அழகான புத்தம் புது தமிழ் காதல் கவிதை வரிகள் மற்றும் படங்கள்
பார்வை என்ற ஒன்றை மட்டும் இறைவன் கொடுத்திருக்கா விட்டால் இந்த என் அழகிய காதல் தேவதையை அறியாமலே போயிருப்பேனோ என்னவோ…!
இதயம் என்ற கருவறையில் காதல் என்னும் தீபம் இருக்கும் வரை அனைத்து சுமைகளும் எனக்கு என்றென்றும் சுகமானது தான்…
சில சமயம் அழகிய தருணங்கள் எதிர்பார்த்து வருவது இல்லை …காதல் என்பதும் அப்படிப்பட்டது தான் என்றுமே எதிர்பார்ப்புகள் நிறைந்து எதிர்பாராமல் நிகழ்வது..
என் மனதின் வானிலையில் மாற்றம் கண்டேன் இன்று உன்னை பார்த்த அந்த சில நொடிகளிலேயே…
மீண்டும் மீண்டும் நாம் இருவரும் மாறி மாறி தொலைவோம் தவிப்புகளை தொடர்கதையாக்குவோம் நம் பார்வைகளில் நேசம் என்ற ஒன்றை வசியமாக்குவோம் ஆனால் இதயம் என்ற ஒன்றில் மட்டும் நம் காதலை என்றுமே காலத்தால் அழியாதவாறு ஒருநிலைப்படுத்தி என்றுமே நீங்காத வண்ணம் மனதால் ஒன்றிணைவோம்…!
புதியதாய் பூக்கும் பூக்கள் போல தான் காதல் ….காலங்கள் போனாலும் காதலர்கள் அழிந்தாலும் காதல் என்றுமே புதிதாய் மலர்ந்து கொண்டே தான் இருக்கும் …!
இந்த உலகையும் என் வசமாக்குவேன் கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கி கொண்டு இஷ்டமாய் செய்வேன் நீ மட்டும் என் வழித்துணையாய் எக்காலமும் என்னருகில் நீ இருந்தாலே…!
நீ இருந்தால் என் கண்கள் உன்னை ரசிக்கும் நீ இல்லாமல் போனால் என் கண்கள் உன்னையே தேடும்…
என் அனைத்து நிஜங்களிலும் உன் நினைவுகள் கலந்து இருப்பதால் பொய்யாக கூட உன்னை நினைக்காமல் இருக்க முடியாது மெய்யான என் அன்பு உன்னை என்றும் மறக்காது …!
அன்பே என் கனவு என்ற ஒன்றை ஆளும் தகுதி வாய்ந்த கண்ணாளன் என்றுமே நீ மட்டுமே …!
காதல் ஆசைகளுக்கு வேலி போட முடியாது காதல் கனவுகளுக்கு முடிவு என்பது கிடையாது காதல் உணர்ச்சிகள் நெஞ்சம் உள்ளவரை மறக்காது…
ஆம்! இந்த காதலில் மட்டும் வயது ஒரு தடை இல்லை நிறங்கள் அறிவது இல்லை ஜாதகம் பார்ப்பது இல்லை காசு பணம் இங்கு முக்கியம் இல்லை…
இனிய தமிழ் ஸ்வீட் காதல் கவிதை வரிகள் | லவ் கவிதை படங்கள்
என்றும் பிரியமுள்ள இரு இதயங்களில் வாழும் காதலின் சுவையை பருக பருக இனிக்கும் நினைக்க நினைக்க மனம் தித்திக்கும் …
முத்தங்கள் நிறைந்தது காமம்… உயிர் மூச்சிலே கலந்தது காதல்…தேவை முடிந்ததும் காமம் கலையலாம் …ஆனால் காதல் என்றுமே காலாவதி ஆகாது…
நீ மட்டுமே எந்தன் வாழ்க்கையின் நிஜமான இனிமை உன்னை விட்டு செல்லும் போது துணையாய் என்னுடன் நிற்கிறது இந்த காதல் தனிமை…
இந்த உலகில் எனக்கு தெரிந்த விலை மதிக்க முடியாத ஒன்று தான் என்னவளின் புன்னகை…!
காதலில் நீ பெரியது நான் பெரியது என்று பார்க்கும் போதிலிருந்தே உறவில் பிளவு என்பது உருவாகி விடுகின்றது …
என் கண்களில் உன் முகம் உன் இதயத்தில் என் உயிர். என்றுமே இருவரது நினைவுகளிலும் காலம் பூராவும் நிலைத்து நிற்கும் நம் நேசம்…
உன் பாசம் எனக்கானது என்றால் என் காதல் என்றுமே உனக்காகவே காத்து நிற்கும் காலம் முழுவதும் உன்னுடன் வாழ …!
பெண்ணே உன்னை நான் நிலவுடன் ஓப்பிடுவதால் தானோ என்னவோ நீயும் நிலவை போல மௌனமாய் இருந்து என்னை கொல்கிறாயோ? – என்றும் உன் வார்த்தைகளில் நம் காதல் எதிர்பார்ப்புகளுடன் உன் ஆவலன் …
பிற பயனுள்ள பதிவுகள் …
காதல் உணர்வு தமிழ் கவிதை வரிகள்| Tamil Love Feeling Images(Opens in a new browser tab)
உற்சாகமூட்டும் தன்னம்பிக்கை கவிதை வரிகள் படங்கள்(Opens in a new browser tab)
தமிழ் வாழ்க்கை தத்துவம் கவிதை | நல்ல அறிவுரை வரிகள்(Opens in a new browser tab)
அன்பான கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதைகள்(Opens in a new browser tab)
தமிழ் நிலா (நிலவு) கவிதை வரிகள் படங்கள்(Opens in a new browser tab)