சோகம் நிறைந்த தமிழ் கண்ணீர் கவிதைகள்
அவனை பார்த்து பேச முடியாத தருணங்களில் நான் அனுபவிக்கும் வேதனைகளை என் விழியோரம் உண்டாகும் கண்ணீர்த்துளிகள் சொல்லும்.
சில சமயம் மனதின் எண்ணங்கள் வாய்மொழிகளில் தென்படுவது கிடையாது. கண்களில் வழியும் சிறு கண்ணீர்துளிகளால் அவைகள் வெளிப்பட்டு விடும்.
நான் அழுவதை பற்றி கவலை கொள்வது இல்லை… எங்கு நான் அழுது உன் மீது கொண்ட ஞாபகங்களுக்கும் அதில் கரைந்து விடுமோ என்ற அச்சம் தான் எனக்கு…!
இரவுகள் நீள நீள என் நெஞ்சில் நிறைந்த கடல் போன்ற அளவில்லாத உனது நினைவுகளும் என்னை விட்டு நீங்காது என் மனதில் நீந்தி கொண்டு தத்தளிக்கிறது.
வானம் அளவுக்கு என் அன்பு உன் மீது என்றால் கடல் அளவுக்கு உன் மீது நான் கொண்ட பாசம் தெரியும் என் கண்ணீரில்.
இரு மனங்கள் எழுதும் பரிட்சையில் ஜெயித்தால் வருவது “ஆனந்த கண்ணீர்”. தோற்றால் பெறுவது என்றுமே முற்று பெறாத வலிகள் நிறைந்த காதல்கண்ணீர்.
நினைவுகள் எப்போதுமே சிரித்த நேரங்களை நினைவில் வைத்து கொள்வதை விட அழுத நாட்களை மனதில் வைத்து கொள்கிறது.
கண்களின் எழுதப்படாத வலி நிறைந்த விலை மதிக்க முடியாத கவிதை தான் “கண்ணீர்த்துளிகள்”.
உன்னை பார்த்து சிரிக்கும் உள்ளம் உன்னை நேசிக்குமோ இல்லையோ உனக்காகவே கண்ணீர் சிந்தும் நெஞ்சம் என்றுமே உன் அன்பை மட்டுமே சுவாசிக்கும்.
கண்ணீர்த்துளி கவிதை | காதல் வலி சோகம் கவிதை வரிகள்
தினம் தினம் உன் பிரிவினால் தவிக்கும் எனக்கு உன் ஞாபக அலைகள் நித்தமும் கண்ணீர்துளிகளில் தீண்டி அனலாய் சுடுகின்றதடி.
வாழ்க்கை வாழ்வதற்கு இருக்கும் வழிகளை விட சில பேரின் செயல்களால் நாம் அனுபவிக்கும் நீங்காத வலிகளே இங்கு அதிகம்.
என்னை ஏமாற்றிய உன்னிடம் எனக்கு துளியும் வெறுப்பு இல்லை. மாறாக உன் பொய்யான பாசத்தை கூட என் உண்மையான நேசத்தினால் அறிய முடியவில்லையே என்று என் விதியை நினைத்தே நான் அழுகிறேன்.
பல சொந்தங்கள் உண்டு உண்மையான பந்தங்கள் இல்லை. போலியான பாசங்கள் உண்டு உண்மையான நேசங்கள் இல்லை. நிஜங்களில் நீ என் அருகில் இல்லை ஆனால் என் வாழ்கைப்புத்தகத்தில் தீராத கண்ணீர்துளிகளாய் கறை படிந்த ஆடை போலவே என்றுமே அழியாது நிறைந்து நிற்கிறாய்…!
ஒரு பெண் அழுவது ஒரு ஆண் மகன் மீது கொண்ட மறக்க முடியாத காதலால். அதே ஒரு ஆண் அழுகிறான் என்றால் அது பெண் மீது கொண்ட மறக்கடிக்கப்பட்ட காதலினால்.
பலரிடம் சிரித்து பேசும் என் உதடுகள் என்றுமே நான் கண்களில் அனுபவிக்கும் துக்கங்கள் கவலைகளை காட்டி கொடுப்பது இல்லை.
இதர பயனுள்ள பதிவுகளை பார்க்கவும்:-
காதல் உணர்வு தமிழ் கவிதை வரிகள்| Tamil Love Feeling Images
சிறந்த 31 தமிழ் பீலிங் கவிதைகள் (Tamil Feeling Kavithaigal)
வாழ்க்கையில் தன்னம்பிக்கை வளர்க்கும் தமிழ் கவிதை வரிகள் படங்கள்
தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள்
காதல் தோல்வி கவிதை படங்கள் | Love Failure Images