தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள்

தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள்

அழகு நிலா கவிதை வரிகள்

சிந்திக்க தெரியாத நிமிடங்கள், வாழ்க்கையின் மீளா துயரங்கள், அனைத்து வகையிலும் ஏற்படும் ஏமாற்றங்கள் என கவலைகள் அனைத்தும் கண்விழிக்கும் அந்த நடு இரவுகளில் நானும் நிலவும் சேர்ந்தே தேய்கிறோம்

சிந்திக்க தெரியாத நிமிடங்கள், வாழ்க்கையின் மீளா துயரங்கள், அனைத்து வகையிலும் ஏற்படும் ஏமாற்றங்கள் என கவலைகள் அனைத்தும் கண்விழிக்கும் அந்த நடு இரவுகளில் நானும் நிலவும் சேர்ந்தே தேய்கிறோம்.

வெளிர் நிற ஆடைகளில் அழகாய் வருகை தந்து மின்னொளியில் என் கண்களை மயக்கி அவள் தேகத்தால் என்னை குளிர வைத்து அனுதினமும் என்னை காண மாலை மங்கும் நேரத்தில் அவளின் சுடர்விழியால் என்னை தீண்டி அணைத்து கொள்வாள் என் நிலவு மங்கை

வெளிர் நிற ஆடைகளில் அழகாய் வருகை தந்து மின்னொளியில் என் கண்களை மயக்கி அவள் தேகத்தால் என்னை குளிர வைத்து அனுதினமும் என்னை காண மாலை மங்கும் நேரத்தில் அவளின் சுடர்விழியால் என்னை தீண்டி அணைத்து கொள்வாள் என் நிலவு மங்கை..

என்னே விந்தை இருட்டான காட்டுக்குள்ளே ஒரு குளிர் தேவதை... பேரழகு பொருந்திய மங்கையிவளின் பெயர் தான் நிலவோ?

என்னே விந்தை இருட்டான காட்டுக்குள்ளே ஒரு குளிர் தேவதை… பேரழகு பொருந்திய மங்கையிவளின் பெயர் தான் நிலவோ?

ஊர் உறங்கும் ஜாமத்தில் வானத்தின் கதவுகள் மூடி இருள் சூழ்ந்த சமயத்தில் யாருக்காக காத்திருக்கிறாளோ இந்த அழகு ராணி வெளிர் நிற உடையுடன்?

ஊர் உறங்கும் ஜாமத்தில் வானத்தின் கதவுகள் மூடி இருள் சூழ்ந்த சமயத்தில் யாருக்காக காத்திருக்கிறாளோ இந்த அழகு ராணி வெளிர் நிற உடையுடன்?

அழகு என்பதன் அர்த்தம் தான் நிலவோ? இல்லை நிலவு என்பது தான் மருகி அழகு என்ற பொருள் ஆனதோ?

அழகு என்பதன் அர்த்தம் தான் நிலவோ? இல்லை நிலவு என்பது தான் மருகி அழகு என்ற பொருள் ஆனதோ?

இரவு  நிலவு பற்றிய கவிதைகள்

நிலவின் வளர்பிறை தேய்பிறை போலவே நம் வாழ்க்கையின் மாற்றங்களும் கஷ்டங்களும்.... எதுவும் மாறும் என்ற நல்ல எண்ணத்துடன் எதிர்நீச்சல் போடுவோம்

நிலவின் வளர்பிறை தேய்பிறை போலவே நம் வாழ்க்கையின் மாற்றங்களும் கஷ்டங்களும்…. எதுவும் மாறும் என்ற நல்ல எண்ணத்துடன் எதிர்நீச்சல் போடுவோம்…

நட்ட நடு ஜாமத்தில் அந்த தனிமை கூட இனிமை சேர்க்கிறது நானும் என் நிலாவே நீயும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது

நட்ட நடு ஜாமத்தில் அந்த தனிமை கூட இனிமை சேர்க்கிறது நானும் என் நிலாவே நீயும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது.

கேள்விகள் பல இருந்தாலும் இன்னும் விடை நிரப்பப்படாமல் வெற்று வெள்ளை காகிதம் போல அந்தரத்தில் ஏனோ தினமும் தொங்கிக்கொண்டிருக்கிறதே இந்த வெள்ளி நிலவு...!

கேள்விகள் பல இருந்தாலும் இன்னும் விடை நிரப்பப்படாமல் வெற்று வெள்ளை காகிதம் போல அந்தரத்தில் ஏனோ தினமும் தொங்கிக்கொண்டிருக்கிறதே இந்த வெள்ளி நிலவு…!

புதுப்பெண் போல தினமும் அலங்கரித்து கொண்டு வருகிறாள் …பேசாமடந்தை போல வாய்மொழி அற்று நிற்கிறாள்… பிறை தேடும் பனித்துளி போல கால் நோக காத்திருக்கிறாள் …இறுதியில் ஏமாற்றம் அடைந்து விடை தெரியா இரவுகளுடன் பொழுதை போக்கி தினமும் தன் மேனியை தானே மாய்த்து கொல்கிறதே இந்த அழகிய நிலவு. …

புதுப்பெண் போல தினமும் அலங்கரித்து கொண்டு வருகிறாள் …பேசாமடந்தை போல வாய்மொழி அற்று நிற்கிறாள்… பிறை தேடும் பனித்துளி போல கால் நோக காத்திருக்கிறாள் …இறுதியில் ஏமாற்றம் அடைந்து விடை தெரியா இரவுகளுடன் பொழுதை போக்கி தினமும் தன் மேனியை தானே மாய்த்து கொல்கிறதே இந்த அழகிய நிலவு. …

இரவில் அரண்மனையை கட்டி காக்கும் காவலனுக்கு ஒரு நாள் விடுமுறையாம் "அம்மாவாசை"... ஒரு நாள் முழுகாவலாம் "பௌர்ணமி"...

இரவில் அரண்மனையை கட்டி காக்கும் காவலனுக்கு ஒரு நாள் விடுமுறையாம் “அம்மாவாசை”… ஒரு நாள் முழுகாவலாம் “பௌர்ணமி”…

நிலவும் பெண்ணும் தமிழ் கவிதை

துணையின்றி நிற்கதியாய் நடு வானில் விட்டு சென்ற காதலனுக்காக நிலா என்னும் மங்கையானவள் தினமும் அவன் வருவான் என எந்த நம்பிக்கையில் காத்திருக்கிறாளோ எனக்கு புரியவில்லையே?

துணையின்றி நிற்கதியாய் நடு வானில் விட்டு சென்ற காதலனுக்காக நிலா என்னும் மங்கையானவள் தினமும் அவன் வருவான் என எந்த நம்பிக்கையில் காத்திருக்கிறாளோ எனக்கு புரியவில்லையே?

பல இரவுகள் கண்ணனை நினைத்து தேய்கிறாள்... சில நினைவுகளை தன்னுள் சுமந்தவாறே மீண்டும் வளர்கிறாள்... ஒளிந்து கொண்ட மாயக்கண்ணனை தேடி தனது ஒளியையே இழக்கிறாள்... மீண்டும் துளிர் விட்ட ஆசைகளுடன் ஆவலாய் முழு நிலவாய் கிருஷ்ணனின் ராதையாய் இவனுடன் அவள் இணைகிறாளே.. ஆஹா!!! காதலி என்றால் இந்த நிலவு போல அல்லவா இருக்க வேண்டும்?

பல இரவுகள் கண்ணனை நினைத்து தேய்கிறாள்… சில நினைவுகளை தன்னுள் சுமந்தவாறே மீண்டும் வளர்கிறாள்… ஒளிந்து கொண்ட மாயக்கண்ணனை தேடி தனது ஒளியையே இழக்கிறாள்… மீண்டும் துளிர் விட்ட ஆசைகளுடன் ஆவலாய் முழு நிலவாய் கிருஷ்ணனின் ராதையாய் இவனுடன் அவள் இணைகிறாளே.. ஆஹா!!! காதலி என்றால் இந்த நிலவு போல அல்லவா இருக்க வேண்டும்?

நிலவே உன்னால் விவரம் அறியா வயதில் அன்று என் நண்பனுக்கும் எனக்கும் ஒரே சண்டை "டேய் நீ போனதுக்கப்பறம் சத்தியமா நிலா என்கூட தா வந்துச்சு, இல்ல நா நம்பமாட்டேன் என்கூட தா நிலா இங்கேயே தா நின்னுச்சு"...

நிலவே உன்னால் விவரம் அறியா வயதில் அன்று என் நண்பனுக்கும் எனக்கும் ஒரே சண்டை “டேய் நீ போனதுக்கப்பறம் சத்தியமா நிலா என்கூட தா வந்துச்சு, இல்ல நா நம்பமாட்டேன் என்கூட தா நிலா இங்கேயே தா நின்னுச்சு”…

நீ இல்லாத நேரங்களில் இன்னும் எத்தனை நட்சத்திர கூட்டங்கள் அணி வகுத்தாலும் என் காதல் மனது என்பது இந்த ஒரு நிலாவுக்கு மட்டும் தான்...

நீ இல்லாத நேரங்களில் இன்னும் எத்தனை நட்சத்திர கூட்டங்கள் அணி வகுத்தாலும் என் காதல் மனது என்பது இந்த ஒரு நிலாவுக்கு மட்டும் தான்…

பல சிந்தனைகள் குழப்பங்கள் மனதில் சூழ்ந்து என் தூக்கத்தை கெடுத்தாலும் வெட்ட வெளியில் இருக்கும் நிலவை பார்த்த மாத்திரத்தில் என் மனது தூய்மைப்பட்டு நிலா மகளின் தாலாட்டில் லகித்து நிம்மதியான ஒரு இரவு பொழுதை தேடிய என் தேடல் இனிதே நிறைவு பெறுகிறது…

பல சிந்தனைகள் குழப்பங்கள் மனதில் சூழ்ந்து என் தூக்கத்தை கெடுத்தாலும் வெட்ட வெளியில் இருக்கும் நிலவை பார்த்த மாத்திரத்தில் என் மனது தூய்மைப்பட்டு நிலா மகளின் தாலாட்டில் லகித்து நிம்மதியான ஒரு இரவு பொழுதை தேடிய என் தேடல் இனிதே நிறைவு பெறுகிறது…

சுட்டெரிக்கும் சூரியனின் கோபக்கனல்களையும் மறைத்து இருள் சூழ்ந்த இரவுகளில் வெள்ளோவியமாய் தோன்றி சுடர் விடும் கண்களால் மனம் குளிர செய்யும் தூய சொரூபிணி தான் நிலவு

சுட்டெரிக்கும் சூரியனின் கோபக்கனல்களையும் மறைத்து இருள் சூழ்ந்த இரவுகளில் வெள்ளோவியமாய் தோன்றி சுடர் விடும் கண்களால் மனம் குளிர செய்யும் தூய சொரூபிணி தான் நிலவு.

இதர பயனுள்ள பதிவுகள் 🙂

காதல் தோல்வி கவிதைகள் (காதல் பிரிவு)

நெகிழி பைகள் (பிளாஸ்டிக்) – தோழர் க.செல்வராசு

இயற்கை அழகு – தோழி முத்துநாகு

பூக்களும் என்னவளும்

என் முத்தான 10 பெண் கவிதைகள்

வெற்றிக்கான சிறந்த நம்பிக்கையூட்டும் தன்னம்பிக்கை கவிதைகள்

சிறந்த காதலி பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிதை

உயிர் நட்பு தோழி தோழன் நண்பர்கள் கவிதைகள்-Friendship Kavithaigal

காதல் தோல்வி கவிதை படங்கள் | Love Failure Images

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதைகள் படங்கள்

ஹைக்கூ நிலா கவிதைகள்

தமிழ் மழை கவிதைகள் | இயற்கை கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.