செல்ல மகள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

செல்ல மகள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

குழந்தை வரம் என்பது இறைவன் அருளால் நமக்கு கிடைப்பது. இன்றும் கல்யாணம் ஆகி குழந்தைக்காக பலர் ஏங்கி வருகின்றனர்.

அத்தகைய மழலை செல்வங்கள் என்றுமே நமக்கு விசேஷம் தானே!

பிள்ளைகள் உள்ள வீடுகளில் சந்தோஷங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆணோ பெண்ணோ எதுவாக இருந்தாலும் முழுமனதோடு ஏற்று கொண்டு தன் பிள்ளையை வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்குவதில் தான் பெற்றோர்களின் கடமைகள் ஒளிந்திருக்கிறது.

இந்த பதிவில் மகள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை மடல்களை பதிவிட முற்பட்டுள்ளேன்.

அதிலும் பெண் பிள்ளைகள் என்றால் சொல்லவே வேண்டாம் குறிப்பாக மகள் பிறந்தாளே மங்களம் கூடுகிறது இல்லத்தில்.

அவளின் கொஞ்சும் மழலை குரல்களில் மூழ்காதவர் எவரும் இலர்.

ஒவ்வொரு தந்தைக்கும் தெரியும் பெண் குழந்தைகளின் அவசியத்தை. ஒரு பெண் தன் அப்பாவை விரும்பும் அளவுக்கு இந்த உலகில் அதைவிட யார் அன்பாய் இருந்து விட முடியும்?

உன்னதமான மகள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்

மகள் பிறந்ததை மஹாலக்ஷிமியே பிறந்ததாக பாவிக்கும் குடும்பமும் இங்கு உண்டு.

அதே போல் பெண் குழந்தை என்று தெரிந்தவுடன் கல் மனதோடு கரு கலைக்கும் மோசமான சம்பவங்களும் இந்த சமூகத்தில் அரங்கேறத்தான் செய்கின்றன.

எது எப்படியோ இந்த பதிவில் தன் மகளை கொஞ்சும் தாயும்,தந்தையும் அவளின் பிறந்த தினத்தை எப்படி உணர்ந்திருப்பார் என இதோ என் கற்பனை வடிவில் மகள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகளை அமைத்திருக்கிறேன்.

உங்களுக்கு பிடித்த கவிதைகளை பார்வையிட்டு உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து பயன் பெறுங்கள் நன்றி.

பூக்களின் எதிரி அழகிலே, நிலவுக்கு சொந்தக்காரி நிறத்திலே, குறும்புக்கார சிறுமி குணத்திலே, வாய் ஜால கில்லாடி பேச்சிலே, பாசமிகு தேவதை எங்கள் இதயத்திலே. எம் வம்சத்தின் குலவிளக்கான என் செல்ல குட்டிக்கு இன்று பிறந்த நாளாம் என் பொன்னான நல்வாழ்த்துக்கள்

மகள் பிறந்த நாள் வாழ்த்து கவிதை

பூக்களின் எதிரி அழகிலே, நிலவுக்கு சொந்தக்காரி நிறத்திலே, குறும்புக்கார சிறுமி குணத்திலே, வாய் ஜால கில்லாடி பேச்சிலே, பாசமிகு தேவதை எங்கள் இதயத்திலே.

எம் வம்சத்தின் குலவிளக்கான  என் செல்ல குட்டிக்கு இன்று பிறந்த நாளாம் என் பொன்னான நல்வாழ்த்துக்கள்.

எங்கள் வாழ்க்கையின் சிறந்த தினம் என் மகளாக இந்த குடும்பத்தில் நீ ஒரு அங்கமாக ஜனனித்த இந்த உன் பிறந்த தினம்

மகள் பிறந்த நாள் வாழ்த்து கவிதை

எங்கள் வாழ்க்கையின் சிறந்த தினம் என் மகளாக இந்த குடும்பத்தில் நீ ஒரு அங்கமாக ஜனனித்த இந்த உன் பிறந்த தினம்.

அன்று நீ பிறந்த இந்த நாளில் நம் குடும்பத்தில் மகாலட்சுமியே குடி வந்தது போல உணர்ந்தேன் என்றுமே நீ இன்பமாகவும் நினைத்தது அனைத்தும் ஜெயம் பெற வாழ்த்துகிறேன்

மகள் பிறந்த நாள் வாழ்த்து கவிதை

அன்று நீ பிறந்த இந்த நாளில் நம் குடும்பத்தில் மகாலட்சுமியே குடி வந்தது போல உணர்ந்தேன்.

என்றுமே நீ இன்பமாகவும் நினைத்தது அனைத்தும் ஜெயம் பெற வாழ்த்துகிறேன்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.