சிறந்த தனிமை சோகம் கவிதை வரிகள்
வாழ்க்கையில் நான் நினைத்தது எதுவும் கிடைக்காமல் போகும்போதெல்லாம் ஆதரவாய் வந்து என்னிடம் ஆறுதல் சொல்கிறது இந்த தனிமை.
நீ நீக்கினாலும் கூட உன் நினைவுகள் என்னும் பெருங்கடலில் கரை சேர இயலாமல் நான் தவிக்கிறேன்.
கனவுகள் பல இருந்தும் என் நிகழ்கால நிலையை எண்ணி வருந்தி தனிமையோடு தடுமாறி கிடக்கிறேன்.
விளக்கம் அளித்து விலகி செல்ல நினைக்கும் உனக்கு தெரியவா போகிறது நீ இல்லாத இந்த வாழ்க்கையில் நான் வாழ முடியாது என்று.
தேவைகள் தேவைப்படும்போது கிடைக்கும் உறவுகள் என்றுமே நிலையானதும் இல்லை அவைகள் நிலைப்பதும் கிடையாது.
பல கோடி மக்களுடன் உரையாடினாலும் இந்த நெஞ்சம் என்ற ஒன்று என்னமோ எதிர்பார்ப்பது சில பாசமான நேசங்களிடம் தான்.
நம்மை சுற்றி ஆயிரம் உறவுகள் கிடந்தாலும் விரும்பிய உறவை நம்பி ஏமாந்த மனதுக்கு தீர்வு என்பது தனிமை மட்டுமே.
உன்னையும் என்னையும் சேர விடாமல் தடுப்பது உன் தலைக்கனமா? இல்லை என் தலைவிதியா? என்பது தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் உன்னால் எனக்கு கடைசியில் பரிசாக மிஞ்சுவது இந்த தனிமை மட்டுமே.
மெல்லிசை போல உன் இனிமையான நினைவுகளும் நாம் பழகிய அந்த சுகமான நேரங்களும் தான் நீ இன்றி போனாலும் என் தனிமையுடன் நான் கழிக்கும் ஒரே பொழுது போக்கு.
தனிமை கொடுமை | காதல் பிரிவு வலி கவிதைகள்
சில்லென்ற குளிர் காற்றின் தூறலால் சிலிர்த்து போன அங்கங்கள் திங்களின் ஒளியை மூடி மறைக்க துடிக்கும் மேகங்கள் அமைதியான அந்த நடு இரவிலும் இனிய இசையாய் ஒலிக்கிறது பறவைகளின் சப்தமிடும் ரீங்காரங்கள் இவற்றின் இடையே நான் அமைதியின் வழியே மனதில் கறை படிந்த நினைவுகளுடன் ஐக்கியமாகிறேன் தனிமையில் நிலவுடன் …
என் வாழ்வில் நாம் இருவரும் இணைந்து இருந்தால் காலம் முழுவதும் நமக்காக வாழலாம் காதலுடன்… இல்லையெனில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உன்னை எண்ணியே காத்திருப்பேன் இந்த தனிமையுடன்.
வாழ்க்கை கற்று கொடுக்கும் இந்த விலைமதிப்பு மிக்க பாடத்தின் இறுதியில் நாம் தேடி அலைவது நிம்மதியையே விரும்புவது தனிமையையே.
சில சமயம் எதுவும் புரியாமல் காரணம் தெரியாமல் நடப்பதை அறியாமல் கடந்து போன காலங்களை எண்ணி தனிமையுடன் மனம் போன போக்கிலே மூழ்கி திளைக்கிறோம்.
நீ பிறக்கும்போது தமையில் தான் பிறக்கிறாய் இறக்கும்போதும் தனிமையிலே இறக்கப்போகிறாய் எனவே இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையை உன் உறவுகளோடு கொண்டாடி விடு.
யாரும் இல்லாத நேரம் நீ யாருடன் அதிகமாக மனதோடு அவரிடம் பேசுவது போலவே பேசிக்கொள்கிறாயோ அவரே உனக்கு பிடித்தமான நபர்.
உண்மையான காரணங்கள் இருந்து பிரிவை தருபவர்களை விட நம்மை பிடிக்காத காரணத்தால் சில காரணிகளை அவர்களாக உருவாக்கி தீராத சோகத்தையும் தீர்க்க முடியாத தனிமையை தருபவர்களே இங்கு அதிகம்.
அவளுக்கு நானே துணை என்று நினைத்திருந்தேன் பின்பு தான் எனக்கு தெரிந்தது தனிமைக்கு துணையாக என்னை விட்டு சென்று விட்டாள் என்னவள்.
தனிமை என்றுமே தனியாக வாடியதில்லை என்றும் துணையாக அதன் கூடவே நான் இருப்பதால்.
இதர பயனுள்ள பதிவுகள் 🙂
சிறந்த 31 தமிழ் பீலிங் கவிதைகள் (Tamil Feeling Kavithaigal)
என் இனிய தமிழ் மழை கவிதை வரிகள்
சிறந்த நண்பனுக்காக 10 பிறந்த நாள் வாழ்த்து கவிதை
காதல் தோல்வி கவிதைகள் (காதல் பிரிவு)
உயிர் நட்பு தோழி தோழன் நண்பர்கள் கவிதைகள்-Friendship Kavithaigal
மனதை தொடும் தமிழ் கவிதைகள் | Tamil Kavithai Images
வாழ்க்கை சிந்தனை துளிகள் பொன்மொழிகள் கவிதைகள் படங்கள்