உன் நினைவுகள் என்னும் கானகத்தில் பிரிவு எனும் வலியை தந்து இடைவிடாமல் என்னை நனைய செய்து விட்டாயே.
என்னை அனுதினமும் பேசாமல் கொள்ளும் கூர்மையான ஆயுதம் அவளின் மௌனம்.
ஒருவரிடம் நேற்று எப்படி இருந்தோம் என்பது மறப்பதற்கு அவரிடம் இன்று தோன்றும் ஒரு சிறு மாறுதல் போதுமானதாக அமைந்து விடுகிறது.
வலிகள் எவ்வளவு தான் எனக்கு நீ தந்தாலும் நான் தாங்கி கொள்ள தயாராக இருக்கிறேன் பிரிவு என்ற ஒன்றை மட்டும் நீ எனக்கு தர மாட்டாய் என்ற நம்பிக்கையுடன்.
வாழ்க்கையில் நான் கற்று கொண்ட பாடங்களை விட அது எனக்கு கற்று கொடுத்த அனுபவங்களே இங்கு அதிகம்.
எந்த உறவும் கடைசி வரையில் நிலைக்காது என்று தெரிந்து கொள்ளும்போது வாழ்க்கையில் அமைதிக்கான விடை கிடைத்து விடுகிறது.
பெண்ணே என்னை பற்றி நீ நிலவிடம் கேட்டு பார் அதன் பின்பு நீ உணர்வாய் தினமும் உன்னை காணாமல் உன் நினைவுகளை எண்ணியே நான் வருந்தும் வேதனைகளை.
நம் இருவருக்கும் நேசம் என்ற ஒன்று நமக்குள் இருக்கும் வரை காதல் என்ற உண்மையான உணர்வுகளுக்கு அழிவு என்பது இல்லை.
என்னை உனக்கு பிடிக்காது என்று முன்னரே நான் அறிந்திருந்தால் என் காதல் உணர்ச்சிகளை ஆரம்ப கட்டத்திலேயே நான் உதறி தள்ளியிருப்பேன்.
பிடித்தால் பாசமாக பேசுவதற்கும் பிடிக்காமல் போனால் வேஷம் கலைந்து ஏசுவதற்கும் நான் எவருக்கும் விளையாட்டு பொம்மை அல்ல.
நம்மிடம் விரும்பி வந்து பேசும் உறவுகள் ஆயிரம் கிடைத்தாலும் மனம் ஏனோ நாம் விரும்பி பேசும் உறவுகளையே அதிகம் நேசிக்கிறது.
என் வாழ்க்கையின் அனைத்து சுக துக்கங்களை பங்கிட்டு கொள்வேன் தினமும் நான் தூங்கும்போது எனக்கு ஆதரவாய் இருக்கும் என் தலையணையிடம்.
உன் காதல் நினைவுகளின் கடந்த கால தாக்கத்தால் என் நிகழ் கால கனவுகளும் பாதிக்கப்படுகின்றன.
உன் மன குகையில் என்னை வைத்து பூட்டி உனக்கானவனாய் என்னை கொஞ்சம் மாற்றி நாள் பொழுதும் உன் கனாக்களையே என் ஒவ்வொரு கணங்களாகி விட்டாயே உன் காதல் நிலவே!
நம்மை ஒருவர் வேண்டாம் என்று விலகி போகும்போது தான் நம்மால் ஒருவர் காயப்பட்ட வலியை உணர முடிகிறது.
நீ என்னை உன்னிடம் இருந்து விலக்கிய போது தான் உணர்ந்தேன் உன் மேல் கொண்ட என் முழு காதலின் ஆழத்தையும் உன்னால் எனக்கு ஏற்பட்ட காதலின் வலியையும்.
உன்னால் எனக்கு உடலில் உண்டான காயமாக இருந்தால் விரைவில் மருந்திட்டு ஆற்றியிருப்பேன் மாறாக உள்ளத்தை நோகடித்து ஆறா தழும்பாக என்னுள் அடையாளமாகி விட்டாய்.
சில சமயம் மனத்தால் இடை விடாது நேசித்து கண்களில் தெரியும் பார்வை மொழிகளில் கூட வெளிப்படும் உண்மையான அன்பு.
காரியம் சாதிப்பதற்காக சிரித்து பேசி என்னிடம் அன்பு காட்டும் பொய்யான வேஷம் வேண்டாம். என்றுமே நேசமுடன் கோபத்தை காட்டும் மெய்யான அன்பு ஒன்று இருந்தால் அது போதும் எனக்கு.
வார்த்தைகள் என்றுமே விஷமத்தனமானது பல நாள் பழகியவர்களை கூட ஒரு நொடியில் பிரித்து விடும்.
நீ இல்லாத இந்த உலகத்தில் வெறும் உடலாக மட்டுமே நான்… என் உயிர் சுவாசமாக என்னுள் ஐக்கியமாகிவிட்டாய் நீ….
எவ்வளவோ எடுத்து சொல்லியும் புரிந்து கொள்ளாத உறவுகளுடன் சேர்ந்து இருந்து அவர்களின் வெறுப்பை சம்பாதிப்பதை விட அவர்களை விட்டு விலகி இருப்பது எவ்வளவோ மேல்.
ஒரு முறை காயம் பட்ட மனது என்பது கறை படிந்த ஆடை மாதிரி தான். மீண்டும் அதை போக்க நினைப்பது என்பது வீண் வேலை.
கத்தியில் குத்தாமல் ரத்தமும் சிந்தாமல் என்னை வேண்டாம் என்று நீ சொல்லிய அந்த ஒரு வார்த்தையில் நான் சீர் குலைந்து போனேன்.
என் பார்வைகளில் உள்ள மொழிகளை உன்னால் உணர முடிந்தால் என் அன்பினை முழுமையாக புரிந்து கொண்டு என்னோடு நீ அங்கமாகி விட்டாய் என்று அர்த்தம்.
கடிகார முள்ளால் ஓடும் நிமிடம் போல் உன் காதல் என்ற முள்ளால் என்னை நீ ஒவ்வொரு நிமிடமும் இனிமையான ரணமாய் கொல்கிறாய்.
உறவுகளில் எவ்வளவு சண்டைகள் வேன்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு சிறு சந்தேகம் கூட வர கூடாது.
உலகில் மிக கொடுமையான ஒன்று நம் அன்பை புரியாது நோகடித்தவர்களுக்காக மீண்டும் திரும்பி வருவார்கள் என காத்திருப்பது.
உண்மையான பாசம் வைத்து ஒருவரிடம் ஏமாறும் உயிர்களுக்கு மட்டுமே கண்ணீர் துளிகளின் அருமை புரியும்.
உன்னை பிடிக்காமல் விலகி செல்ல நினைப்பவர்களுக்கு நீ செய்யும் ஒவ்வொரு செயல்களும் தப்பானதாகவே அமையும்.
இந்த உலகில் பணம் கொடுத்து கிடைக்காத ஒரு பொருள் தான் காதல். ஆனால் ஏனோ சிலர் செய்யும் தவறுகளால் காதலையும் வியாபாரமாக்கி விட்டார்கள்.
Comments
very nice. loved your work.