வாழ்க்கையில் சந்தோஷமான விஷயங்களில் ஒன்று மழையில் நனைவது. அதிலும் இயற்கை அன்னையின் பரிசான இந்த மழையை பற்றி கவிதைகளை பதிவிடும் போது இன்னும் கூடுதல் சந்தோசம் தான் எனக்கு. நீங்களும் இந்த பதிவில் உள்ள கவிதை மழையில் நனைய தயாராகுங்கள் 🙂
இனிய எழில்மிகு இயற்கை மழை கவிதைகள்
தூறல் எனும் சாரல் என்னை ஆட்கொள்ளும் போது நாணம் என்னும் வெட்கம் என்னுள் இருந்து விலகி எங்கேயோ தான் சென்று விடுகிறது. பிறகு என்ன? மழைத்துளிகளின் கீர்த்தனைகளில் நேற்று பிறந்த குழந்தை போலவே தவழ்ந்து வந்து தரம் புரளுகிறேன்.
வானம் மனம் குளிர்ந்து தன் நேசமான உறவான பூமிக்கு பரிசாக அளிக்கும் அதிசய விந்தையே “மழை”.
மழையே நீ என்னுள் வந்து ஊடுருவி என்னை நனைப்பது ஒருபுறம் என்றால் உன்னால் நான் கவிதை என்னும் தமிழ் வார்த்தைகளில் மூழ்கி திளைத்து மகிழ்ந்து நனைவது மறுபுறம்.
மாலை மங்கும் நேரத்தில் மேகத்தின் கரு விழிகள் இந்த பூமியை நோக்கி வட்டமிட சீரிய காற்றுடன் கூடவே ஒய்யாரமாக சப்தம் எழுப்பும் இடி மின்னல்களின் இடையே விண்ணை பிளந்து மண்ணிற்கு உதயம் ஆகும் எங்கள் காக்கும் தெய்வம் மழைக்கு கோடான கோடி நன்றிகள்.
இறைவனை நேரில் காண முடியவில்லையே என்று கலங்கும் கண்களுக்கு கண்ணீரை துடைக்க அந்த இறைவனால் அனுப்பப்பட்ட தேவ தூதன் மழை.
மழை மட்டுமே எண்ணின் கடந்த காலத்தின் நினைவலைகள். நிகழ் காலத்தின் ஆறுதல் மற்றும் என் எதிர் காலத்தின் நிஜம்.
மழையே உன்னில் என்னை இழந்து உன்னுடன் நான் ஐக்கியம் ஆகும்போது எனக்கு அறுபது வயது ஆனாலும் கூட நான் இருபது வயது தான்.
நான் தன்னந்தனியே நடந்து போன பாதைகளையும் அழகாக்கி விட்டது மிதமான காற்றுடன் தவந்து வந்து என் இரு கனை தனைகளில் தூரிய மழை சாரல்கள்.
என் காதலியை நினைத்து நான் சிந்தும் கண்ணீரை போல் தான் என்னவோ பூமியின் மீது தான் கொண்ட காதலால் தனது நீர் துளிகளை கண்ணீராக மண்ணில் பொழிகிறதோ இந்த மழை?
மேலும் படிக்க பயனுள்ள பதிவுகள்:-