தனிமை மற்றும் சோகம் தமிழ் கவிதைகள்
மனது என்ற ஒன்றில் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு சத்தம் போடும் மௌன மொழிகளின் வெளிப்புற தோற்றமே “சோகம்”.
சொந்தங்கள் உறவு கொள்ள பலர் இருந்தும் இல்லாது போல தோன்றும், வாழ்க்கை என்னும் வட்டப்பாதை வெற்றிடமாக மனது உணரும், அனைத்து விஷயங்களிலும் சுவாரசியம் என்ற ஒன்று இல்லாமல் நடைப்பிணமாக உன்னுள் வேதனைப்படும் மனநோய் தான் இந்த “தனிமை”.
உன்னாலே என்னுள்ளே சுமையான இந்த தீர்க்க முடியாத சோகங்கள் நாள் செல்ல செல்ல இந்த நினைவினில் சுமக்க இயலாத பெரும் பாரங்களாகி விட்டது.
இயன்றவரை போராடி விட்டேன் உன் இதயத்தில் இடம் பிடிக்க… உன் மனம் இளகாத வார்த்தைகளின் விடையால் இனி வரும் காலங்களில் உன் பிரிவு மழையில் நனைய ஆயத்தம் ஆகி விட்டேன் என்றும் முற்றுப்பெறா உன் நினைவுகளின் துணையுடன்…!
யாருக்கும் பிடிக்காமல் இந்த உலகையும் வெறுத்து உன்னையும் வருத்திக்கொண்டு இருப்பதை காட்டிலும் பெரிய கொடுமை இந்த உலகில் எதுவும் இல்லை.
நிஜம் என்ற உலகம் சற்று வித்தியாசமானது தான். இங்கு பொய்யர்களுக்கே வாழ்க்கை உண்மைகள் யாவுமே வேடிக்கை வினோதங்கள் தான்.
தொட்டு விடா தூரத்தில் எங்கேயோ தான் இருக்கிறது நிலவு ஆனால் அது கூட நமக்கு வெளிச்சம் தந்து ஆதரிக்கிறதே..! சில உறவுகள் அருகாமையில் இருந்தாலும் கூட நம் அன்பை துளியளவும் புரிந்து கொள்ளாமல் எளிதாக நிராகரித்து விடுகிறார்களே…!
யாரிடமும் தெரியாமல் கூட அளவு கடந்த பாசம் வைத்து விடாதே இல்லையென்றால் இறுதியில் உனக்கு பரிசாக மிச்சம் மீதியாக மிஞ்சுவது உனது கண்ணீர்த்துளிகள் மட்டுமே.
காதல் வசப்பட கண்கள் காரணமாக இருந்தாலும் கூட தண்டனை என்னவோ இந்த அன்பான இதயத்துக்கு தான்…!
நேற்று என்ற முடிந்து போன என் வாழ்க்கையின் நினைவுகள் அனைத்துமே இன்று என்ற இந்த நிஜங்களில் நிலை மாறாமல் என் மனதை விட்டு நீங்காமல் சதா உன் நியாபகங்களிலேயே ஊறிப்போய் விட்டது.
காதல் சோகம் / பிரிவு கவிதை வரிகள்
அன்று உன் வருகை எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என்று தான் நினைத்து கனவில் மிதந்தேன் இன்று தான் புரிந்தது நான் மிதந்தது கானல் நீரில் என்று..!
மனம் பூவாய் பூக்கும் ஆயிரம் கோடி சந்தோசம் தான் எனக்கு நீ என்னை பார்க்கையிலே. அனைத்தையும் இந்த பிரிவு என்ற ஒன்று முழுமையாய் பறித்து விட்டு போகும் என சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை..!
என்னை நீ விட்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் முதலில் என் மனதில் உள்ள உன்னுடைய நினைவுகளை நீ வெட்டி எறிந்து விட்டு அதன் பிறகு நீ முழுவதுமாய் விலகிக்கொள்…
இருக்கும் இடத்துக்கு தகுந்த மாறி தோற்றத்தை வேன்டுமானால் மாற்றி கொள்ளலாம் எளிதாக.. ஆனால் காயப்பட்ட மனதில் உள்ள எண்ணங்களையும் வலிகளையும் எந்த சூழ்நிலையிலும் மாற்ற இயலாது போக்கவும் வலி தெரியாது..
சோகம் என்ற ஒன்றை உனக்குள் உணராதவரை இங்கு நடக்கும் அனைத்தும் உனக்கு வேடிக்கை வினோதங்கள் தான்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது உன் முன்னால் இருப்பவர்களுக்கு மத்தியில் சிரித்து வாழ்வது அல்ல. நீ தனியாக இருந்தாலும் எதை கண்டும் கவலை கொள்ளாமல் சோகம் இல்லாமல் வாழும் வாழ்க்கையே நிஜமான மகிழ்ச்சி.
அமைதியை தேடி பயணப்படுகிறேன் நெரிசலான இந்த உலகத்திலே நல்லறம் தேடியே…!
வாழ்க்கை தத்துவம் காதல் தோல்வி சோக கவிதை
உலகம் என்ற இந்த விளையாட்டு அரங்கில் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாறி எடுத்து கொண்டாலே வாழ்க்கை இங்கு சுமூகமாகிவிடுகிறது.
உன்னை விட்டு செல்லும் உறவை விட்டு விடு.. நம்மிடம் இல்லாத ஒன்றிற்காக தானே அடுத்தவரை தேடி செல்கிறார்கள் போகட்டும் இன்றோடு.. வாழட்டும் நன்றாக ..
என் மனதில் உள்ள ஆசைகளுக்கு எல்லாம் ஒரே ஒரு நல்ல பதிலை கடவுள் வழங்கி விட்டார் போலும் “உன் எல்லா ஆசைகளும் நிராசையாக போகட்டும் என்று..!”
காலங்களின் தாக்கங்கள் என்றுமே கண்மூடித்தனமானது தான் போலும் அன்போடு பழகிய நெஞ்சங்களை கூட ஒரு சில மணி துளிகளில் பிரித்து விடுகிறது …
அழைக்கலைப்புகள் வாழ்க்கையில் இருக்கலாம் ஆயினும் அழைக்கலைப்புகளும் நிராகரிப்புகளுமே வாழ்க்கையாகி விட கூடாது…
இதர பயனுள்ள பதிவுகள் …
மனம் கவரும் தமிழ் மழை கவிதைகள் | மழை ஹைக்கூ கவிதை(Opens in a new browser tab)
உற்சாகமூட்டும் தன்னம்பிக்கை கவிதை வரிகள் படங்கள்(Opens in a new browser tab)
வாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் தமிழ் கவிதை வரிகள் படங்கள்(Opens in a new browser tab)
சிறந்த தமிழ் அன்பு கவிதைகள் மற்றும் படங்கள்(Opens in a new browser tab)
தமிழ் காதல் தோல்வி கவிதை படங்கள் | சோக வரிகள்(Opens in a new browser tab)