உன்னை பற்றி கவிதைகள் சொல்லவா?
என் கண்ணாலன உன்னை நினைத்து
கவிதை எழுத பேனாவை எடுத்தால்
அதில் உள்ள மையில் கலந்து விடுகிறது
உன் நினைவு!! நீ இராமனாக
இருந்தாலும் சரி
இராவணனாக
இருந்தாலும் சரி
பெண்மையை மதித்து நடப்பாய்
இராமனாக இருந்தால்
சீதையை மட்டுமே
நினைத்தவனாய் இருப்பாய் நீ
இராவணனாய்
இருந்தால் ஒரு பெண்ணின்
அனுமதி இன்றி தீண்டமாட்டாய் நீ!!அவ்வாறு விருப்பமின்றி
தீண்டினால் நெருப்பில் மாட்டியவன் போல் பொசுந்து போய் இருக்க கூடும் நீ!!
என்னவனே நீ இராமனாய்
இருந்தாலும் சரி இராவணனாய்
இருந்தாலும் சரி எனக்கு மட்டுமே
உரியவனாய் இருப்பாய்
என நினைத்து உன் நினைவில்
வாழ்ந்திருக்கும் உனக்காகவே
வாழ்ந்து
கொண்டிருக்கும் உன் சீதை நான்!!
-தகுதி அற்ற கவிஞை சுதா