இனிய தமிழ் புத்தம் புது கவிதைகள் | வலிமை கவிதைகள்
என்னை பார்த்து கேலி செய்பவர்களால் என்னை போன்று வலியை தாங்கும் சக்தி இருக்காது. அதனால் தான் அவர்கள் என்னை பார்த்து கடைசி வரை கேலி மட்டுமே செய்ய முடியும்… என் வலியை ஒரு நாள் சுமக்க சொன்னால் அவர்கள் அதை தாங்க முடியாமல் இறந்து விடுவார்கள் இதுவே என் வலிமை…!
சில மனிதர்களின் வாழ்க்கை காகிதத்தில் கிறுக்கப்பட்ட ஓவியம் போல உள்ளது… ஏனென்றால் … அதை சரி செய்து ஒரு முழுமையான ஓவியமாக்க யாரும் முயல்வது இல்லை … வேடிக்கை பார்க்க மட்டுமே விரும்புகிறார்கள்…
தாயின் அன்பு தவழும் வரை …
தந்தை அன்பு தலை நிமிரும் வரை …
தம்பியின் அன்பு தப்பு உள்ளவரை …
அண்ணனின் அன்பு அவசியம் உள்ளவரை…
கவிதையின் அன்பு ஆர்வம் உள்ளவரை…
காதலின் அன்பு காலம் உள்ள வரை…
என் கைகளால் கோர்த்த பூக்களை உன் கைகளில் கொடுத்து என் தலை சூட விரும்பும் ஒரு பேராசைக்காரி தான் நான் …!
காதல் என்பது உணர்வு …!
வலி என்பது நினைவு…!
வாழ்க்கை என்பது அதில் கனவு …!
பாசம் என்பது விலையற்ற மதிப்பு …!
என்னை அதிகம் சந்தோசப்படுத்தியதும் நீ தான் …
அதிகமாக கண்ணீர் சிந்த வைத்ததும் நீ தான்…
உன்னை எதிர்பார்த்து கொண்டே நானும் …
என் கண்ணீருடன் என் அன்பும் காத்திருப்போம் …என்றும் உனக்காக …!
அன்பை யாருக்கும் காட்டி விடாதே அது உனக்கு வலியை தந்து விடும் …!
உள்ளதை யாருக்கும் கொடுத்து விடாதே அது உன்னை ஊமை ஆங்கி விடும் …!
இதில் கொடூரமானது உள்ளம் மட்டும் தான் …!
எதையும் மறைக்கவும் முடியாமல் வெளியில் சொல்லவும் முடியாமல் உயிரோடு கொன்று விடும் …!
உன் தோள் சாயும் அந்த ஒரு நிமிடம் போதும் உன்னுடன் பல ஜென்மம் வாழ்ந்த சந்தோசத்துடன் இறந்து போக கூட தயாராக இருப்பேன் சந்தோசத்துடன் …!
கனவு கவிதைகள் | புது காதல் வலி மற்றும் காத்திருப்பு கவிதை
உன் கனவுகளை யாருக்கும் சொல்லி விடாதே அதை உணராத சிலர் பிறகு வலியையும் வேதனையையும் தான் தருவார்கள் ..உனக்கு மகிழ்ச்சியை அல்ல …
சொன்ன சொல்லை மாற்றி விடலாம் அந்த சொல்லினால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட வலியை … என்ன செய்தாலும் யாராலும் மாற்ற முடியாது அவ்வளவு வலிமை ஆனது …
உறவுகளை யாருக்கும் விட்டுக்கொடுக்காதே விட்டுக்கொடுத்தால் அது உன்னை அனாதை ஆக்கி விடும் … உணர்வுகளை யாருக்கும் கடன் கொடுக்காதே அது உன்னை உணர்ச்சி இழக்க செய்து விடும்…!
கனவுகள் என்பது கனவாக மட்டும் இருக்க கூடாது நினைவாகவும் இருக்க வேண்டும் நம் உயிர் உடலில் இருக்கும் போதும் இழந்த போதும் …
நீ தந்த வலி என் உயிருக்கு மட்டும் அல்ல…என்னுள் இருக்கும் உனக்கும் தான் அந்த வலியை நீ உணரும் நேரத்தில் நான் உன்னை விட்டு வெகுதூரம் சென்று இருப்பேன்… அப்போது புரியும் நீ தந்த வலியின் அளவு எவ்வளவு கொடூரமானது என்று… அப்போது கூட உன் அருகில் நான் இருப்பேன்… உயிரோடு அல்ல…மண்ணோடு புதைந்து விட்ட என் உடலோடும்…உன்னுடைய நியாபகத்தோடும் …
மாயை என்பது கனவு… வாழ்க்கை என்பது நாடகம் …அன்பு என்பது உள்ளம் … மனிதர்கள் என்பது பொம்மை …இதுவே அனுபவம்…
என் கனவு பலித்தால் அவன் கழுத்தில் நான் மாலை சூடுவேன்… வாழ்வதற்காக இல்லையெனில் என் கழுத்தில் அவன் மாலை சூடுவான் வாழ்விற்கு அல்ல என் மரணத்திற்கு…
என்ன முடியாத நட்சத்திரத்தை போல்..
அளக்க முடியாத பூமியை போல்…
முழுவதும் பார்க்க முடியாத கடலை போல்…
அளவற்ற உன் மீதான என் காதல் உண்மையானது …
கல்லூரி நாட்கள் என்பது ஒரு மழை போன்றது அது வருவதும் தெரியாது மறைவதும் தெரியாது அது போலவே நமது அழகான கல்லூரி நாட்களும், நாம் அனைவரும் இணைவதும் தெரியாது பிரிவதும் தெரியாது. மழை வருவதால் ஏற்படும் சந்தோசம் நாம் அனைவரும் இணைந்து இருக்கும்போது ஏற்படும் சந்தோசத்தை சுமந்த நினைவுகள் நிறைந்தது. அதனால் நட்புக்கும் மழைக்கும் ஒரு இன்றியமையாத ஒற்றுமை உள்ளது.
உங்களுக்கான பிற பயனுள்ள பதிவுகள் இதோ …
மனம் கவரும் தமிழ் மழை கவிதைகள் | மழை ஹைக்கூ கவிதை(Opens in a new browser tab)
சிறந்த தமிழ் அன்பு கவிதைகள் மற்றும் படங்கள்(Opens in a new browser tab)
நட்பு கவிதை – நண்பர்கள் கவிதை(Opens in a new browser tab)
சிறந்த 31 தமிழ் பீலிங் கவிதைகள் (Tamil Feeling Kavithaigal)(Opens in a new browser tab)
தமிழ் காதல் தோல்வி கவிதை படங்கள் | சோக வரிகள்(Opens in a new browser tab)
தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள்(Opens in a new browser tab)