காதல் தோல்வி தமிழ் கவிதைகள்
பெண்ணே நீ என்னை விளையாட்டு பொம்மை போல நினைத்து காதல் என்ற ஒன்றை வைத்து என் வாழ்க்கையையே வெறுப்பாகி விட்டாயே…
என் விருப்பம் உன் உடல் தான் என்றால் உன்னால் எனக்கு ஏற்பட்ட காதல் தோல்வியின் வலி அப்போதே மாறியிருக்கும்.. ஆனால் நான் நேசித்ததோ உன் மனதை அல்லவா?
அதனால் தான் என்னவோ பல மாற்றங்கள் என் வாழ்க்கையில் நிகழ்ந்தாலும் கூட காதல் என்ற ஒன்றின் உணர்வால் எனக்குள் நீ மாறாது கலந்து நிற்கிறாய்…
காயப்பட்டது உடல் என்றால் மருந்திட்டு ஆற்றி விடலாமே… இதயம் காயப்பட்டதை எதை செய்து மீள செய்வது?
கஷ்டத்தை தாங்கும் வலி எனக்கு உண்டு. இருந்தும் இந்த காதலின் அவஸ்தையை அந்த கஷ்டத்தையும் தாண்டி சொல்ல முடியாத நரக வேதனையை தருகிறது…
உனக்காக காத்து கிடந்த என்னிடம் பேசாமல் நீ தடுமாறுவது உன் மனதை இடம் மாற்றுவதற்காகத்தான் என்று இன்று தான் நான் புரிந்து கொண்டேன்…
உன் நினைவுகளை அழித்தாலும் என் தீராத கனவுகளில் பவனி வரும் உன்னை மறக்க என் செய்வேன் நான்?
உன்னால் எனக்குள் உண்டான கேள்விகள் மட்டும் ஏராளம் பதில்கள் தான் விடை தெரியாத கவலைகளுடன் ஐக்கியமாகிவிட்டது…
பிரிவது தான் உன் விருப்பம் என நினைத்தால் அதை செய்து கொள்… இனி வரும் எனது வாழ்க்கையின் காலங்கள் என் கண்ணீர்துளிகளாலும் உனது பற்பல நினைவுகளாலும் நிரப்பப்படட்டும்….
என்னே விந்தை! காதல் மட்டும் உணர இரு இதயம் வேண்டுமாம் … காதலை விட்டு விலக ஒரு இதயம் போதுமாம்…
காதல் சோகம் கவிதை வரிகள் மற்றும் படங்கள்
அவளை குறையே இல்லாமல் பார்த்து கொண்ட என்னிடம் என்னவள் என்ன குறை கண்டாலோ என்று தெரியவில்லை… அவள் மீது நான் வைத்திருக்கும் பாசம் என்ற வேள்வியையே பிரிவு என்ற சொல்லினால் பஸ்பமாக்கி விட்டாலே…
எப்படி பேசிய வார்த்தைகளை மறந்து, மனதின் எண்ணங்களை இழந்து, பழகிய நாட்களை தொலைத்து, உருகிய உறவை உதறி தள்ள சில பேர்களால் முடிகிறதோ?
என்னதான் இரு மனங்களின் பிரிவினால் பார்வைகள் இடம் பெயர்ந்தாலும் பாதங்கள் தடம் மாறினாலும் ஒன்றாய் இருந்த நியாபகங்களை மட்டும் அழிக்க முடிவது இல்லையே
உயிரினும் மேலாக ஒருவரை நம்பி அவரின் மாற்றங்களினால் மாறும் நிலைக்கு தள்ளப்படும் இதயத்தின் வலிகள் என்றுமே தீராத மௌன ராகங்கள்…
சேர்ந்து வாழத்தானே உன்னிடம் மீண்டும் மீண்டும் யாசிக்கிறேன் அது புரிந்தும் மௌனத்தை மொழியாக வைத்து தீராத சோகத்தை தந்து எதிர்கால வாழ்க்கைக்கு முற்றுப்பெறாதொரு முற்று புள்ளி வைத்து விட்டாயே…
மருந்தே இல்லாமல், நினைவினாலே கொல்லும், தனிமையை தேடும், உலகையே வெறுக்கும்படி என் காதலி எனக்கு பரிசாக அளித்த உயிர் கொல்லி நோய் தான் இந்த “காதல் தோல்வி”…
மறந்து விடு என்னும் சொல்லை நீ சொல்லும்போதே உன் மீது நான் கொண்ட அன்பையும் என் நேசமிகு தூய காதலையும் களங்கப்படுத்தி விட்டாயே என் அன்பு காதலா….!
மேலும் இதர பயனுள்ள பதிவுகள் 🙂
தமிழ் மழை கவிதைகள் | இயற்கை கவிதைகள்
வெற்றிக்கான சிறந்த நம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை கவிதைகள்
தமிழ் எஸ் எம் எஸ் வரிகள் | Tamil SMS Lines
இனிய காதல் தோல்வி | காதல் பிரிவு கவிதை வரிகள்
தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள்
தனிமை கவிதைகள் | பிரிவு சோகம் காதல் வலி வரிகள்
சிறந்த அம்மா பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் | அன்னை தாய் வாழ்த்து