தாய்மை ஒரு வரம்- என் கண்ணே
என் தாய் என்னை கொஞ்சும்போது – உணராத ஒன்று
புத்தாடை வாங்கும்போது – உணராத ஒன்று
என் தந்தை என்னை தோளில் சுமக்கும்போது – உணராத ஒன்று
பரிசு வாங்கும்போது – உணராத ஒன்று
திருமணமாகும்போது – உணராத ஒன்று
உன் ஒற்றை வார்த்தையில் உணர்ந்தேன்
“தாய்மை ஒரு வரம் ” என்று…
“அம்மா ” என அழைத்த போது ….