தமிழ் தத்துவம் வரிகள் | முயற்சி மனது கவிதை வரிகள்
இழந்த பின்னும் வாழ வேண்டுமா ?முயற்சிகளை கைவிடாதே …! இறந்த பின்னும் வாழ வேண்டுமா ? சாதனைகளை செய்ய அஞ்சாதே …!
நேர்மையாக இங்கு வாழ்ந்தால் அஞ்சுபவன் என்றுதான் இந்த முட்டாள் உலகம் சொல்லும். உண்மையாக இருந்தால் ஏமாற்றத்தான் இந்த உலகம் பார்க்கும்.
அழுது கொண்டே பிறக்கிறோம். பிறரை அழ வைத்து கடைசியில் இறக்கிறோம். எனவே உடலில் உயிர் இருக்கும் வரையாவது சிரித்து கொண்டிருப்போம் அனைவரையும் சிரிக்க வைப்போம்.
எதுவுமே இங்கு உனதல்ல இது புரியும் தருணம் நீ உணர்வாய் ஒரு நிஜமான மனநிறைவான உண்மையை…! அமைதிக்கான வழியும் உனக்கு அன்றுதான் கிடைக்கும்…!
நீ எடுக்கும் முயற்சியில் தான் முளைக்கும் உன் விடியல். எதற்காகவும் அடுத்தவரை சார்ந்திருக்காதே. இதுவே உன்னை அடுத்தகட்ட வாழ்க்கைக்கு எடுத்து செல்ல வல்லது.
உன் சிந்தையால் எந்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும். நீ நிதானமாய் யோசிப்பதால் மட்டுமே தீர்வு காண இயலும்.
மன உறுத்தல்கள் என்றுமே ஒரு கொடிய விஷம். உன் தன்னம்பிக்கையை கெடுக்கும் கூர்மையான ஆயுதம்.
கனவுகளில் வாழ்க்கையை தேடலாம். ஆனால் தேடல்கள் என்றுமே கனவுகளாக மாறி விடக்கூடாது. நிஜங்களில் கற்பனை பொய்கள் வேரூன்றக்கூடாது…!
இரக்க குணமும் தயாள மனமும் கொண்டு ஒருவருக்கு உதவ முன்வரும் அனைவரும் திக்கற்ற உயிர்களுக்கு உதவும் கடவுள் போலவே…!
தினமும் பந்தயம் இந்த பகலுக்கும் இரவுக்கும். இறுதியில் வெல்வது இந்த இரண்டும் தானே…! அதுபோலவே இங்கு மனிதர்கள் உண்டு. யாரும் வென்று கொண்டே இருக்கப் போவது இல்லை ..தோல்விகளால் வீழப்போவதும் இல்லை.
நீ எடுக்கும் முடிவு பிறரை பாதிக்குமெனில் உன் ஒருவனுக்காக முடிவு எடுப்பதைவிட அடுத்தவரின் சந்தோசத்தை மனதில் வைத்து உன் முடிவை மாற்றி அடுத்தவரின் திருப்தியில் உனது திருப்தியை காணலாம்.
மனித சாதியின் வேடிக்கை என்னவெனில் தான் உயிரோடு இல்லை என்றால் எதுவுமே இங்கு சொந்தம் இல்லை என அறிந்தும் பேராசை கொண்டு அனைத்தையும் சொந்தமாக்க இங்கு அலைகிறான்.
அன்பு தமிழ் தத்துவம் வரிகள் படங்கள்
பிரிவின் கொடுமையை பிரிந்தால் தான் உணர முடியும். அன்பின் ஆழத்தை இரு மனங்கள் இணைந்தால் தான் நிலை நாட்ட இயலும்…
அன்பை நிரூபிக்க ஆயிரம் வழிமுறைகள் சொல்லப்பட்டாலும் காயப்பட்ட மனது என்ன எதிர்பார்க்கும் என்பது எப்போதும் ஒரு புரியாத புதிரே…!
நம்பிக்கை வைத்தால் காத்திரு. அன்பு இருந்தால் காதல் செய். வலி தாங்கும் இதயம் இருந்தால் வாழ்ந்து காட்டு.
நிலையானகுணம், தூய்மையானஅன்பு, மகிழ்ச்சிகரமான மனம் எவனிடம் உள்ளதோ அவனே இங்கு கொடுத்து வைத்தவன்.
ஒருவர் உன் உணர்வுகளை மதிக்காமல் உன்னை அவமானப்படுத்தும் போதே அவர் மனதில் உன்மீது உள்ள அன்பு கொல்லப்பட்டு விடுகின்றது. அதன் பிறகு நீ கெஞ்சுவதும் கேலிக்கூத்தாகதான் அவர்களுக்கு தெரியும். உன் அருமை அவர்களுக்கு புரிய போவது இல்லை உன் நிலைமை அங்கு மாறப்போவதும் இல்லை.
இரும்பு மனம் கொண்ட ஒருவரை கூட அன்பு என்னும் துளை கொண்டு உருக வைக்கலாம்.
அன்பு தான் மிகவும் விலை உயர்ந்தது. மகத்துவம் வாய்ந்தது. வெறுமனே சேர்த்து வைக்கும் பொன்னோ பொருளிலோ அதை காண முடியாது.
உன்னை விரும்பும் அனைத்து உறவுகளையும் மெய்யாக நேசி. சிறு சிறு முத்துக்களை கோர்த்தால் தானே மாலை உருவாகும். அது போலவே நேசம் கொண்ட உறவுகளை நீ சேர்த்து கொண்டே இரு. அன்பு என்ற வாழ்க்கையின் விலை மதிப்பு உயர்ந்து கொண்டே போகட்டும் உன் வாழ்வில் பொன்னான ஒளி வீசட்டும்.
வாழ்க்கை தத்துவம் | மாற்றம் கவிதை வரிகள் தமிழ்
ஆசைகள் ஒன்றே மனிதனின் குணத்தை மாற்றும் வல்லமை பெற்றது. அதை அடக்கும் மனவலிமை உள்ளவனே நிஜமான பலசாலி ஞானயோகி…! வாழ்க்கை என்னும் பரீட்சையில் ஜெயித்தவன் ஆகிறான்.
மாறுதல் என்பது காலத்தின் கட்டாயம். அகிலத்தின் போக்கு. காலதேவனின் வரையறை. மாறுதலை உடைக்க நினைக்காதே. ஒன்றை உடைத்தால் மற்றொன்று புதிதாய் முளைக்கும். மாற்றங்களோடு வாழ பழகிக்கொள். இது போன்ற மாறுதல் உள்ள உலகின் பிழைக்க தெரிந்த உபாயம் இதுவே.
காற்றை விட வேகமாக நொடிக்கு பல முறை தன் முடிவை மாற்றிக் கொண்டு சுயநலம் என்பதை முதன்மையாக்கி தன்னலம் ஒன்றிக்கே தீர்வு காணும் கொடிய மிருகமே மனிதனின் மனமாற்றம்.
ஒழுக்கம் என்பது நீ வகுக்கும் முறைகளில் காணப்படுவது அல்ல. நீ செய்யும் செயல்முறைகளில் அடங்கியிருக்கிறது உண்மையான உனது ஒழுக்கம்.
சில சமயம் புன்னகை கூட பாசாங்காக இருக்கலாம். வாய் மொழிகளில் உண்மைத்தன்மை மறையலாம் ஆனால் கண்களின் மொழிகள் என்றுமே பொய் என்பதை உரைக்காது.
எதை செய்யும் போதும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தால் நிற்சயம் தெளிவு கிட்டும் நன்மை பயக்கும் உண்மை நிலை புரியும்.
சங்கடங்கள் மற்றும் சந்தோசங்கள் இரண்டு பேருமே உங்கள் வாழ்க்கையின் விருந்தினர்கள். ஒருநாள் வரலாம் மறுநாள் போகலாம். நிரந்தரம் என்பது நிச்சயமில்லை எனவே இரண்டையும் சமமாக எடுத்து கொண்டால் வாழ்க்கை என்னும் தராசு முறையாக சீர்பட்டு விடும்.
உனது கருத்துக்களுக்கு சுதந்திரம் இல்லாத இடத்தில் நீ இருப்பது என்பது நீயாகவே வழியப்போய் உன்னை அவர்களிடம் அடிமைப்படுத்திக் கொள்வதற்கு சமமானது…!
உனக்கு இன்று மிகவும் பிடித்தது கூட நாளை பிடிக்காமல் போகலாம். கிடைக்காது என்று நினைப்பது கூட நாளை உனக்கான தேடலில் அகப்படலாம். ஆகவே எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை என்பது தான் நாம் புரிந்து கொள்ளக்கூடிய சூட்சமம்.
வாழ்க்கையின் புதிருக்கு விடை உன்னை இயற்கை இந்த உலகில் படைத்தது எதற்காக என அறிவதில் தான் அடங்கியிருக்கிறது.
வாய்ப்புகள் தேடி வரும்போது அதை பிரகாசப்படுத்திக்கொள். இந்தவெளிச்சத்தைவைத்து தான் உனது வாழ்க்கை என்னும் இருண்ட இரவுகளை வெளிச்சமாக்க முடியும்.
மேலும் சுவைக்க …
தித்திக்கும் தமிழ் உண்மை காதல் கவிதைகள்(Opens in a new browser tab)
சிறந்த தமிழ் அன்பு கவிதைகள் மற்றும் படங்கள்(Opens in a new browser tab)
வாழ்க்கை சிந்தனை துளிகள் பொன்மொழிகள் கவிதைகள் படங்கள்(Opens in a new browser tab)