நமது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல இருக்கலாம். அனைவர்க்கும் இங்கு பிரச்சனைகள் உண்டு. அதற்காக அதையே நினைத்து கொண்டு வருத்தப்பட்டு கொண்டிருந்தால் எதுவும் ஆக போவது இல்லையே. எனவே எதை செய்தாலும் சிந்தித்து ஒருமுறைக்கு பல முறை அனைவரிடம் கேட்டு சிறந்த முடிவை நீங்கள் எடுங்கள். இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் சிறந்த அறிவுரை வரிகள், உங்களை ஊக்குவிக்கும் தத்துவ கவிதைகள் மற்றும் தன்னம்பிக்கை வரிகளை கொடுத்துள்ளேன். அனைவரும் படித்து பகிர்ந்து பயன் பெறுங்கள்.
தமிழ் வாழ்க்கை தத்துவம் கவிதை | தன்னம்பிக்கை கவிதை வரிகள்
பிரச்னை என்பது தொலைநோக்கி போலவே நீ பார்க்கும் பார்வையில் தான் எல்லாம் அடங்கி இருக்கிறது அதை பெரிதாக நினைத்தால் பெரிதாகத்தான் தோன்றும் சிறியதாக நினைத்தாள் பிரச்னை உனக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.
பணம், பொருள் என இந்த இரண்டுமே வாழ்க்கையில் மனிதனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் குணத்தையே மாற்றும் வல்லமை படைத்தது.
உணர்ச்சிகள் என்ற ஒன்றை உனக்கு அடக்க தெரிந்தால் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்ட நஷ்டங்களாலும் உன்னை ஒன்றும் செய்து விட முடியாது.
இன்பமே கடைசி வரைக்கும் நிலைக்க வேண்டுமென்று எண்ணாதே அனைத்தும் மாறும் நீ கண்ணிமைக்கும் நேரத்தில். இன்பம் என்றுமே என்னை விட்டு நீங்க கூடாதென எண்ணி வாழ்வது கூட மனதில் இன்பம் நம்மை விட்டு நீங்கி விடுமோ என்று நீ நினைக்கும் ஒரு துன்பம் தான்.
நேர்மையான குணம் கொண்டவர்களுக்கு என்றுமே இந்த உலகில் மதிப்பு இல்லை தான் ஆனால் நிற்சயமாக உன் நல்ல மனதுக்காக அந்த இறைவனின் பரிசு கட்டாயம் கிடைக்கும்.
பகையை வளர்க்காமல் எல்லோரிடமும் பொறுத்து போகிறவர்களுக்கே இங்கு கோமாளி, முட்டாள், பிழைக்க தெரியாதவன் என்ற பெயர் கிடைக்கிறது.
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற சிந்தனை உனக்குள் வந்து விட்டாலே பொறுப்பு என்பது தன்னாலே அமைந்து விடுகிறது.
அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால் உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது உனக்கு ஒரு கிடைக்காத பொக்கிஷமே.
லட்சியம் என்ற ஒன்று எதுவும் இல்லாதவன் இந்த உலகை ஜெயிக்க தகுதி இல்லாதவன்.
பட்டை தீட்ட தீட்ட தானே தங்கம் உருவாகும் அதுபோலவே வாழ்க்கையின் இன்னல்களை கடந்து வந்தால் மட்டுமே உன் சாதனை இந்த உலகில் நிஜமாகும்.
சிறந்த அறிவுரை வரிகள் | தமிழ் தத்துவங்கள்
வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதே உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்.
பூத்து குலுங்கினாலே பறித்து விடுவார்கள் என்று மலர் ஒரு நாளும் பூக்காமல் இருந்தது இல்லை.
மனிதர்கள் நாம் தான் இங்கு பலபேருக்காக பல நேரங்களில் பச்சோந்தி வேஷம் போட்டு கொண்டு இருக்கிறோம்.
வாழ்க்கை தேடல்களுக்கான சிறந்த விடை உன் அனுபவங்களால் மட்டுமே உனக்கு கிடைக்க பெறும் ஆதலால் எதையும் நேருக்கு நேராக சந்தித்து விட்டு வெற்றி பெற்றால் ஜெயமாகட்டும் தோல்வியுற்றால் ஒரு சிறந்த அனுபவமாய் அமையட்டும்.
நேரம் வரட்டும் செய்யலாம் என்று காத்திருப்பதும் காலம் வந்தால் எல்லாம் தன்னாலே கிடைக்கப்பெறும் என்ற மூட நம்பிக்கையோடு கனவு காண்பதும் ஒருபோதுமே உன் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல.
அதிஷ்டம் கூட சில சமயம் கிடைக்கும் என்று நினைப்பவன் கையிலே சென்றடையும் எனவே எதை செய்தாலும் அதன் மீது பற்றாக இரு… துணிந்து நிமிர்ந்து போராடு…
ஒருவரை கண்டு நன்றாக வாழ்ந்தால் அவர்கள் போல் தான் வாழ வேண்டும் என்று தானே நினைகிறார்கள் தவிர எவரும் அவர்களை போலவே நாமும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை.
வாழ்க்கை என்பது எப்போதும் உறவுகளிடம் பூ போல அழகானதாக அமைந்து விட்டால் சண்டை, சச்சரவுகள் எல்லாம் பனி போல விலகி விடும்.
நீ ஒருவருக்கு ஆயிரம் விதத்தில் உதவியிருக்கலாம் ஆனால் ஒரு முறை அவர் உன்னிடம் குறை கண்டிருப்பின் அந்த கணத்தில் நீ செய்த உதவிகள் அனைத்தையும் மறந்து போவார்கள்… இது தான் உலகம்.
தவறு உன்னுடையதாக இருந்தால் அந்த விஷயத்தை திருத்தி அமைக்கும் சிறந்த ஆசானாகவும் நீ தான் திகழ்வாய்.
பிறரை பற்றி விமர்சிக்கும் முன்னர் நாம் அவர் இடத்தில் இருந்திருந்தால் சரியாக நடந்து கொண்டிருப்போமோ என்று யோசித்து பாருங்கள் அதன் பின்னர் உங்கள் மனம் சொல்லும் பிறரை பற்றி விமர்சிக்க உமக்கு தகுதி இருக்கிறதா என்று.
Comments
அனைத்தும் முத்துகள் போன்ற வரிகள்.வாழ்கைக்கு ஏற்ற வையிர வரிகள் இது போன்ற தகவல்கள் அனைத்து தமிழர்க்கும் தேவை.எனது மின் அஞ்சலுக்கு இது போன்ற தகவல்களை அனுப்பவும்