத்திருந்து ஏமாறுவதை விட மாற்றத்திற்கான அஸ்திவாரத்தை நீயே உன்னில் இருந்து தொடங்கலாம்.
ஒருவரிடம் அதிக உரிமை எடுத்து கொண்டு அவர்களின் வெறுப்பை சம்பாதிப்பதை விட நம் மீது அதீத உரிமையாய் இருப்பவர்கள் மீது அன்பு செலுத்தி ஆனந்தம் அடையலாம். அனைவருக்கும் எனது இனிய சிறப்பான மத்திய வணக்கங்கள்.
சிறப்பான மதிய உணவு விருந்து உண்டு உச்சி வெயிலில் களைப்படைந்த இந்த உடலுக்கு சிறிது ஓய்வை கொடுங்கள். இனிய மத்திய வணக்கங்கள்.
தோல்விகள் இல்லாத வெற்றியில் இன்பம் கிடைப்பது இல்லை எனவே தோல்வியும் உனது வருங்கால வெற்றியின் நன்மைக்கே. குட் ஆப்டர்நூன் பார் யூ..
முயற்சித்து தோற்றால் உன்னை நினைத்து நீயே பெருமை கொள்வாய். அதுவே பிறர் முயற்சியால் நீ வென்றால் உன் நிழல் கூட உன்னுடைய அந்த வெற்றியில் பங்கு கொள்ள தயங்கும்.
காணும் வரை எதுவும் நிஜமல்ல. நீ அதை உணராத வரை வெற்றி என்பது எளிதல்ல.
அனைவரிடம் அன்பு வைக்கும் மனதுக்குள் கூட கஷ்டங்கள் இருக்கும் சொல்லா வேதனைகள் கிடக்கும் மாறாத காயங்கள் எந்நாளும் ரகசியமாய் தினமும் சோதிக்கும்.
கால சக்கரம் மாறுவதை போல இந்த உலகில் இன்பமும் நிரந்தரம் இல்லை துன்பமும் நீங்காமல் உன்னை சுற்றி கடைசி வரை வரப்போவது கிடையாது… எந்த நிலை வந்தாலும் நிறம் மாறாது நல்ல குணத்தோடு வாழ்வது தான் இந்த மனித பிறவியின் அழகு.. குட் நூன் ஆல் பிரண்ட்ஸ்..
உரிமை உள்ள உறவிடம் உயிரினும் மேலாக அன்பு காட்டு தவறு இல்லை ஆனால் அர்த்தமற்ற உறவுகளிடம் புரிந்து கொள்ளாமல் அன்பு வைத்து ஏமாந்து விடாதே…
மதிய வணக்கம் இமேஜ் மற்றும் போட்டோஸ்
அர்த்தமில்லாமல் ஆயிரம் வார்த்தை பேசி பிரயோஜனம் இல்லாமல் போவதை காட்டிலும் அர்த்தத்தோடு நான்கு வார்த்தை கூறுவது எவ்வளவோ மேல்.
பொறுமையும் நிதானமும் எப்போதும் வெற்றி பெறுபவனுக்கு உரித்தான குணமே அதனால் எப்போதுமே இதை பின்பற்றி என்றும் வெற்றி சாலியாக ஜொலியுங்கள்… இனிய மதிய சாப்பாடு வணக்கம்..
எந்த வேலையையும் நாளை என்று சொல்லி தள்ளி கொண்டே போய் இன்று என்ற நிஜத்தை உதாசீனப்படுத்தாதே… நண்பர்கள் அனைவர்க்கும் வெரி குட் ஆஃப்டர் நூன் …
எதுவும் படியும் உன் பிடியில் மடங்கும் அதை செய்யும் வலிமை உன்னுள் பிறந்தாலே …
வாழ்க்கை கசப்போ இனிப்போ என்பது இங்கு கணக்கில் கிடையாது. வாழ போகும் வாழ்க்கையின் அர்த்தம் தான் இந்த நிஜ உலகில் மிக முக்கியம்.
பிறர் போல வாழ வேண்டுமே என்று நினைத்து ஒருவரின் சாயலை அவர் பாணியில் பின்பற்றுவதை விட உன்னை தனி ஒருவனாக நிரூபிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து உன்னை இந்த உலகத்திற்கு உன் திறமையினால் உன்னை நிரூபி.
எந்த செயலும் நீ என்ன நினைக்கிறாய் எந்த கோணத்தில் நீ பார்க்கிறாய் என்பதை நிர்ணயித்தே உன் மனவலிமை அமையும். ஆகவே எதையும் நேர்மறையாகவும் தைரியத்துடனும் எதிர்கொண்டால் உனக்குள்ளே பிறக்கும் துணிச்சல் மலைக்க வைக்கும் அளவுக்கு வெற்றியை பெற்று தரும். அனைவருக்கும் எனது இனிய மத்தியான வணக்கங்கள்..
நமக்கு உரிமையான சொந்தம் சொல்லிக்கொள்ள கிடைக்கும் உறவுகள் நம் உணர்வுகளை காயப்படுத்தும் போது தான் நம் சொல்லாத இதயத்தின் வலியை உணர முடிகிறது.
என்று தேவைகள் அனைத்தும் இங்கு பூர்த்தியானாலே வாழ்க்கை என்பது எளிதாகி விடும்… சுவாரசியம், குதூகலம் மனதில் நிலைத்து விடும் கவலைகள் அனைத்தும் கரைந்து விடும். குட் நூன் பார் ஆல்.
நீ இந்த உலகில் கற்ற பாடங்களை விட மிக மிக விலை மிகுந்தது உனக்கான தேடலில் கிடைக்கும் அனுபவம் என்ற மிக சிறந்த காண கிடைக்காத பொக்கிஷமே.
எதை பேசினாலும் உன் மனதை சாட்சியாக வைத்து பேசு…எப்போதும் உன் மனசாட்சி உன்னை நல்வழியில் நடத்தும்.
உன் மனம் ஒன்றிற்கே எதை செய்தாலும் எக்காரியம் ஆனாலும் உன்னை தடுத்து நிறுத்தும் சக்தியும் உன்னை முன்னோக்கி நடத்தி செல்லும் வலிமையையும் தர வல்லது.
மத்தியான வணக்கம் எஸ்.எம்.எஸ் தமிழ் கவிதை வரிகள், புகைப்படங்கள்
விடுகதையான இந்த புதிரான வாழ்க்கைகுள்ளே விடையை அறிவதற்குள் வாழ்நாளே பாதி முடிந்து விடுகிறது.
லட்சியம் என்பது சிறு வார்த்தை தான் அதை அடைய முயலுகையிலே அதன் பயணமோ வெகு தொலைவில்…! எனது மதிய வணக்க வாழ்த்துக்கள்…
அழகு என்பது பார்க்கும் பார்வையில் என்றுமே தென்படுவது இல்லை.. மாந்தரின் குணத்திலும் நற்பண்புகளிலே உண்மையான அழகு இருக்கிறது…
எதை இழந்தாலும் முன்னேறி சென்று கொண்டே இரு இன்று உனது வழிகள் கரடு முரடாக தடைக்கற்களாய் இருந்தாலும் ஒரு நாளில் நீ நடந்து வந்த பாதைகள் எல்லாம் நீ ஜெயிப்பதற்கு உதவும் படிக்கட்டுகளாக அமையும். பொன்னான மத்திய நமஸ்காரங்கள்…
பார்த்தும் பார்க்காத மாதிரி பேசாமல் சென்றாலும் நினைக்காமல் இருந்தாலும் கூட சில உறவுகளை இந்த மனதுக்கு மறக்க தெரியாமல் நினைவில் தினம் தினம் வந்து செல்கிறதே …!
நீ விட்டு சென்ற நாள் முதல் நினைவுகள் என்ற விறகில் தினமும் குளிர் காய்கிறேன் நம் காதல் என்னும் அனலை மூட்டி மீண்டும் மீண்டும் …!
நம்மை விட்டு செல்ல வேண்டுமென்று நினைத்து பிரிபவர்களுக்கு என்ன சொல்லியும் பயனில்லை என்று தெரிந்த பிறகும் மீண்டும் அவர்களுக்காக இந்த இதயத்தில் என்னவோ ஏதோ ஒரு இடம் இருக்க தான் செய்கிறது…!
பொய்கள் ஆளலாம் உண்மைகள் மறைக்கப்படலாம் நேர்மை என்ற ஒன்று உலகில் இல்லாமல் கூட போகலாம் ஆனால் என்றுமே கர்ம வினை என்பது காலங்கள் கடந்தாலும் உன்னுடைய செயலுக்காக நீ நிற்சயம் அனுபவித்தே தீருவாய்…! என்றுமே இந்த கனிவான நண்பனின் குட் ஆஃப்டேர்நூன் விசஷஸ்…
இதையும் படியுங்களேன் …!
தமிழ் எஸ் எம் எஸ் வரிகள் | Tamil SMS Lines(Opens in a new browser tab)
சிறந்த தமிழ் அன்பு கவிதைகள் மற்றும் படங்கள்(Opens in a new browser tab)
உயிர் நட்பு தோழி தோழன் நண்பர்கள் கவிதைகள்-Friendship Kavithaigal(Opens in a new browser tab)
உற்சாகமூட்டும் தன்னம்பிக்கை கவிதை வரிகள் படங்கள்(Opens in a new browser tab)
சிறந்த அம்மா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | அன்னை தாய் வாழ்த்து(Opens in a new browser tab)
சிறந்த தமிழ் அன்பு கவிதைகள் மற்றும் படங்கள்(Opens in a new browser tab)
தமிழ் கண்ணீர் கவிதைகள் சோக வரிகள்(Opens in a new browser tab)
காதல் தோல்வி கவிதை படங்கள் | Love Failure Images(Opens in a new browser tab)