எந்த ஒரு விலையும் நிர்ணயிக்க முடியாதது காதல்… விலைக்கே வாங்க முடியாதது அன்பு…
நீ ஒருவரை மனம் நோக செய்யும் வலியை உன்னை ஒருவர் மனதளவில் காயப்படுத்தும் போது தான் புரிந்து கொள்ள முடியும்.
வாழ்க்கை மிகவும் அழகாகிறது நீ விரும்பும் ஒருவரின் இதயத்தில் இடம் பிடிக்கும் போது.
“பொய்யான மனிதர்களுக்காக உன்னுடனே இருக்கும் உண்மையான என்னை அழ வைத்து பார்க்காதே”- இப்படிக்கு கண்கள்.
புரிதல் மட்டும் இல்லையென்றால் உறவில் விரிசல் என்பது தானாகவே அமைந்து விடுகிறது.
உன்னுடைய பலம் எவ்வளவு என்பது நீ நேசித்த ஜீவனை இழக்கும்போது உணர்வாய்.
“கவலைகளை இடம் தெரியாமல் மறைத்து வைப்பேன் துக்கங்களையும் தூள் தூளாக்குவேன் நீ என்னை நாடினால்”- இப்படிக்கு உன் புன்னகை.
வாழ்க்கையை நீ இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டாலும் கூட என்றுமே உன்னுடைய நம்பிக்கையாக நிற்கும் தன்னம்பிக்கையை மறந்து விடாதே.
புது விடியல் உதிப்பது புதிய நாட்களுக்கு மட்டும் அல்ல உன் வாழ்க்கையின் மாற்றங்களுக்கும் தான்.
வானம் என்ற ஒன்றிற்கு இல்லாத எல்லை போலவே உன் முயட்சிகளுக்கும்.
வெற்றி பெறும் வரை உன் போராட்டத்திற்கு விடுமுறை ஒன்றை அளித்து விடாதே. மனோபலத்துடன் முன்னோக்கி செல்…
கண்ணீர் என்றுமே விலை மதிப்பு மிக்கது அதில் தவறான நெஞ்சுக்குக்கு இடம் அளித்து உன் பலத்தை குறைத்து விடாதே.
நீ நேசிக்கும் ஒருவரின் மனதை தேடுவதை விட உன்னை நேசிக்கும் இதயத்தை மனமார ஏற்று கொள்.
புத்தகத்தின் வாயிலாக கற்கும் பாடத்தை விட அனுபவத்தினால் கற்று கொண்ட பாடம் என்றுமே நன்மையை தரும்.
நீ எனக்காக கண்ணீர் சிந்துவாயோ…? இல்லையோ…? நான் உனக்காக உயிரையே தந்திடுவேன்…
ஒருவரை வீழ்த்த வியூகம் வகுக்கலாம் ஆனால் வில்லங்கம் வளர்க்க கூடாது …
வாழ்க்கையில் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் ஆறுதல் சொல்ல ஒரு உண்மையான உறவு அமையும் போது கஷ்டம் கூட இஷ்டம் ஆகி விடுகிறது.
“நான் நினைப்பது எதுவும் நடப்பது இல்லையே” என்று எண்ணாதே… “நான் நினைத்ததை நடத்தி காட்டுவேன்” என்று எண்ணி பார் நீ வென்று விடுவாய் உனக்கான சவாலில் …
நீ நல்லவன் என்று நிரூபிக்க ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் ஒரு சிறு குறை உன்னிடம் இருந்தால் கூட இந்த உலகம் உன்னை கெட்டவன் என்று தீர்மானித்து விடும்.
அன்பு என்பது தாய் போன்றது நீ விலகி போனாலும் கூட உன்னை வெறுக்க தெரியாது அதற்கு.
கடந்து போன நாட்களில் நீ செய்த தவறுகளை நினைத்து ஏங்குவதை விட வர போகும் உன் எதிர்கால நாட்களுக்காக அதை நீ சரி செய்து கொள்ளலாம்.
உனக்கான இடத்தை யாரும் பிடிப்பது இல்லை நீ தான் தவற விடுகிறாய்.
பிடித்து விட்டால் மறக்க தெரியாமல் குழந்தை போல அடம் பிடித்து நிற்பது தான் மனதின் குணம்.
காலையில் சூரியன் உதிக்காவிடில் பகல் என்பது இல்லை. அது போலவே நீ வாழ்க்கையில் ஜொலிக்காவிடில் வெற்றி என்பது உனக்கு கிடைப்பது இல்லை.
பழகியவர்கள் விட்டு பிரியும்போது அவர்கள் கொடுக்கும் வலியை விடவா இந்த மரணம் இருக்க போகிறது?
நான் மறைந்த பிறகு அவள் வந்தால் கூட என் கல்லறையை மட்டும் காட்டி விடாதீர்கள் அங்கும் என் நிம்மதியை குலைத்து விடுவாள் என்னவள்.
நீ நேசிக்கும் உறவு அமைவது உனது “அதிஷ்டம்” உன்னை நேசிக்கும் உறவு உனக்கு வரமாக கிடைப்பது “பேரதிஸ்டம்”.
ஒருவர் வாழும் போது செய்த நல்ல செயல்கள் அனைத்தும் அவர் இறக்கும்போது வைக்கும் ஒப்பாரியில் தான் என்னமோ வெளி வருகிறது.
கஷ்டம் வந்தால் கண்டுகொள்ளாத நண்பனும் பணம் இருந்தால் பாசம் பொழியும் உறவும்… இருந்தால் ஒன்று தான்… இல்லாமல் போனாலும் ஒன்று தான்….
ஒரு முறை பார்த்தால் கூட உன்னால் ஊறி போன உன் நினைவுகள் என்னை பல முறை கலங்கடிக்கிறது.