மனவலிமை
வாழ்க்கை என்பது கடல் போன்றது. கடலில் அலைகள் காலம் நேரம் மாறி மாறி எழுகின்றன. அது போல் நம் வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும் அதை எதிர்த்து செல்லும் மன வலிமை எல்லோருக்கும் வேண்டும்.
நம்பிக்கையோடு
எதை ஒன்றை செய்யும் முன் நம்பிக்கையோடு செய். பின்வரும் காலங்களில் அதுவே மிகப்பெரிய வெற்றியை தரும்.
சந்தேகம்
சந்தேகப்படாதே! சங்கடத்தை உருவாக்கும். மனிதனுக்கு ஒரே மாதிரி வாழ்க்கை அமைவது இல்லை. அவரவர் சூழ்நிலைக்கு ஏட்ப நடக்கின்றன. சந்தோசப்படு! மன நிம்மதி தரும்.
ஏழை பணக்காரன்
ஒருவன் பெரிய பணக்காரனாக இருப்பினும் அது நிரந்தரம் அல்ல இதுவும் கடந்து போகும். ஒருவன் ஏழையாக இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் அவன் நிலை உயரலாம் அனைவர்க்கும் மதிப்பு கொடு.
துக்கம்
சுகமாக வாழும் போதே துக்கத்தையும் பழகி கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களே சுகமும் துக்கமும் தான். மனிதனுக்கு இது மாறி மாறி வரும்.