ஒருவரிடம் சொல்லி புரிய வைப்பதில் வருவதில்லை அன்பு. மனதால் உணர்ந்து அதை அடுத்தவர்களுக்கு அறிய வைப்பதில் தான் அடங்கியிருக்கிறது உண்மையான அன்பு.
நீ அனல் வெயிலில் நடந்தாலும் உன்னோடு போகும் பாதைகளில் துணையோடு நிற்கும் நிழல் போலவே சில உறவுகளின் நட்புக்களுக்கு நிழல் போல நீங்காது தொடர வேண்டுமே இந்த அன்பு
நேசிக்கும் மனதில் கூட காயப்படும்போது வலி இருக்கும்.ஆனால் அன்பு கொண்ட இதயத்தில் காயத்திலும் தன்னலம் இல்லாத பாசம் தான் வெளிப்படும்.
நீ என்பதன் பொருளே நான். நான் என்பதன் அர்த்தம் தானே நீ.நம் இருவருக்கும் அர்த்தமுள்ள இலக்கணமாய் திகழ்வது தான் நம் “அன்பு”.
அழகான பெண்ணிடம் திமிர் இருக்குமோ இல்லையோ அன்பான பெண்ணிடம் நல்ல குணம் கட்டாயம் இருக்கும்.
காலங்கள் காலத்தால் கடந்து போகலாம். நினைவுகள் நில்லாமல் சிதைந்து போகலாம். அன்பு கொண்ட நெஞ்சம் ஒரு போதும் மறைந்து போவது இல்லை.
நீ கொஞ்சி பேசும் அன்பு வார்த்தைகளின் ஸ்பரிசத்தால் என் கோபம் கூட நொடிகளில் கரைந்து தான் போகின்றது.
பல காயங்கள் கஷ்டங்கள் வேதனைகள் உயிரை குடிக்கும் வலிகள் என் அனைத்தையும் நான் கண்டாலும் என் இதயம் மட்டும் இன்னமும் உன் அன்பிற்காக காத்து கிடக்கின்றது உன் மாறுதலை ஆவலுடன் எதிர்நோக்கியே …
உலகில் உண்டான ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொதுவான கருணை மொழி தான் இந்த அன்பு….
உன் பலம் எவ்வளவு என்பது உனக்கு பிடித்தமான இதயம் உன் அன்பினை ஏற்காமல் நிராகரிக்கும் போது நிற்சயம் உணர்வாய்.
வாழ்க்கை என்னும் புத்தகத்தை அழகுற செய்ய நான் தீட்டும் வர்ணமே அன்பு.
தவறுகள் பெரும்பாலும் மன்னிக்கப்பட்டு விடும் இடம் அன்பு நிறைந்த நெஞ்சங்களில் மட்டுமே.
உன்னால் ஏற்பட்ட அவமானங்கள் என்னில் ஏராளம் புதைந்து இருந்தாலும் கூட உன் பால் கொண்ட என்னுடைய தூய அன்பின் ஆழத்தினால் புதைந்து கிடக்கும் வேதனைகளின் வேர்கள் கூட அன்பின் கட்டளையினால் அடங்கி கிடக்கிறது.
உலகின் விலை மதிப்பு மிக்க பொக்கிஷம் நீ சேர்த்து வைக்கும் பொன்னோ பொருளோ அல்ல உன் மீது கடைசி வரை பாசம் கொள்ள இருக்கும் முத்தான உறவுகளே …
ஒவ்வொரு முறையும் நீ என் தவறுகளை சுட்டி காட்டும்போது நான் உணர்வது என் தவறுகளை மட்டும் அல்ல. நீ என் மீது வைத்திருக்கும் அதீத அக்கரையில் உள்ள அன்பின் பிரதிபலிப்பையும் தான்.